(Reading time: 18 - 35 minutes)

ள்ளே செல்லும் பாதையை அரசமாளிகையில் வாயில்காப்பாளன் வேல் வைத்து தடுப்பது போல் இரண்டு சிறிய இரும்பு கொடுக்குகள் தடுத்தன.

மீண்டும் மாமாவிற்கு குழப்பம் வர, அவரை அழைத்து வந்த போலீஸ் அங்கிருந்த சென்சார் போர்டில் ப்ளூ கலர் டோக்கனை வைக்க சொல்ல, தேங்க்ஸ் என்று டிஜிட்டலில் சொல்லியபடி இரும்பு கொடுக்குகள் உடனே விலகி கொண்டண.  

எதிரே தெரிந்த மிகப்பெரிய எஸ்கலேட்டரை காட்டி இரண்டாம் மாடியில் இருக்கும் முதல் பிளாட்பாரத்தில் போகச்சொன்னார்கள்.

“ஐயோ எஸ்கலேட்டரா? நான் போமாட்டேன்! போனவாரம் ஸ்பென்சர் பிளாசாவில் இப்படிதான் ஏறிபோய் என் வேட்டி அந்த இடுக்கில சிக்கிண்டு, வேட்டி அவிழ, வெள்ளைகாரி முன்ன என் மானம் போயிடுத்து! என்று மாமா மறுத்தார். மேலும் பக்கத்தில் இருந்த படியை காட்டி “ இதில்லயே ஏறி போய்க்கிறேன், மூட்டு தேஞ்சாலும் பரவால்லை! என்று கெஞ்சி பார்த்தார்.

ஆனால் போலீஷோ “நீங்க படீல ஏறுவது, பிரமிடு மேல ஏறுவது மாதிரி கஷ்டம், அதுக்குள்ள எங்க டூட்டியே முடிஞ்சுடும்” என்று சொல்லி, அவரை வலுகட்டாயமாக எஸ்கலேட்டரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அவர் மேலே போவதை ஏதோ PSLV ராக்கெட்டில் அவரை ஏற்றி அனுப்புவது போல் பீதியோடு கீழே இருந்தவர்கள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

ருவழியாக பிளாட்பாரத்தை அடைத்தவர் டென்ஷன் தீர வெத்தலைபாக்கு போட்டுகொண்டார். அங்கும் ஆள் நடமாட்டம் இல்லாததால் ரயிலில் சீட்டு பிடிக்க ஜன்னல் வழியாக துண்டு போடுவது அவசியம் இல்லை என்று கருதி தோளில் போட்டு கொண்டு எந்த பக்கம் ட்ரைன் வரும் என்று தெரியாமல் தெற்கும் வடக்கும் டென்னிஸ் பார்த்தார். ஒரு மூலையில் கிராப் வெட்டிய சிறுமியுடன், கிளாஸ்க்கு கட் அடித்து விட்டு வந்த கான்வென்ட் சிறுவன் CD புகழ் சாமியார் சொன்ன ஆன்மிக ஆராய்சியை செய்து கொண்டிருக்க “அபச்சாரம் வெட்ட வெளியில, பட்ட பகல்ல  இச்சு இச்சுன்னு வாய சப்பிண்டு பையனும், பையனும் கட்டிப்புடிசிண்டு உருள்ரா, இதெல்லாம் நம்ம கலாச்சாரத்துக்கு வந்த கிரஹச்ஸாராம்! என்று தலையில் அடித்துக்கொண்டார்.

கை இரண்டையும் இடுப்புக்கு முட்டுகொடுத்துக்கொண்டு கட்டபொம்மன் சிவாஜி மாதிரி மாமா நின்றுகொண்டு இருக்க, பேஷன் ஷோவில் நளின நடை போட்டுவரும் நவீன மங்கை போல் மெட்ரோ ட்ரைன் பிளாட்பாரத்தில் அலுங்காமல் குலுங்காமல் வந்து நின்றது. தானியங்கி கதவுகள் அலிபாபா குகை போல் திறந்துகொள்ள, மிருதங்க மாமா அதற்குள் தன்னை திணித்துக்கொண்டார்.

