(Reading time: 26 - 52 minutes)

ரு சமயம் ரோக் ஒருத்தன் கிட்ட இருந்து என்னை காப்பதினது பரத் தான். அப்பத்தான் நான் பரத்தை முதல் தடவை பார்த்தேன். அப்பகூட எனக்கு பரத் காதம்பரி ஆண்ட்டி பையன்னு தெரியாது. தாங்க்ஸ் சொல்லிட்டு வந்துட்டேன்”.

“ஒரு நாள் காதம்பரி ஆண்ட்டி வீட்டுக்கு போனப்ப அவங்களுக்கு செகண்ட் டைம் ஹார்ட் அட்டாக் வந்து சீரியஸ் கண்டிசன்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தாங்க. என்ன விஷயம்ன்னு கேட்குறப்ப என் கையை பிடிச்சிட்டு அழுதுட்டே சொல்றாங்க. தன்னோட பையனும் அவங்க ப்ரெண்டும் போன கார் ஆக்சிடென்ட் ஆகிருச்சுனும், கடவுள் புண்ணியத்துல பரத்துக்கு ஒண்ணுமில்லாட்டியும், அவர் கூட இருந்த அவங்க ப்ரெண்ட் இறந்துட்டதாவும், மேலும் அவர் ஒரு பொண்ணு மேல மோதிட்டதா சொன்னாங்க. போன்ல அந்த சமயத்துல தான் கால் வந்ததாவும், அதை கேட்டுதான் ஹார்ட் அட்டாக் வந்ததாவும் சொன்னாங்க”.

“அவங்க அப்பாகிட்ட என்ன விஷயம்ன்னு கேட்குறப்ப பரத் குடிச்சுட்டு வண்டி ஓட்டினதால தான் இந்த ஆக்சிடென்ட்க்கு காரணம்ன்னு கேஸ் பைல் பண்ணியிருந்தாங்கன்னு சொல்லிட்டாரு, அவங்க அப்பாதான் பெரிய பணக்காரர் ஆச்சே. கார் ஒட்டுனது தன்னோட பையன் இல்லை, அவன் ப்ரெண்ட் தான் அப்படின்னு கேஸை மாத்தி வெளிய கொண்டுவந்துட்டாங்க. இங்க வந்து பார்த்தா பரத்திற்கு அவங்க அம்மாவை  கிரிடிகல் கண்டிசன்ல பார்த்ததுல ரொம்ப வெக்ஸ் ஆகியிருந்தாங்க”.

“பரத் அம்மாவோ தனக்கு பிறகு தன்னோட கணவரும் பரத்தை சரியா பார்த்துக்கமாட்டாங்க, ரெண்டு பேருக்கும் ஒத்து போகாதுன்னும் கவலைப்பட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த நேரத்துல அவங்க பல்ஸ் வேற குறையுது. அப்ப எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை ஆதி. அவங்க கையை இறுக்க பிடிச்சிட்டு நான் தான் ஆதி சொன்னேன். உங்க பையனை நான் பார்த்துக்குறேன் அம்மா. கவலைப்படாதிங்கன்னு. அந்த நேரத்துல எனக்கு அவங்களை காப்பாத்தணும்ன்னு தான் தோணுச்சே தவிர வேற ஏதும் என் மனசுலையே இல்லை”.

“என்ன நினைச்சாங்களோ பரத்தை கூப்பிட்டு அங்க அவங்களை பார்த்துக்கிட்ட நர்ஸ்கிட்ட தன்னோட பொன்தாலியை வாங்கிட்டு வர சொன்னாங்க. எனக்கு மனசுக்குள்ளே கொஞ்சம் பயம். என்னமோ நமக்கு மனசை இறுக்குற மாதிரி ஏதோ நடக்கபோகுதுன்னு நினைச்சேன். பரத்தை என் கழுத்துல அந்த தாலியை கட்ட சொல்லி வற்புறுத்தினாங்க. ரெண்டு பேருக்கும் பேச்சே வரலை. எனக்கு அழுகையா வேற வருது. பரத்க்கு என்னை பார்க்கவே முடியலை. அவர் எனக்கும் மேல கலங்குறாரு. அவங்க மேலே மேலே வற்புறுத்த பரத்க்கும் வேற வழி தெரியலை. என்னை அந்த ஹாசஸ்பிடலையே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அப்பவே காதம்பரி அம்மாவும் சந்தோசத்தோட கடவுள் கிட்ட போய்ட்டாங்க”.

