(Reading time: 26 - 52 minutes)

வளின் கைகளை பற்றிக்கொண்டு “ஒரு விஷயத்தை இழந்தா தான் குட்டிம்மா இன்னொன்னு கிடைக்கும், பார்க்காட்டி என்ன மனசு முழுக்க நீ மட்டும் தான் இருப்ப. உன் மேல இருக்க காதல் கூடுமே தவிர குறையாது. நாட்களை எண்ணிட்டே இரு. சீக்கிரம் ஓடிரும்” என்றான்.

“எனக்குன்னு இருக்கிறது நீங்க இரண்டு பேர் தான் ஆதி. ஆஷ்ரமத்துல இருந்து வளர்ந்து இது நாள் வரைக்கும் சமாளிச்சுட்டேன். இனியும் சமாளிக்கிறேன். உஷாவை பார்த்துக்கோ. நீயாவது இங்க தான் இருப்ப, உஷா சென்னை போய்ட்டா அவங்க வீட்டுல கல்யாணம்னு ஆரம்பிச்சுருவாங்கனு புலம்புறா. அவகிட்ட அடிக்கடி பேசு” என்றாள் மாயா.

“டோன்ட் வொர்ரி டார்லிங், என் அம்முக்குட்டிய பத்திரமாக பார்த்துக்குறேன், இது இந்த அம்முக்குட்டி மேலேயே சத்தியம்” என்று அப்பொழுது அங்கே வந்து சேர்ந்த உஷாவின் தலையில் அடித்து சத்தியம் செய்தான் ஆதி.

“டேய், பக்கி நீ பொய் சத்தியம் பண்ண என் தலை தான் கிடைச்சுதா” என்று அவனை அடிக்க ஆரம்பித்துவிட்டாள் உஷா. ஆதிக்கு உஷா சொந்தமும் கூட. அதனால் அவர்களின் விளையாட்டை கனிவுடன் பார்த்து ரசித்தாள் மாயா.

ஷாவை சென்னை அனுப்பி வைத்த கையோடு மாயாவும் 7 நாட்களுக்கு பிறகு பாஸ்டன் சென்றாள். 1 வருடம் நன்றாகவே சென்றது. வாரத்திற்கு ஒரு முறை உஷாவிடமும் மாதத்திற்கு இரு முறை மாயாவிடமும் ஆதி பேசினான். ஆன்லைன் சாட்டிங் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும். உஷா வீட்டில் கல்யாண பேச்சை 2 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கலாம் என்று அவளின் தந்தை கூறியதால் உஷா உற்சாகத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தாள். இப்படியே நல்லபடியாக சென்று கொண்டிருந்த பட்சத்தில் திடீரென்று ஒரு நாள் ஆதிக்கு மாயாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ஹாய் டியர், எப்படி இருக்க?” – ஆதி

“ஹம்ம் நல்லா இருக்கேன்” – சுரத்தே இல்லாமல் பதில் கூறினாள் மாயா. பதிலுக்கு அவனைப்பற்றியோ உஷாவைப்பற்றியோ விசாரிக்கவே இல்லை.

“என்னாச்சு மாயா? ஏன் ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா” என்று பரிவுடன் கேட்க,

“அதான் நல்லா இருக்கேன்னு சொல்றேன்ல, அப்பறம் என்ன? நான் போன் பண்ண விசயமே வேற. நான் இங்க ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க போறேன் ஆதி. வி போத் லவ் ஈச் அதர். நெக்ஸ்ட் வீக் மேரேஜ்”. என்று படபடவென்று கூறினாள் மாயா.

“மா... மாயா...” ஆதிக்கு பேச்சே வரவில்லை.

“உஷாகிட்ட எல்லாம் சொல்ல எனக்கு டைம் இல்ல. உன்கிட்ட சொன்னதே ஒரு கர்டசிக்காக தான். அதே மாதிரி எனக்கு இனி போனோ மெயில்லோ பண்ண வேணாம்” என்று கூறியவள் அவனை ஒரு வார்த்தையும் பேச விடாமல் அழைப்பை துண்டித்துவிட்டாள். ஆதி போனையே வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்தான். தன் காதல் அவ்வளவுதானா. என்னவாயிற்று இவளுக்கு? மறுபடியும் அவளை தொடர்பு கொண்டான். ஆனால் அவள் எடுத்தால்தானே. மீண்டும் மீண்டும் முயற்சித்து தோல்வி கண்டு கைப்பேசியை தூக்கி வீசினான்.

அதற்கு பிறகு சென்னைக்கு வேறு வேலை தேடி வந்து தன் குடும்பத்துடன் இருந்து விட்டான். மாயாவைப் பற்றி கேட்ட உஷாவிற்கும் மாயா கூறியதை சொல்லி இனிமேல் தன்னிடம் அவளை பற்றி பேசவேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டான். உஷாவிற்கு இவர்களால் தலை வலி வந்தது தான் மிச்சம். 

உஷாவிற்கு அவள் தந்தை வெளியில் மாப்பிள்ளை பார்க்க, ஆதியோ தான் உஷாவை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி இருவரின் பெற்றோர் ஆசியுடன் அவளை தன் சரி பாதியாக்கிக்கொண்டான். முதலில் உஷாவிற்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும் பிறகு ஆதிக்காக மட்டுமே இத்திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள், சம்மதம் தெரிவிக்க வைத்தான். அவர்களின் புரிதலுக்கு கிடைத்த பரிசு தேஜஸ்வினி என்ற 1 வயது அழகு தேவதை.

மாயா”

“----“

“மாயா” ஏதோ யோசனையில் இருந்த மாயாவை உலுக்கினான் பரத்.

“ஹான்... எ.. எ.. என்ன பரத்?”

“என்னாச்சு உனக்கு, அப்ப இருந்து உன்னை கூப்பிடுறேன், என்ன யோசனை” என்று அவளைக் கூர்மையாக பார்த்துக் கேட்டான். “ஒண்ணுமில்லை” என்று தலையசைத்தவளின் மனதில் நிறைய எண்ணங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.