(Reading time: 15 - 29 minutes)

னந்தக்குமாரா. அவன் கில்லாடிப்பா. அவன்கிட்ட ஒரு வேலையை கொடுத்தோம்னா அது நடந்துடும். எல்லா இடத்திலேயும் பூந்து வந்துடுவான். எல்லா இடத்திலேயும் அவனுக்கு தெரிஞ்சவங்கன்னு யாராவது இருக்காங்கப்பா.” என்று சொந்தங்கள் தூக்கிக்கொண்டாடும், என்னை

“ஆனந்தக்குமாரா. அவர் ரொம்ப கெடுபிடியான ஆளாச்சே. அவர் வேலையில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். தப்பு செஞ்சா யாரு என்னன்னு எல்லாம் பார்க்கமாட்டாரு.” என்று சக அலுவலகர்கள் பார்த்து மிரளும், என்னை

“உங்களுக்கு ஒன்னுமே தெரியாது” என்று அலட்சியப்படுத்தும் ஒரே ஜீவன் என் தர்மபத்தினிதான்.

எந்த நேரத்தில் எனக்கு ஆனந்தக்குமார்னு பேர் வச்சாங்களோ? இப்ப எல்லாம் என் பேரில் மட்டும்தான் ஆனந்தம் இருக்கு.

குழந்தை பிறந்தா என்னங்க பண்ணுவாங்க? அம்மா வீட்டில் கொண்டு போய் விடுவாங்க. ஒரு மூனு மாசத்திலோ ஆறு மாசத்திலோ வீட்டுக்கு அழைச்சுட்டுப் போவாங்க. அதேதாங்க நானும் செஞ்சேன்.

“பெண் குழந்தை பிறந்துச்சுன்னா அவ்வளவு அலட்சியமா? நீங்க படிச்சிருக்கீங்கதானே? காரணம் நான் மட்டுமா? அப்படியே அப்பா வீட்டில் தள்ளி விட்டுட்டு போயிட்டீங்க.”

எனக்கு பெண் குழந்தை பிறந்ததில் எந்த வருத்தமும் இல்லீங்க. ஆக்சுவலா முதல் குழந்தை பெண்ணுன்னா மகாலட்சுமியே பிறந்துட்டான்னு நினைக்கிற ஜனங்களில் நானும் ஒருவன்.

குழந்தை கொஞ்சம் வளர்ந்தபிறகு தூக்கி கொஞ்ச ஆரம்பித்தேன். அதுவும் பிரச்சினையாயிற்று.

“என்னமோ அன்னிக்கு வேண்டா வெறுப்பா கொண்டு போய் எங்கப்பா வீட்டில் தள்ளிவிட்டீங்க. குழந்தையை தொட்டுக்கூட பார்க்கலை. இப்ப குழந்தை உங்க மாதிரி இருக்குன்னு சொன்ன உடனே பாசம் பொத்துக்கிட்டு வருதா?”

குழந்தை என்னை மாதிரி இருக்குன்னு யாரு சொன்னா? சத்தியமா எனக்கு தெரியாதுங்க.

“சுருதி. குழந்தையை தூக்கி எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லையா? தூக்கினா கீழே போட்டுடுவோமேன்னு பயம். இப்ப குழந்தை வளர்ந்துட்டா இல்லையா. அதான் தூக்கறேன். ஹி..ஹி…” அவளிடம் வழிந்தேன்.

சற்றுநேரம் என்னையே உற்றுப்பார்த்தாள்.

ஐயோ! என்ன உள்குத்து வைத்திருக்காளோ தெரியலையே.

“அப்ப கல்யாணம் பண்ணும்போது எக்ஸ்பீரியன்ஸோடதான் பண்ணீங்களா?” கேட்டுவிட்டு என் முகத்தை கூர்ந்து பார்த்தாளே.

நான் ஆடிப்போய்விட்டேன். உள்ளே அபாய சங்கு ஒலித்தது.

“சுருதி.” கோபமாக நினைத்து ஆரம்பித்த வார்த்தைகள் சுதி இறங்கித்தான் வெளிவந்தன. பேசிவிட்டு அவள் பாட்டில் போய்விட்டாள்.

ப்ப புரியுதாங்க. இனியாவது நான் சொல்றதை காது கொடுத்து கேட்பீங்களா?

அட இருங்க. இவ்வளவு நேரம் என்ன பண்ணிக்கிட்டிருந்தோம்னு நீங்க பல்லைக் கடிப்பது புரியுது. மனுசனுக்கு மனுசன் உதவி. இதைக்கூட செய்ய மாட்டீங்களா?

இரண்டாவது பெண் குழந்தை பிறந்த உடன் முன்னெச்சரிக்கையாக ஈயென்று இளித்துவைத்தேன். இப்போதும் முறைத்துப் பார்த்தாள்.

“என்ன குழந்தைன்னு நான் பிளான் பண்ணியா பெத்தேன். என்னமோ ஆண் வாரிசு இல்லாம உங்க வம்சமே அழிஞ்சு போயிட்ட மாதிரி உங்க அண்ணியும் அக்காவும் என்னை முறைக்கிறாங்க. முகமே கருத்துப் போச்சு. அப்படியே ராஜ பரம்பரை. சொத்தை ஆள ஆண் வாரிசு இல்லையேன்னு வருத்தப்படறாங்க. ஆனானப்பட்ட பெரிய பெரிய ராஜாக்கள் குடும்பம் எல்லாம் போன இடம் தெரியலை.” கோபத்தில் பொரிந்து தள்ளிவிட்டாள்.

இது எப்ப நடந்தது?

அவளே தொடர்ந்து பேசும்போது எனக்கு தெரிந்தது.

பிரசவ வார்டுக்குள் தலையை நீட்டி பார்த்தனராம். அப்போது முகம் கருத்திருந்ததாம். அப்போது அங்கிருந்த நர்ஸ் “பெண் குழந்தை பிறந்தா நாம என்ன பண்றது? நம்மகிட்ட கடுப்படிக்கிறாங்க.” என்று கோபப்பட்டாளாம்.

அவங்க பேசினதுக்கு நான் என்ன பண்ணுவேன்? நேரிடையாக அவர்களிமே கேட்கலாமே? அதை செய்யமாட்டாள்.

அவர்களிடம் பேசும் போது மட்டும் ‘அண்ணி’,  ‘அக்கா’ என்று குழைந்து பேசுவாள்.

இவள் குணம் தெரியாமல் என் அக்கா அவளுக்கு அட்வைஸ் செய்கிறேன் பேர்வழி என்று அவளது கோபத்தை கிளறிவிட்டுவிடுவாள். ஆனாலும் முகம் மாறாமல் உட்கார்ந்திருப்பாள்.

மற்றவர்களுக்கு அவளது மாற்றம் தெரியாது. ஆனால் எனக்குதான் அத்துப்படியாச்சே? என்றாவது ஒரு நாள் என் அக்கா எல்லை மீறும்போது தனது உண்மையான அவதாரத்தை காட்டுவாள்.

இன்று வரை அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. உனக்கு ஏன் இதில் அவ்வளவு ஆர்வம்னு நீங்க கேக்கறீங்க.

எல்லாம் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் கொள்கையை பின்பற்றத்தான். பின்னே இருக்காதா? அதிகமா எங்களுக்குள் சண்டை வர காரணமே அவதானே.

கல்யாணம் ஆனதில் இருந்து சரி. சாப்பிட கூப்பிடுவாள். உடனே போனால்தான் சாப்பாடு போடுவாள். வேண்டாம் என்று சொன்னாலும் வலியுறுத்தி கூப்பிடமாட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.