புலி வேகத்தில் புறப்பட்ட ரயில் மாமாவிற்கு சற்று கிலியை தந்து வயிற்றில் புளியை கரைத்தது. வாயில் குதப்பிய வெத்தலையை ஜன்னல் வழியே வெளியே துப்ப வழி இல்லாமல் குளிர்சாதன பெட்டியின் கண்ணாடிகள் மாமாவை எரிச்சலுட்டின.

அந்தரத்தில் பறந்தபடி சென்னையின் கீழ் அழகை மூக்கின் நுனி கண்ணாடி ஜன்னலை உரசியபடி பார்க்க இயந்திர கதியில் ஜனங்கள் ஓடிக்கொண்டு இருந்தார்கள். மாமாவின் வாய் ஓரம் வழிந்த வெத்தலை சிவப்பை எதிரே இருந்த விஷம சிறுவன் தன் செல்போனில் படம் பிடித்து யாருக்கோ வாட்சப்பில் அனுப்பிகொண்டிருந்தான்.

மாமாவிற்கு பயணம் மகிழ்ச்சியை தராமல் ஏதோ கூண்டில் அடைபட்ட ஜோசியகிளி போல முழிக்க ஆலந்தூரும் வந்து சேர்த்தது. ஒரு வழியாக மெட்ரோ ரயில் சாகசத்தை முடித்துகொண்ட பெருமையில் ரயிலை விட்டு இறங்கி, குஷியில் கையில் இருந்த ப்ளூ கலர் டோக்கனை மேலே வீசி கேட்ச் பிடிக்க நினைக்க அது அவரின் கையில் பட்டு இரண்டாவது மாடியில் இருந்து கீழே எங்கோ போய் விழுந்தது.

டோக்கன்  இல்லாததால் வெளியே செல்ல வாயில் கதவுகள் மாமாவிற்கு வழி விட மறுக்க அழுதே விட்டார். ரயில் நிலைய அதிகாரிகள் வந்து இரு மடங்கு அபராதம் வசூலித்த பின் அவரை வெளியே விட்டனர் .

“இனிமே ஆண்டவனே வந்து அசரீரி சொன்னாலும் மெட்ரோ ட்ரைன்  படியேறமாட்டேன்” ரோஷத்தோடு சத்தியம் செய்தார் மிருதங்க மாமா. மீண்டும் வடபழனி போக இதே மார்க்கத்தை ரயிலில் தொடர விருப்பம் இல்லாமல் ஆட்டோ பிடித்து வடபழனி ரயில் நிலையம் வர, அங்கு அவரின் ஸ்கூட்டரை காணவில்லை.

கள்ள சாவி போட்டு ஒரு களவாணி அத்திம்பேரின்  ஸ்கூட்டரை ஆட்டை போட்டுவிட்டான். ஏற்கனேவே பாதி ஜீவன் போன மாமாவிற்கு BP எகிறி மயக்கமாகி விட்டார். ஆம்புலன்ஸ் வந்து அவரை அள்ளிக்கொண்டு எங்கோ சென்றது.

ஸ்கூட்டரை திருடிய காசிமேடு கோபால் உதயம் தியேட்டர் சிக்னலில் ஹெல்மெட் போடாத குற்றத்திற்காக ட்ராபிக் போலீசிடம் சிக்கிகொண்டான்.

“அம்பதாயிரம் போட்டு வண்டி வாங்க தெரியும், ஆயிரம் ரூபாய் கொடுத்து ஹெல்மெட் வாங்க தெரியாதா” என்ற போலீசிடம், அத வண்டி வாங்கினவன் கிட்ட கேட்கணும்,திருடுடியவன் கிட்ட கேட்பது என்ன நியாயம்! என்று நினைத்த கோபால் மௌனமாய் நின்றான்.

“லைசென்ஸ் இருக்கா”

“இல்ல சார்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.