(Reading time: 13 - 25 minutes)

 "யுரேகா" மனதிற்குள் உற்சாகமாக கத்தியவன், அந்த பக்கத்து வீட்டு பாரதி என்னும் பெண்மணிக்கும் இவளுக்கும் ஆகாது. ஓஹோ அதனால் தான் அவளுக்கு அன்று கோபம் வந்திருக்கிறது. இதோ இப்போதே போகிறேன். என் கண்மணியை சமாதானப் படுத்த, என விரைந்தவன் சமையலறையில் அவளைத் தேடினால், ஏற்கெனவே அவள் சமையலை முடித்து விட்டாள் போலும். எங்கே போனாள் எனத் தேடும் போதே காயப் போட்ட துணிகளை எடுத்துக் கொண்டு அவள் வீட்டுக்குள் வந்துக் கொண்டிருந்தாள்.

 கணவன் முகத்தில் ஏன் இப்படி ஒரே ஒளி வெள்ளமாக இருக்கிறது என்று புரியாத பாவனையில் வந்தவள் எதிரில் வந்து நின்றான். 

"ஸாரி மாலு, ஐயாம் வெரி வெரி ஸாரி. நான் இனிமே நீ வருத்தப் படுற மாதிரி நடந்துக்க மாட்டேன்."

அவள் முகம் சற்று இளகி விட்டது என்றுப் புரிந்துக் கொண்டவன். 

"இனிமேல் வீட்டுக்கு வந்தவுடனே போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிடுறேன். யாரும் போனும் செய்ய மாட்டாங்க, நானும் உங்கிட்ட பேசாம இப்படி ரெண்டு நாளா கஷ்டப் படுற நிலைமையும் வேண்டாம்"

 என்று கொஞ்சம் ஓவர் எமோஷனலாக ஸீன் போட முயற்சித்தவனுக்கு பத்திரகாளியாக முறைத்துக் கொண்டு இருக்கும் மனைவியின் முகம் பார்த்து தலைச் சுற்றாத குறைதான்.

"என்னமா என்னவாச்சு, நான் எதுவும் தப்பாச் சொல்லிட்டேனா" எனத் தந்தி அடித்தான் அவன்.

" அப்போ அந்த மது கிட்டே ஆபீஸில மட்டும் பேசுவீங்க, எனக்குத் தெரியாம அது தான" என இடுப்பில் கை வைத்து உண்மையாகவே பத்திரகாளி போல நின்றாள்.

"அடப் பாவி எவ அவ? எனக்கு தெரியாத பேரெல்லாம் சொல்லுற நீ, எனக்கு தெரிஞ்சதெல்லாம் என் மாலு மட்டும் தான்" சொல்லி அவள் கன்னத்தை தீண்டச் சொன்னவளின் கையில் விழுந்தது ஒரு அடி.

"ஐயோடா கராத்தே எல்லாம் படிச்சு வச்சிருக்கா போல இருக்கு, கல்யாணத்துக்கு முன்னால இவக் கிட்ட இதைக் கேட்க மறந்துட்டேனே" என மனதிற்குள் புலம்பிக்கொண்டு வலித்த கையை உதறிக் கொண்டான் அவன். 

"ம்ஹீம், ஆம்பளைங்க அழக் கூடாது சுப்" என்றுச் சொன்ன மனசாட்சிக்கு அடிப் பணிந்து சேஃப் டிஸ்டன்ஸில் நின்றுக் கொண்டு,

"யாரு அந்த மது........... ஷாலினி...எனக்கு ஒண்ணுமே புரியலையேடா?"

"அன்னிக்கு.......பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு தொடர்ந்தாள் அன்னிக்கு ஒளிஞ்சுப் போயி நின்னு பேசிகிட்டு இருந்தீங்களே அவ பேரு தானே மது.....அதான் நான் அன்னிக்கு என் காதால கேட்டேனே"

..............................

 நான் அப்பவே நினைச்சேன் போன் சரியில்லை சரியில்லைனு சொல்லி எனக்கு போன் செய்ய முடியாதவருக்கு ,முழு நாளும் போன் செஞ்சுப் பார்த்தா போனை எடுக்கவே இல்லை மீதி நேரம் நாட் ரீச்சபள்னு வந்தது. என்னோட 26 மிஸ்ட் காலுக்கு திரும்ப ஒரு போன் பண்ண முடியலை. 40 டைம்ஸாவது மெஸேஜ் பண்ணியிருந்தேன் அதுக்கு ரிப்ளை பண்ண முடியலை. ஆனா ஒளிஞ்சு போயி மட்டும் எவளுக்கோ போன் பண்ண முடியுது" என்று கண்ணையும் மூக்கையும் ஒரு சேர துடைத்தவள் எதிரில் கணவன் பேசாமல் அமைதியாக நிற்கிறான் போல என்று ஏறிட்டுப் பார்த்தால் அவனோ அதுவரைச் சிரிப்பை அடக்கி வைத்துக் கொண்டு இருந்தவன் அடக்க முடியாமல் ஹா ஹா வென சிரிக்கவும் கோபத்தில் கூட இரண்டு அடிப் போட்டாள்.

 மூன்றாவது அடிக்கு முன் அவள் கையைப் பிடித்து வளைத்து அவளை தன்னோடு அணைத்தவன்.

 "ஏய் லூசு அன்னிக்கு உண்மையிலேயே என் போன் சரியில்லைடி, அந்த கடைக் காரன் அவசரத்துக்கு தந்த போனுல டிஸ்ப்ளே சரியில்லை. கால் அட்டெண்ட் செய்யிற பட்டனும் வொர்க் செய்யலை. போன் ரிங்க் அடிக்குது, மெஸேஜ் வருது யாருக்கன்னு தெரியலை. அதாண்டி ரிப்ளை செய்ய முடியலை. அன்னிக்கு சீக்கிரம் வரணும்னு அவசர அவசரமா வேலையை முடிக்கிறதிலே இருந்தேன் அதான் உனக்கு போன் பண்ணக் கூட நேரமில்லாம போச்சு. அடுத்த நாள் நான் ஆபீஸ் போகாததனால எங்க புது கிளையண்ட் கிட்ட இருந்து ஏதோ விபரம் கேட்குறதுக்காக எனக்கு போன் வந்தது.

அந்த காலை தான் நீ கேட்டுருக்க, அவர் பேர் மதுக்கர், அவரை தான் சுருக்கமா மதுன்னு கூப்பிடுவோம். நீ என்னடான்னா.......எனச் சிரித்தவன். மனைவியின் முகம் தெளியாததைக் கண்டு

 வேணும்னா அவருக்கு இப்போ போன் போட்டு ஸ்பீக்கரில பேசட்டுமா?'

என்றுக் கேட்க அசடு வழிந்தவாறே வேண்டாம் என்று தலையசைத்தாள் அவள். 

இரண்டு நாட்கள் சண்டைத் தீர்ந்த மகிழ்ச்சியில் அவளை இறுக்க கட்டிக் கொண்டான்.சிறிது நேரம் கழித்து,

ஏன் மாலு நீ கராத்தே எங்க படிச்ச? என

அதுவா...உங்களுக்கு விபரமா சொல்லித் தாரேன்.ஏன்னா.... ஆக்‌ஷன் ஸ்பீக்ஸ் லவுடர் தென் வர்ட்ஸாம்...எனச் சொல்லி வலக்கையை ஓங்கி தூக்கியவளிடம், தன்னுடைய இரண்டு கைகளையும் ஒரு சேரத் தூக்கி சரண்டரானான்.

இருவரின் சிரிப்பொலி இல்லத்தை நிறைத்தது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.