“அவங்க அம்மாக்கு காரியம் எல்லாம் முடிஞ்சபிறகும் பரத் ரொம்ப நாளைக்கு டிஸ்டர்ப்பாவே இருந்தாங்க. ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கூட்டிட்டு போனோம். அவருக்குள்ள தன்னால தான் மூணு உயிர் போயிருச்சுன்னு ஒரே குற்றவுணர்வுன்னும், இந்த நிலைமை இன்னும் போச்சுன்னா. பரத்தை நாங்க கோமா ஸ்டேஜ்ல தான் பார்க்க முடியும்ன்னும் சொல்லிட்டாரு. அவருக்கு அப்போதைய தேவை ஒரு அமைதியான நல்ல குடும்ப வாழ்க்கைன்னும் சொன்னாரு. அன்னைக்கு தான் நான் உனக்கு பேசினேன் ஆதி”

அந்த நாளை நினைவு கூர்ந்தான் ஆதி.

அவனின் கண்களில் இருந்த வலியை உணர்ந்தவளுக்கு “நாங்க அப்படியே லண்டன் வந்துட்டோம். உஷாகிட்ட நான் பேசினா எங்கே அவகிட்ட உண்மையை சொல்லிருவேன்னொன்னு ஒரு பயம். உன்னை கோபப்படுத்துற மாதிரியோ உதாசினப்படுத்துற மாதிரியோ பேசினால் நீ உஷாவையும் பேச விட மாட்டன்னு எனக்கு தெரியும். ஆனால் அதையும் மீறி உஷா எனக்கு மெயில் பண்ணிருந்தா. எனக்கு என்ன கஷ்டம்ன்னு கேட்டாள் ஆதி. சில சமயத்துல தோணும் உன்கிட்ட உண்மை சொல்லியிருக்கனும்ன்னு. ஆனால் பரத்தோட ஹெல்த் அண்ட் அவரோட மைன்ட் அதுக்கு ஒத்துக்கலை. என் மேல ரொம்ப பொஸசிவ். என்னை யாராவது ஏதும் சொன்னா கூட அவரோட பிரஷர் கூடிரும். சில நேரத்துல அவரோட கோபத்தை கன்ட்ரோல்பண்ணவே முடியாது. உன்னைபத்தி அவர்கிட்டயும் சொல்ல முடியலை. போக போக தான் புரிஞ்சது பரத் என்னை ரொம்ப விரும்புறாருன்னு. நிலன் நிவன் பிறந்தது கூட எங்க அவசரத்துல தான். அதுவும் அவரை சீக்கிரம் நல்லபடியா மாத்தணும்ன்னு. அதனால உன்னை ஒரு கனவா மறந்துட்டு அவருக்கு உண்மையா வாழ்ந்தேன். வாழுறேன். ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி தான் உன்னைப்பத்தி அதுவும் நீ இங்க வேலை பார்க்குறன்னு தெரிஞ்சது. பரத்தை ரொம்ப வற்புறுத்தி கூட்டிட்டு வந்தேன். இங்க வரதுக்கு காரணமே உன்னையும் உஷாவையும் எப்படியாவது பார்த்துரனும் பிறகு உன்கிட்ட உண்மையை சொல்லிரணும்னு தான். இனியும் உன்கிட்ட எனக்கு சொல்ல ஏதும் இல்லை ஆதி, நெக்ஸ்ட் வீக் நான் மறுபடியும் லண்டன் போறேன். இனி இங்க வரவே மாட்டேன், கடைசியா நான் அன்னைக்கு அப்படி பேசினதுக்கு என்னை மன்னிச்சிரு ஆதி” என்று கையெடுத்து கூம்பிட்டாள் மாயா.

அப்பொழுது “ஆதிகிட்ட ஏன் மன்னிப்பு கேட்கணும். கேட்காத மாயா. நீ தப்பே செய்யலை” என்று கதவருகில் உஷாவின் குரல் கணீரென ஒலித்தது.

திரும்பியவர்களின் கண்களில் பட்டது அங்கு இருந்த பரத்தும் உஷாவும் தான்.

“பரத்” என்று கலங்கிய கண்களுடன் எழுந்த மாயாவை வேகமாக அணைத்துக்கொண்டான் பரத்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.