(Reading time: 12 - 23 minutes)

யக்கத்துடன்  அறிமுகமான நபர்கள்,புன்னகையுடன் தொடங்கிய உரையாடல்கள், வகுப்பறையில்  தொடர்ந்த கேலிகள், ஒன்று சேர்ந்து போட்ட கூச்சல்கள், அடித்து ஓடிய நிமிடங்கள், ஒரே தட்டில் பாயும் கைகள்,

இரவு நேர ரகசியங்கள், ஒருவர் மீது ஒருவர் உறங்க

தரையில்  கிடந்த புத்தகங்கள், தேர்வின் போது பரிமாறியக் காகிதங்கள்,

ஒன்றாக ஆடியக் குத்தாட்டங்கள், இடையிடையே ஏற்பட்ட விரிசல்கள்,

மீண்டும் கைகோர்த்து தொடர்ந்த நட்புகள்

என்று வண்ணமயமாய் இருந்த வாழ்வு முடிவுக்கு வருவது போல் எண்ணினாள். பிரிவு தற்காலிகமானது தான் என்றாலும் அதை ஏற்க முடியாமல் ஏங்கி மனதிற்குள் தவித்தாள். காரணம் நாளை  கல்லூரி கடைசிநாள்.

அன்று ஆராதனாவின் விழிகள் அவனைத் தேடியது. அவனைக்கண்டதும் புன்னகைத்தாள். அதில் பிரிவின் வலி வெளிப்பட்டது. அவள் அருகே சென்ற போது அவன் அவளை விட்டு விலகிச்சென்றான். தனியே சென்றவனை பின்தொடந்தாள். சிறிது நேர மௌனத்திற்கு பிறகு கைகுலுக்கி விடைபெறும் நேரத்தில் அவன் கண்ணீர்த்துளிகள் ஆராதனாவின் கைகளை நனைத்தது.

இருவரும் பெரிதாக உரையாடிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் மௌனங்களை மொழிபெயர்த்தால் அந்த அன்பு நட்புக்குள்ளே அடங்காதென்று தெரியும்.

அவர்களின் கண்ணீர் தழும்பிய விழிகளை இருவரும் மறக்கவில்லை .

காலம் வேகமாய் நகர்ந்தது. திவ்யாவிற்கும் ஆராதனாவிற்கும் ஒரே வேலை என்பதால் ஒன்றாக விடுதியில் தங்கி பணிக்கு சென்றுவந்தார்கள். புதிதாய் பல நண்பர்கள் கிடைத்தாலும்  திவ்யா, ஆராதனா, விமல் மூவரின் அழகான உறவு தொடர்ந்துகொண்டே தான் இருந்தது.

ன்று விடுதியில்.

"ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு " பாடல் கேட்க,

" ஏ! எரும ! அங்கிள் போன் பண்றங்க பாரு…எடு…ரொம்ப நேரமா அடிக்குதுடி… எந்திரி  " என்றாள் திவ்யா.

ஆராதனா அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். " எப்படி தூங்குறா பாரு" என்று திட்டிக்கொண்டே திவ்யா போன் எடுத்து பேசினாள்.

" ஹாய் அங்கிள் எப்படி இருக்கீங்க. அவளுக்கு இப்போ சரியா போச்சு.  நல்லா தூங்குறா...ஓ !! எப்போ அங்கிள்..நியூஸ்லயே போட்டாங்களா.... நான் பேசிட்டு கூப்பிடுறேன்." என்று சொல்லி வைத்து விட்டு பரபரப்பாக டிவியை போட்டு  விட்டு அதை பார்த்தபடியே விமலுக்கு போனில் தொடர்பு கொண்டாள். அவனது நம்பர் தொடர்பில் இல்லை என்று வந்தது.

தலைப்புச்செய்தியில் பெங்களூரில் கலவரம் என்று கேட்டவுடன் திடுக்கிட்டு எழுந்தாள் ஆராதனா.

 " என்னாச்சு... விமல்ட்ட பேசுனியா " என்றாள் எழுந்தவுடன். அவனை தொடர்புகொள்ள முடியவில்லை என்றதும் மிகவும் அதிர்ந்து போனாள். செய்யவது அறியாது நின்றாள். சிந்தனைகள் பலவகையாக ஓட சற்று நேரத்தில் அழத்தொடங்கினாள். திவ்யா அவளது பெங்களூர் அலுவலக நண்பர்களிடம்  நிலவரம் கேட்டுகொண்டுஇருந்தாள்.

"இப்போ எதுக்கு தேவ இல்லாம டென்ஷன் ஆகுற. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட அவன் பேசுனான்,  உனக்கு இப்போ உடம்புக்கு எப்படி இருக்குன்னு கேட்டு. பயப்படாத. " என்று சொல்லி முடிப்பதற்குள் போன் அடித்தது.

"இதோ கூப்பிட்டான் பாரு. பேசு " என்றாள் திவ்யா.

ஆராதனா போன் எடுத்தவுடன் " எங்க போன. ஏன் இவளோ நேரம் போன் எடுக்கல. ஹலோ. இருக்கியா.." என்று கத்த, மறுமுனையில் அவனோ அவள் குரல் கேட்டு சிரித்துக்கொண்டே " கிரிக்கெட் மேட்ச் ஓடிட்டு இருந்துச்சு ,சார்ஜ் போனதை கவனிக்கல..சாரி. எங்க பக்கம் கலவரம் ஒன்னும் இல்ல. உனக்கு காய்ச்சல் சரியா போச்சா." என்றான்.

அவனிடம் சிறிது நேரம் பேசிய பிறகு நிம்மதியானாள் ஆராதனா.

டுத்தநாள் ஆராதனாவின்  பிறந்தநாள்.

அன்று இரவு 11.30. விடுதியில் ஆராதனா அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். திவ்யா மெழுகுவர்த்தி ஏற்றி கேக் எடுத்துக்கொண்டு மெதுவாக கட்டிலில் வைத்து அவளை எழுப்ப முயன்ற பொது ஆராதனா போன் அடித்தது..

திவ்யா போனை எடுத்து,

" நினைச்சேன்டா நீயா தான் இருப்பன்னு…

 ஒன்னும் சொல்லாத….

  12 மணிக்கு கேக் வெட்டினதும் பேசலாம் சரியா. அதுவரைக்கும் கூப்பிடாத."

என்று சொல்லி போனை வைத்தாள். மறுபடியும் போன் அடித்தது.

"என்னடா…. நீயும் ஒவ்வொரு பர்த்டே அப்பயும் சொல்லப் போறேன் சொல்லப் போறேன்னு தான் சொல்லுவ….

மூணு வருஷமா நீயும் சொல்ல மாட்ட என்னையும் சொல்ல விடமாட்டா. ஒழுங்கா வை இல்லனா நீ அவளுக்கு வாங்குன வாட்ச் யானை பொம்மை ரெண்டையும் நானே வச்சுக்குவேன்…

வைடா " என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.