(Reading time: 13 - 25 minutes)

ங்கே ஏற்கெனவே அடிக்கடி கோபித்துக் கொள்ளும் கணவன் எதற்கும் மறுபடி கோபித்துக் கொள்ளக் கூடாதே என்கிற எண்ணத்தில் அமைதியாக கேட்ட போது புது மாப்பிள்ளை முறுக்கு மாறாமல் ,

"அதெல்லாம் கல்யாணத்தன்னிக்கு காலையில போகலாம்" என்றது...ஞாபகம் வர, அஜித் மண்டைக்குள் அலாரம் அடித்தது.

ஒருவேளை தான் அப்போது சொன்னது தான் அவள் கோபத்துக்கு காரணமோ?

இல்லையே அப்போது கூட எப்படியோ பேசி ஒரு வழியாக என்னைச் சம்மதிக்க வைத்தாளே?

"என்னங்க எப்ப பாரு வேலை , வேலைன்னுட்டு. எனக்கு இருக்கிறது ஒரே ஒரு அண்ணன் , நீங்க என்னடான்னா இப்படிச் சொல்லறீங்களே...... உள்ளூர்ல இருந்துட்டு தினம் வந்துட்டு , வந்துட்டு போயிடுறன்னு எங்க ரிலேடிவ்ஸ் எல்லோரும் என்னை என்னவெல்லாம் சொல்லுறாங்க தெரியுமா?. 

 என எப்படி எப்படியோ பேசி இரண்டு நாட்களுக்கு முன்னதாக அவள் காலையிலேயே சென்று விடுவதாகவும், அவனை அன்றிரவு ஆஃபீஸிலிருந்து திரும்ப வரும்போது வரச் சொல்லி பேசி, மகிழ்ச்சியாகத் தானே அவள் அடுத்த நாள் சென்றாள்.

 சரி அதுக்கப்புறம் என்னவாச்சி?

கொசுவர்த்திச் சுருள் நின்ற இடத்திலிருந்து மறுபடியும் சுழல ஆரம்பித்தது. அதற்கப்புறம் அவன் பிகு செய்த நேரம் சரியில்லையோ என்னமோ? அன்றைக்குப் பார்த்து மிகவும் முக்கியமான வேலை வந்து விட இரவு வீடு திரும்ப வெகு நேரமாகி விட்டது. வழக்கம் போல அவன் மொபைலும் அவனை மிகவும் தொந்தரவு செய்ய போன் செய்ய முடியாமல் ஆஃபீஸ் நம்பரிலிருந்து அவளுக்கு ஃபோன் செய்து பார்த்தால் ரிங்க் போய்க் கொண்டு இருந்தது. வேறு வழியில்லாமல் மாமனாருக்கு போன் செய்து விபரம் தெரிவித்தான். அடுத்த நாள் லீவு எடுக்க முடியாத அவசர வேலையைக் காரணமாக சொல்லி திருமண நாளுக்கு முன் தினம் இரவே தாம் வந்து விடுவதாகச் சொன்னதை அவரும் புரிந்துக் கொண்டார்.

 ஒருவேளை அவளுக்கு மறுபடி போன் செய்துச் சொல்லவில்லை என்பதால் அவளுக்கு கோபமோ?

இல்லையே அன்றிரவு அங்கே சென்ற போது எவ்வளவு மலர்ச்சியாக என்னை வரவேற்றாளே? அன்று நிகழ்ந்ததை ஒரு தேர்ந்த டிடெக்டிவை போல மறுபடியும் ஒவ்வொன்றாக எண்ணி அலசி ஆராய்ந்து காயப் போட்டுக் கொண்டு இருந்தான்.

 முன் தினம் மக்கர் செய்த போன் மறுதினமும் மக்கர் செய்ய ஆஃபீஸுக்கு செல்லும் போதே அந்த போனை வழக்கமாக சரிசெய்யக் கொடுக்கும் கடைக்குச் சென்றான்.

" உங்க மொபைல் சரி செய்யக் கொடுத்திருக்கிற ரூபாய்க்கு நீங்க ஒரு புது மொபைலே வாங்கி இருக்கலாம். ஹ்ம்... என அடிக்கடி கோபிக்கும் மாலினியின் முகம் அப்போது அவன் மனக் கண்ணில் வந்துச் சென்றது. 

 அதென்னமோ அந்த மொபைலை வேண்டாமென்று வைத்து விட்டு புதிதாக வாங்க அவனுக்கு மனதில்லை. அப்பா வாங்கிக் கொடுத்ததாயிற்றே... கடந்த வருடம் அவர் தவறின பின்னர் அந்த மொபைலைப் பார்த்தாலே அவனுக்கு அவர் ஞாபகம் தான் வரும். மொபைல் கடைக் காரனும் அடிக்கடி தன்னுடைய கடைக்கு வரும் அவனுக்கு உதவ எண்ணினானோ என்னமோ தன்னிடமிருந்த சாதாரண போன் ஒன்றைக் கொடுத்து உங்க சிம்மை இந்த போன்ல போட்டுக்கோங்க அண்ணா, சாயங்காலம் நீங்க ஆஃபீஸில் இருந்து வருகிற நேரத்துக்குள்ளே நான் இதைச் சரிப் பண்ணி வைக்கிறேன் என்று இன்முகமாக கூறினான்.

 வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது அதனை வாங்கி விட்டு புறப்படும் போது மறக்காமல் திருமண மாப்பிள்ளை மாலினியின் அண்ணன் சுதனுக்கான பரிசான மோதிரத்தை கையோடு எடுத்துச் சென்றான். அங்கோ மாலினி புதுப் பட்டுப் புடவையில் ஜொலி ஜொலித்தவாறு உறவினர் ஒருவரின் கையிலிருந்த குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். 

"அம்மா வீட்டுக்கு வந்துட்டா போதும், என்னை நினைச்சுக் கூட பார்த்திருக்க மாட்டா" என மனதிற்குள் பொருமிக் கொண்டு இருக்கும் போதே சட்டெனெ அவனைக் கவனித்தவள் அக்கம் பக்கம் இருப்பவர்களையும் கவனிக்காமல் ஆர்வத்தோடு அவன் அருகில் வந்து நின்றுக் கொண்டு, 

"என்ன நீங்க எத்தனை நேரம்.........." அப்படி ஏதோச் சொன்னாள். பாட்டுச் சத்தத்தில் கேட்கவில்லை. சுற்றும் இருப்பவர்கள் அவளைக் கிண்டலடித்ததும் அவளும் ஏதோ பேச வந்தவள் சிரிப்பும் விளையாட்டுமாக பேச்சு மாறிப் போனது. அப்படி அவள் என்னச் சொல்ல வந்திருப்பாள்? அப்போது அவள் கோபமாகத் தெரியவில்லையே?

 அதற்கப்புறம் அடுத்த நாள் திருமண நிகழ்வுகள் எல்லாம் நிறைவடைந்து வீட்டுக்கு இருவரும் புறப்பட்டோம் அப்போது கூட நன்றாக பேசிக் கொண்டு இருந்தாள். அவள் வீட்டிலிருந்து புறப்படும் போது கிளையண்டின் போன் கால் வர அதனை அட்டெண்ட் செய்து வந்தேன். சுற்றிலும் இருந்த சத்தத்தில் போன் பேசுவதுக்காக பக்கத்து வீட்டு வாசல் வரை போக வேண்டியதாயிற்று.. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.