(Reading time: 13 - 25 minutes)

 ரி சரி அவ முகத்தைப் பார்த்துக் கிட்டே அவளைக் கோபப் படுத்துறதுக்கு பதிலா முக நூலையாவது பார்த்து வைப்போம்னு ஃபேஸ்புக்கை ஸ்க்ரோல் செஞ்சா , அது அதுக்கும் மேல என்னவோ இவன் வீட்டுல நடக்கிறத பத்திச் சொல்லுறமாதிரி,

"behind every angry woman stands a man who has no idea what he did wrong"

னு காட்டுது. ஏற்கெனவே 317 லைக்ஸாம், அதைப் பார்த்துட்டு லைக் பட்டனை நொறுக்கித் தள்ளலாமான்னு ஒரு நிமிஷம் கோபம் வந்திட்டு. போங்கடா உங்க பாட்டுக்கு எதையாவது எழுதிடுறீங்க...........உங்களுக்கு என் பிரச்சினை எப்படித் தெரியப் போகுதுன்னு மனசுக்குள்ளே புலம்பிட்டு ஃபேஸ்புக்கை மூடி வைச்சான்.

 கொஞ்சம் டென்ஷனா இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு பக்கம் இனிமேல் இவளை அடிக்கடி கோபப் படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் எழுகிறது. "என் செல்ல மாலுக்குட்டி , கோபத்தில கூட அழகா இருக்கடி நீ" என்று மனதிற்குள் கொஞ்சிக் கொண்டான்.

 அவளுக்கோ எட்ட நின்று ஒன்றுமே நிகழாதது போல தன்னை ரசித்து ரசித்துப் பார்க்கும் அவனின் மூக்கில் ஒரு குத்து விடலாமா? என்ற எண்ணம் இன்ஸ்டண்ட் காஃஃபி போல இன்ஸ்டண்டாக தோன்றி மறைகிறது.

 "வேணாம், அந்த மூக்கு இல்லாட்டா அவனைப் பார்க்கவே சகிக்காது. பிழைச்சுப் போகட்டும் ". என்று ஒரு மனதுச் சொல்ல, "கிட்ட வந்து சமாதானப் படுத்துறானாப் பாரு" என்று இன்னொரு மனசு கோபத்தில் எகிறுகிறது (ஆக மொத்தம் உனக்கு எத்தனை மனசும்மா..).

 "போடா இந்த தடவை நான் உங்கிட்ட வந்து பேச மாட்டேன் போ, நீயா வந்து பேசினா பேசு".... என யோசிக்கும் போதே "ஐயோ இவங்கிட்ட பேசாம என்னால இருக்க முடியாதே. நான் சொல்றதை கேட்கிறானோ கேட்கலையோ தலையையாவது ஆட்டி வைப்பான். இப்ப அவன் கிட்ட பேசாம இருந்தா நான் யார் கிட்ட பேசறது? ஒழுங்கா மரியாதையா வந்து என்னை சமாதானப் படுத்தலை பாரு உன்னை என்னச் செய்யிறேன்னு".....என்று மனதிற்குள் பேசியது வாய்விட்டு பேசி விட அதையும் ஏதோ அதிசயத்தைப் போல பார்க்கிறவனை என்னச் செய்வது?

 அஜித்துக்கு மனைவியின் இந்த புது ரூபம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக என்னவெல்லாம் நிகழ்ந்தது எப்போதிருந்து அவள் அவனிடம் பேசுவதை நிறுத்தினாள் எனறு மறுபடி ஒருமுறை ஒவ்வொன்றாக ரீவைண்ட் செய்து பார்த்துக் கொண்டிருந்தான். சும்மாவே நமக்கு விஷயங்களை ஞாபகம் வைப்பது கடினம், பேசாம அவகிட்ட போய் சரண்டர் ஆகிடலாமா? என யோசித்தான்.

 இல்லை அது சரிபட்டு வராது , இவள் , 

' நான் எதுக்கு உங்க மேல கோபமா இருந்தேன் சொல்லுங்க?' என்று கேட்டு வைத்தால் ஆபத்து, மறுபடி அதுவே இன்னொரு சண்டைக்கு வழிவகுத்து விடும் என்றெண்ணியவனாக பரிட்சையின் போதே படிச்ச பதிலை சரியா மறந்து வைக்கும் அவனோட ஸ்பெஷல் மூளையைத் தட்டி தட்டி யோசிச்சுப் பார்த்தான்.

 சொல்லப் போனால் கொஞ்ச நாளாக இவன் தான் அவளிடம் வெகுவாக பிகு செய்துக் கொண்டு இருந்தான். அவள் தாங்கிக் கொண்டு இருந்தாள். காரணம் வேறொன்றுமில்லை. அவளுடைய அண்ணனுக்கு திருமணம் திடீரென நிச்சயித்து உடனே நடத்துவதாக இருந்தது.

 குடும்பத்தில் பெரியவரான இவள் பாட்டியின் உடல்நிலை முன்னிட்டு அப்படி ஒரு அவசர ஏற்பாடு. திருமண சேலைகள் வாங்க, முக்கியமான பல வேலைகளைச் செய்ய அவனிடம் அடிக்கடி கெஞ்சி கொஞ்சி அனுமதி வாங்கி விட்டுப் போவாள் அவள்.

 என்னதான் பல வருடங்களாக அந்த அபார்ட்மெண்ட்டில் அவன் தனியாக இருந்திருந்தாலும் திருமணத்திற்கு பின்பு அவள் இல்லாமல் இருக்கும் மணித்துளிகள் அவனுக்கு மிகவும் வெறுமையாக இருக்கும். அதற்காகவே அவளை அம்மா வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் கூட , கூடவே போய் விட்டு தன்னுடன் கூட்டிக் கொண்டு வந்து விடுவான்.

 திருமண வேலைகள் ஆரம்பித்தது முதலே அவள் வீட்டிற்கு வர பெரும்பாலும் இரவாகி விடும். வேளி வேலைகளை முடித்து விட்டு சாப்பிடாமலும் கூட தன் அண்ணனோடு வந்து நிற்கும் அவளைப் பார்த்து கோபப் படத்தோன்றாது.

"பாருங்க மாப்பிள்ளை நம்ம வீட்டுல சாப்பிட்டுட்டு வரச் சொன்னா கேட்கறதில்லை, சாப்பிடாம வந்து நிக்கிறா..”

என்று குறைப் படும் அவள் அண்ணனின் பேச்சைக் கேட்டு எல்லாம் எனக்காகத் தானே" என்றெண்ணி பெருமிதமாக இருக்கும்.ஆனாலும், அவள் அண்ணன் சென்றப் பின் கொஞ்ச நேரம் முகத்தை தூக்கிக் கொண்டு வைத்திருப்பான். மனைவியிடம் கொஞ்சம் அதிகமாக கவனிப்பு கிடைக்கும் என்றால் அதற்கான வாய்ப்பை ஏன் தடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் தான் அதற்கு காரணம்.

 இரண்டு நாள் முன்புதான் அவள் அண்ணன் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து தான் அவளுடைய இந்த கோபம், பேசாமல் இருப்பது எல்லாம் .

அன்று அதற்கு முன்பு என்னவெல்லாம் நடந்தது.? கொசுவர்த்திச் சுருள் சுற்ற ஆரம்பித்தது அவனுடைய மண்டைக்குள்.

 "ஏங்க அண்ணன் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னமே போகணும். அம்மா அப்பா வந்துக் கூப்பிட்டாங்க ஞாபகம் இருக்கில்ல?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.