(Reading time: 18 - 35 minutes)

றுபேச்சு பேசாமல் அமைதியாக அந்த இடம் விட்டு நகர்ந்தான் அந்த இளைஞன். ஏற்கனவே ஒரு இடத்தில் குண்டு வைத்துவிட்டு இன்னொரு இடத்தில் குண்டு வைக்க போகும் போது இப்படி எதிர்பாராமல் ட்ராபிக் போலீசில் சிக்கியதால் தப்பித்தால் போதும் என்று எஸ்கேப் ஆகி தன் தீவிரவாத செயல்களுக்கு உதவி செய்யும் புதிய நட்பான ஸ்லீப்பர் செல் தீவிரவாத நண்பனிடம் சென்று நடந்ததை சொன்னான்.

“அட முட்டாள்! அந்த வண்டி எம்பேறுல ரிஜிஸ்டராகிருக்கு. நீ வேற டைம் பாம் வச்சிட்ட. நிலைமை விபரீதமாரத்துக்கு முன் நம்ம வண்டிய கொண்டுவந்திரனும். இல்லைனா நாம மாட்டிக்குவோம்” அவனையும் அழைத்துக்கொண்டு உடனே பனகல் பார்க் ட்ராபிக் போலீஸ் ஸ்டேஷன் விரைந்தான்.     

போலிஸ் ஸ்டேஷன்ல டாகுமெண்ட் காட்டிவிட்டு கேட்ட லஞ்சத்தையும் கொடுத்துவிட்டு, சாவியை வாங்கிகொண்டு குற்றவழக்குகளில் சிக்கிய வாகனங்கள் நிறுத்தபட்டிருக்கும் இடத்திற்கு தீவிரவாத நண்பர்கள் இறுவரும் வந்தனர்.

அவர்களுக்கு பைக்கை கண்டுபிடிப்பதில் அதிகம் சிரமம் ஏற்படவில்லை. எக்மோர் காசநோய் மருத்துவமனை நோயாளிபோல் அனைத்து வாகனங்களும் எல்லா பாகங்களும் கழற்றப்பட்டு, பரிதாபமாக காட்சியளிக்க, இவர்களின் பைக் சினிமா டூயட் சாங்கில்  ஆடும் துணைநடிகைகளுக்கு மத்தியில் பளபள வென தெரியும் ஹீரோயின் போல் காட்சியளித்தது.

குண்டு வைத்த தீவிரவாதி பைக்கை ஸ்டார்ட் செய்ய, பின் சீட்டில் அமரபோன ஸ்லீப்பர் செல் எதேச்சையாக அருகிலிருந்த வண்டியின் நம்பர் பிளேட்டை கவனித்தான். Fancy Number ராக இருந்தது.

“நீ வடபழனி ரயில் நிலையத்தில் பைக்ல குண்டு வைத்தேன்னு சொன்னயே, அந்த வண்டி நம்பர் என்னன்னு சொன்ன?”

“மறக்கமுடியுமா அந்த Fancy நம்பர! TN01  1234”

“டேய் அந்த வண்டி இங்கதாண்ட இருக்கு. பாம் வெடிக்க எத்தனை மணிக்கு டைம் செட் பண்ணி இருக்கற?”

 “ 4.30 மணிக்கு.  இன்னும் கொஞ்ச நேரத்தில வெடிச்சுரும். நாம ரூமுக்கு போய் T.V ஆன் பண்ணினா FLASH NEWS  நம்மளோடதா இருக்கும்” தீவிரவாத இளைஞன் சொல்ல

ஸ்லீப்பர் செல் தன் கைகடிகாரத்தை அவசர அவசரமாக  பார்த்தான். 4.30 க்கு இன்னும்   4 நொடிகள் இருந்தன.

அவர்களின் இருசக்கர வாகனத்தின் டயர் சுற்றும் வேகத்தை விட வேகமாக  மிருதங்க மாமாவின் வண்டியில் பொறுத்தபட்டிருந்த டைமர் பாமின் கடிகார முட்கள் சுற்றின 4, 3, 2, 1  “டமார்” .

பின் குறிப்பு : தீவிரவாதிகள் உறுத்தெரியாமல் கரிக்கட்டையானதை எல்லா T.V சேனல்களும் FLASH NEWS போட்டு காட்டின.

நீதி : கூடா நட்பு கேடாய் முடியும். இந்த கதையில் கேடான நட்பு கூடாமலே முடிந்தது

 

This is entry #75 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை − முடிவுக்கான கதை

எழுத்தாளர் - ஜானகி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.