(Reading time: 15 - 29 minutes)

ப்போது எனக்குள் இருந்த முதலாளி குணம் மேலெழுந்தது. சராமாரியாக பேசிவிட்டேன். அவள் அமைதியாகிவிட்டாள். எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு போய்விட்டாள்.

அடடா! இத்தனை நாள் எனக்கு தெரியாம போச்சே.

ராட்சஸி. ராட்சஸி. கடைசியில் என்னையே இப்படி கோபப்படும்படி ஆக்கிட்டாளே.

அதன் பிறகு அவள் என்னிடம் பேசவில்லை.

நாளையில் இருந்து நான் ஒரு முதலாளி.

ன்னங்க. நான்தான் ஆனந்தக்குமார். கொஞ்சம் நில்லுங்களேன். உங்களோட பேசனும்.

தயவுசெய்து உனக்கு வேற வேலை இல்லியான்னு கோபப்படாதீங்க.

சாகப்போற ஒருத்தனோட கடைசி ஆசையை நிறைவேத்தி வைக்கிறது ஒவ்வொருத்தருக்கும் கடமைதானே?

என்னங்க பார்க்கறீங்க? ஆமாம்! நான் சாகப் போறேன்.

நீங்க நினைக்கிறது சரிதான்.

என் மனைவி நினைத்தது போல்தான் நீங்களும் நினைக்கறீங்க. அன்னிக்கு என்னால் அவளை புரிஞ்சுக்க முடியலை. பெரிசா அடிபட்டாதான் புரியுது.

என் நண்பன்… அடச்சே அவனை நண்பன்னு சொல்லிக்கவே வெட்கமாயிருக்கு. அந்த முருகேஷ் என்னை ஏமாத்திட்டான். எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு போயிட்டான்.

என் மனைவி மத்தவங்களை எப்போதுமே சரியா எடை போட்டுடுவான்னு பட்டபிறகுதான் புத்தி வருது.

நீ மத்தவங்க மனசுக்குள்ள பூந்து பார்த்தியான்னு சில நேரங்களில் கோபமாக கேட்கும்போது, அவ அடிக்கடி சொல்வா

“பொண்ணுங்க எப்பவுமே ரொம்ப சார்ப். மனைவியான உடனே அவள் ஸ்மார்ட்னெஸ் அதிகமாயிடுது. குழந்தைங்க பிறந்த உடனே அதுவும் பெண் குழந்தைகள் பிறந்துட்டா அவங்க அறிவு அதிகமா வேலை செய்ய ஆரம்பிச்சுடும்னு சொல்வா? ஆனால் எனக்கு அந்தளவுக்கு மூளை மழுங்கியிருந்திருக்கு.”

சாகப்போறதுக்கு முன்னாடி எனக்கு முக்கியமா ஒரு வேலை இருக்கு. என் சுருதிகிட்ட மன்னிப்பு கேட்கனும்.

ஏன்னா அவளோட எதிர்காலம், எங்க பிள்ளைங்களோட எதிர்காலம் எல்லாத்தையும் என் முட்டாள்தனத்தால் கருக்கி விட்டேன்.

அவள் என்னை புரிந்துகொண்ட அளவுக்கு அவளை நான் புரிந்துகொள்ளவில்லை. இதுவரை அவளை நான் புரிஞ்சுக்க முயற்சி செஞ்சதேயில்லை. இதை அவள் குறையாகவும் சொல்லியிருக்கிறாள். அப்போது புரியவில்லை. எதற்காக செய்தாள் என்று சிந்திக்கும்போது அவளின் செயல்களுக்கான விளக்கம் இப்போது புரிகிறது.

நான் செத்த பிறகாவது அவள் சந்தோசமாயிருக்கட்டும்.

என் செல்லில் அத்தனை மிஸ்டு கால். அவள் அழைக்கத்தான் செய்தாள். நான் எடுக்காததால் மிஸ்ஸாகிவிட்டது.

கடைசியில் விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது. அவள் என்ன கோபப்பட்டாலும் ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்.

