(Reading time: 13 - 26 minutes)

ங்களுக்கு முப்பத்தைந்துதான் ஆகுது. என்னை ஏமாத்த முடியுமா?” என்றாள்

“உன்னை நா ஏமாத்த நினைக்கலை, ஆனா நீதான் என்னை நல்லாவே ஏமாத்திட்டியே” என்றேன் விரக்தியுடன்.

“பழைய கதைங்களை பேச வேணாம் ப்ளீஸ், அது உங்களுக்கு நல்லதில்லை” என்றவள் "நாம தனியா பேசறதைப் பாத்து , உங்க வைஃப் தப்பா நெனைச்சுக்கப் போறாங்க", என்றாள்.

அவள் சுலேகாவை என் மனைவி என்று எண்ணிவிட்டாள் என்று தோன்றியது. நான் சுலேகாவை அழைத்து என் செக்கரட்டரி என்று அறிமுகப் படுத்தினேன்.

“அப்போ உங்க வைஃப் வரலியா " என்றாள்.

நான் அவளை ஒருநிமிடம் வெறித்துப் பார்த்தேன். பிறகு பதிலேதும் சொல்லாமல் திரும்பி நடந்தேன். வேகமாக வந்து என் காருக்குள் ஏறிக்கொண்டு ஸ்டியரிங்கில் முகம் புதைத்தேன்.

சுலேகாவுக்கு அவள்தான் நித்யா என்று புரிந்திருக்க வேண்டும். 

சற்று நேரத்தில் நித்யா கார் கதவை திறப்பதை உணர்ந்தேன். உள்ளே அமர்ந்தவள் “அஸ்வின்” என்று மென் குரலில் அழைத்தாள்.

 நான் பேசாமல் இருந்தேன்.

"அஸ்வின், இது என்ன அந்தப் பொண்ணு சொல்றது? உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகலன்னு சொல்லுதே? என்னாச்சு, ஏன் இந்தப் பைத்தியக் காரத்தனம்? உங்க அழகையும் இளமையையும் வீணாக்கிகிட்டு இது என்ன பிடிவாதம்?” என்றாள்.

"ஆமாம் நித்யா..என் அழகும் இளமையும் காட்டில் காயும் நிலவு போல வீணாத் தான் போயிக்கிட்டு இருக்கு. நா அதைப் பத்தி கவலைப்படலை. நா அழகாய் இருக்கறதால சாதாரண மனிதனுக்கு கிடைக்கக் கூடிய ஒரு அன்பான மனைவி எனக்கு கிடைக்கலை. என் காதலை நம்பக்கூட நீ தயாரா இல்லை. ஆனாலும் என்னைப் பொருத்தவரை நீதான் என் மனைவின்னு எண்ணிக்கோ நா முடிவு பண்ணிட்டேன். அதை நா எப்பவுமே மாத்திக்கறதா இல்லை. மனசால உன்னோட வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கேன். இதேமாதிரி எப்போதுமே தனியாவே வாழ்ந்துட்டுப் போறேன்" என்றேன் விரக்தியோடு.

என் கையைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள் நித்யா. "இல்லை, அஸ்வின்..அன்னிக்கி என்னோட நிலை அப்பிடி. ஒரு பிச்சைக்காரனைக் கூப்பிட்டு நீதான் இனிமே சீப் மினிஸ்டர் என்றால் நம்புவானா? அந்த மாதிரி தான் இருந்தது நீங்க என்னை மணக்க கேட்டது. ஆனால் நானும் கொஞ்சம் பொறுமையா உங்க கூடவே கொஞ்சநாள் இருந்து பாத்து இருக்கணும். தப்புதான். உங்க காதலை இதுக்கு மேலயும் நம்பலைன்னா நா மனுஷியே இல்லை. உங்க மனசு புரியாம பத்து வருஷம் உங்க வாழ்க்கையை வீணாக்கினத்துக்கு என்னை மன்னிச்சுடுங்க. இனி நா உங்களைத் தனியே விடமாட்டேன். உங்க தங்கமான மனசுல இடம் பிடிக்க நா எவ்வளோ பாக்கியம் செய்திருக்கணும்?“. என்றபடி என்னையறியாமல் வழிந்திருந்த கண்ணீரை தன் முந்தானையால் துடைத்தாள். என் தலை முடியை விரல்களால் கோதி நெற்றியை வருடிவிட்டாள். தாய்மை நிறைந்த அந்த ஸ்பரிசத்தில் நான் என்னை மறக்க என் பத்துவருட காத்திருப்பும் அந்த ஒரு நொடியில் மறந்து போனது. மகிழ்ச்சியுடன் அவள் மடியில் தலை சாய்த்தேன் நான்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.