(Reading time: 15 - 30 minutes)

ஷா வந்ததோ, பிரமோத் அவளுடன் சென்று விட்டதோ ஏதும் அறியாத விஷ்ணு, இங்கு தான் வந்த வேலையை கவனித்தான். பழைய மாணவர்களின் சந்திப்பு ஒரு புறம் நடந்தாலும், அங்கு அவனை போல் வாழ்க்கையில் ஜெயித்து முன்னேறியவர்களை மேடையில் அழைத்து பாராட்ட வேறு செய்தனர். சிறிது நேரம் மட்டும் மேடையில் இருந்தவன், தன் நண்பர்களுடன் இருக்க விரும்புவதாக கூறி கீழே வந்துவிட்டான். அவர்களிடமும் சிறிது உரையாடியவன் பிறகு வெளியில் வந்து அங்கு போடப்பட்டு இருந்த கல் மேடையில் அமர்ந்து அவள் வருவாளா என்று பார்க்க ஆரம்பித்தான். அவனின் மெய்க்காப்பாளர்கள் சற்று தொலைவில் நின்று கொண்டு அவ்விடத்தை சுற்றி பார்வையிட்டனர்.

அவளை முதல் முதலாக பார்த்த நொடியை நினைத்தவனது அகமும் முகமும் ஒரு சேர மலர்ந்தது. அவளால் தானே இன்று அவன் இப்படி ஒரு பேரும் புகழும் கொண்டு வாழ்கிறான்.

க்கல்லூரியில் படித்த நாட்களில் மற்ற மாணவர்கள் எல்லோரும் அவனின் உடையலங்காரத்தை வைத்து கிண்டல் செய்தனர். பாவம் அவன் அப்பொழுது என்ன செய்ய முடியும். சிறு வயதில் யாருமில்லாமல் ஆதரவற்றவனாக திரிந்த நிலையில் பசியின் காரணமாக செய்த ஒரு திருட்டு, அவனை ஆதரவற்றோர் படிக்கும் பள்ளியில் சேர்க்க நேர்ந்தது. அங்கே இருந்த ஒரு நல்ல மனிதரின் வழிகாட்டுதலின் பேரில் பள்ளிபடிப்பு முடித்தான். நல்ல மதிப்பெண் எடுத்த காரணத்தினால் இக்கல்லூரியில் அவனால் சேர முடிந்தது. அவனின் ஏழ்மை நிலை பலராலும் விமர்சனம் செய்ய பட்டது.

ஒரு நாள் சீனியர்களின் கிண்டலுக்கு ஆளாக நேரிட அங்கு வந்து காப்பாற்றியவன் தான் பிரமோத், பிரமோத் வரவில்லை என்றாலும் விஷ்ணுவிற்கு தன்னை காத்துக் கொள்ள தெரிந்திருக்கும், ஆனால் அவனின் பதட்டம் காரணமாக அமைதியாக இருந்துவிட்டான், அதே போல் அவர்கள் கல்லூரியில் ஆடைக்கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம் நடந்த வேளையில் அதன் மூலம் ஒரு ஆசிரியையுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, கலாட்டா செய்து அறிமுகமானவள் தான் வைஷ்வதி. பிரமோத்தின் நண்பரின் மகள். பிரமோத் அவளை ‘ரவுடி ராக்கம்மா’ என்றே அழைப்பான். விஷ்ணுவிற்கு அவளின் தைரியம் மிகவும் பிடிக்கும். அன்றில்லிருந்து மூவரும் உற்ற நண்பர்களாக இருந்தனர்.

வைஷ்வதி தன் தந்தையிடம் சொல்லி விஷ்ணுவிற்கு பகுதி நேர வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்து அவனின் பாதி வறுமையை குறைத்து பெருமை சேர்த்தாள் என்றால், சுமாராக படிக்கும் வைஷ்வதியை சூப்பராக படிக்கவைத்த பெருமை விஷ்ணுவை சேரும்.

நாட்கள் செல்ல செல்ல அவனின் மனதில் அவள் மேல் கொண்ட நட்பு காதலாக மாறியது. மனதில் எழுந்த நேசத்தோடு அவளிடம் சாதாரணமாக பேச பயந்தான். எவ்வளவு நாட்கள் மறைக்க முடியும். ஒரு நாள் அவர்களின் கல்லூரி பட்டமளிப்பு விழாவின் போது வெளிப்பட்டது. வெளிப்பட்டபோது பல துன்பங்கள் நேர்ந்தது.

மறவாதே மனம்!!!

மடிந்தாலும் வரும்!!!

எவ்வளவு நேரம் அப்படி இருந்தானோ?

ஏதோ யோசனையுடன் இருந்தவனை கலைப்பது போல், அவனின் தோளை ஒரு கரம் பற்றியது. யாரென்று பார்க்க திரும்பியவன், அங்கு இடது கையில் க்ரச் (Crutch) வைத்துக்கொண்டு  நின்ற தன் இனியவளை கண்டு வேகமாக எழுந்தான்.

“வைஷு” அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தவனை கண்டு மென்மையாக புன்னகை புரிந்தாள்.

“எப்படி இருக்க விஷ்ணு?” என்று கேட்டவளின் அமைதி அவனுக்கு புதுமையாக இருந்தது.

“நான் நல்லா இருக்கேன் வைஷு, நீ எப்படி இருக்க? என்று கேட்டவனின் கண்களில் அப்பொழுது தான் அந்த க்ரச் தென்பட்டது. அதிர்ந்து,

“ஹேய், காலுக்கு என்ன ஆச்சு?” என்று பதற்றமுடன் கேட்டான்.

வைஷ்வதிக்கு அந்த பதற்றம் இல்லை. அதனால் நிதானமாகவே பதில் கூறினாள்

“ஸ்கூட்டில போகும் போது ஸ்லிப் ஆகிருச்சு, டிபியாவில அடி பட்டதால டாக்டர் கொஞ்ச நாள் க்ரச் யூஸ் பண்ண சொன்னாங்க, மத்தபடி ஒண்ணுமே இல்லை”.

விஷ்ணுவின் மனம் பதறியது. இவ்வளவு நாட்கள் கழித்து தன் தேவதையை இப்படியா பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவளை அந்த கல் மேடையில் அமர வைத்தவன், அவளின் அருகில் அமர்ந்தான்.

அவளையே பார்த்தவனை கண்டு சிரித்தவள் “என்ன விஷ்ணு என்னையே பார்க்குற? ஏதும் என்கிட்ட வித்தியாசம் தெரியுதா?” என்று கேட்டாள் வைஷ்வதி.

அவளின் கைகளை தன் இரு கைகளாலும் பற்றிக்கொண்டு, “உன்னை ரொம்ப நாள் கழிச்சு பார்க்க வந்தேன் டா. நீ என்னனா இப்படி காலை உடைச்சுட்டு வந்து நிற்குற. கஷ்டமா இருக்கு”. என்று வருத்ததுடன் கூறினான்.

“ப்ளீஸ் விஷ்ணு, வேற எதாவது பேசலாம். எல்லோரும் இதைபத்தி பேசியே போர் அடிக்கிறாங்க” என்று கெஞ்சியவளிடம் வேறு என்ன கூற,

“இப்ப என்ன பண்ணிட்டு இருக்க, அம்மா அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டவனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.