வீட்டிற்குள் போனால் குழந்தைகள் ஓடிவந்து கட்டிக்கொண்டனர். இன்னும் இவர்களுடன் எவ்வளவு நேரம் இருக்கப்போகிறேன். அதுவரைக்கும் கொஞ்சி மகிழ்ந்துகொள்ள வேண்டியதுதான்.

சுருதி சாப்பாடு எடுத்து வைக்க அமைதியாக ருசித்து சாப்பிட்டேன். என் கடைசி சாப்பாடு.

குழந்தைகள் உறங்கிவிட்டனர்.

அவள் நேராக என்னிடம் வந்தாள்.

“ஏங்க இப்படி பண்ணீங்க?”

“என்னை மன்னிச்சிடு சுருதி. நீ அவ்வளவு சொல்லியும் நான் கேட்கலை. அந்த முருகேஷ் என்னை ஏமாத்திட்டான்.”

“நான் அதை கேட்கலை.”

வேறென்ன கேட்க வருகிறாள். புரியாமல் அவளை பார்த்தேன்.

“என்னையும் குழந்தைகளையும் விட்டுட்டு போக எப்படிங்க முடிவெடுத்தீங்க?”

எனது மிரண்ட விழியே அவள் நினைத்தது சரி என்று அவளுக்கு சொல்லாமல் சொல்லியது.

“வேறென்ன செய்ய? உங்க எதிர்காலத்தையே பாழாக்கிட்டேனே.”

“நீங்க இல்லாம எங்களுக்கு ஏதுங்க எதிர்காலம்?”

நான் மலங்க மலங்க விழித்தேன்.

“இழந்தது எல்லாம் இன்னிக்கோட போச்சுங்க. நாளைன்னு ஒன்னு இருக்கு. நம்பிக்கையோட இருங்க. இரண்டு பேருமே படிச்சிருக்கோம். வேலை பார்க்கலாம். இல்ல சொந்த தொழில்தான் பண்ணனும்னா அரசாங்கத்துலே இருந்து உதவித்தொகை வாங்கி சின்னதா ஆரம்பிப்போம். முழுமனசோட உழைச்சா பெரிய லெவல்ல வரலாம். நல்லவேளை நீங்க வெளியில் கடன் வாங்கலை. நீங்க கொஞ்சம் வெகுளிங்க. அதை மத்தவங்க தங்களுக்கு சாதகமாக்கிறாங்கன்னுதான் நான் உங்ககிட்ட கோபப்படுவேன். நீங்க என்னை புரிஞ்சுக்கலை. என்னோட அப்பத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களும் என் மேல் உயிரா இருப்பாங்க. ஆனால் அவங்க தப்பு செஞ்சா நான்தான் அவங்களை திட்டுவேன். வேற யாராவது திட்டிடுவாங்களேன்னு நான் முந்திக்குவேன். ஏன்னா அவங்களை வேற யாராவது திட்டினா என்னால் தாங்க முடியாதுங்க. அதே மாதிரிதான் உங்களையும் யார் திட்டினாலும் என்னால் தாங்க முடியாது. உங்க மேல் நான் உயிரையே வச்சிருக்கேன்ங்க.”

அவள் பேசப் பேச என்னுள் என்னவோ முகிழ்த்தது.

“சுருதீதீ…” கதறலுடன் ஓடிப்போய் அவள் மார்பில் முகம் புதைத்துக்கொண்டேன். என்னவோ ஒரு பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிட்ட நிம்மதி எனக்குள். இனி யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது.

என் தலையில் ஈரம் தெரிந்தது. அவளும் அழுகிறாள். இது என்னை உணர்ந்துகொண்டதால் வந்த அழுகை.

அவளால் முதன் முதலில் இல்லற சுகம் அனுபவித்த போது இல்லாத சந்தோசம் எனக்குள்.

அன்று வெறும் உடல்கள் சங்கமித்தன. இன்று எங்கள் மனங்கள் கலந்துவிட்டன.

இப்போது அவள் எனக்கு ராட்சசியாக தெரியவில்லை.

அவள் என் வாழ்வை ரட்சிக்க வந்த ரட்சகி!!!

இவ்வளவு நேரம் பொறுமையாக ஆனந்தக்குமாரின் அறுவையை கேட்ட உங்களுக்கு எனது நன்றிகள்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!!!

This is entry #34 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.