(Reading time: 17 - 34 minutes)

பல நேரங்களில் அவள் தன்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது போல அவனுக்குத் தோன்றும் ஆனால் அவன் நிமிர்ந்து பார்த்தாலோ ஏதாவது வேலை மும்முரமாக செய்து கொண்டிருப்பாள், அது நிஜமா அல்லது அவனது மனப் பிரம்மையா என்று அவனுக்கு தெரியவில்லை. அவனுக்கோ அவளைத் தவிர வேறு யாரையும் நினைக்க கூட முடிவதில்லை. அதனால் நடந்த அனைத்தையும் தாயாரிடம் மனம் திறந்து சொன்னான்.  

"என்னால அவளை விட்டுட்டு இன்னொருத்தியை மணக்க முடியாது அம்மா. அவள் முகம் எப்படியிருந்தாலும் எனக்கு கவலையில்லை. நீங்க அவளை ஒருதரம் பாருங்க. பேசிப்பாருங்க. உங்க எல்லோருக்கும் சம்மதம்னா நானும் கல்யாணம் செஞ்சுப்பேன்.இல்லைன்னா இப்படியே இருந்துடறேன் " என்றான்

அவன் பேச்சு ரேணுகாவை யோசிக்க வைத்தது. கல்லூரி நாட்களில் அவன் ஒரு பெண்ணை  விரும்பியதும் அவள் வேறு திருமணம் செய்து கொண்டதையும் அவனது நண்பர்கள் மூலம் அவர் அறிந்துதான் இருந்தார். ஆனால் இன்னும்கூட மகன் அவள் நினைவால் திருமணத்தை மறுக்கக் கூடும் என்று அவர் நினைக்கவில்லை.

றுநாள் அலுவலகம் சென்று நிலாவைப் பார்த்தவர் திகைத்தார். அங்கு அவர் கண்ட நிலாவின் கோரமுகம் அவருக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.இந்தமாதிரி முகத்தைக் கூட நேசிக்க முடியுமா ? மருமகளாகத்தான் ஏற்றுக் கொள்ள முடியுமா? அவருக்கு ஆகாஷின் அழகான கம்பீரமான உருவம் ஒருமுறை கண்களில் வந்து போனது.

ரேணுகாதேவி யார் என்று அந்த அலுவலகத்துக்கே தெரியும். எனவே அவர் வந்ததும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினாள் நிலா.

"கொஞ்சம் என் கூட வாம்மா " என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த அவரது பர்சனல் அறைக்குள் நுழைந்தார்.

நிலா உள்ளே வந்தவுடன் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

"இதோ பாரும்மா...நீ பணத்துக்காக என் மகனையே தூக்கி எரிஞ்சவன்னு எனக்கு தெரியும். இப்போ எதுக்காக இங்கே வந்திருக்கே? நீ வந்ததிலிருந்து என் மகன் சரியில்லை. உன்னைத்தான் கல்யாணம் செய்வேன்ன்னு என்கிட்டேயே பிடிவாதம் பிடிக்கிறான். நீயே யோசிச்சுப் பாரு. உன்னை எப்படி நா மருமகளா ஏத்துக்க முடியும்? நீ ஏற்கனவே கல்யாணம் ஆனவ, ஒரு குழந்தையும் இருக்கு, அதனால உனக்கு எவ்வளோ பணம் வேணுமோ அதை வாங்கிக்கிட்டு கண்காணாம எங்கேயாவது போய்டு" என்றார்.

திகைத்து நின்ற நிலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘அழகான முகம் கொண்ட பெண்ணை ஆயிரம்பேர் விரும்ப முடியும் , ஆனால் இப்படி ஒரு கோரமுகம் கொண்ட தன்னைக் கூட ஒருவனால் விரும்ப முடியுமா ? தன் அழகான முகத்தைத்தான் காதலித்தான், இந்த முகத்தை திரும்பிக் கூட பார்க்க மாட்டான் என்று எண்ணியது எவ்வளோ தவறு, அவனது அழகான நேசத்தையே கொச்சைப் படுத்தியது போல ஆகிவிட்டதே? இப்படிச் செய்வான் என்று தெரிந்திருந்தால் அவன் முன்னால் வராமலேயே இருந்திருக்கலாமே? அழகாய் இருந்தபோது அவனை அலட்சிய படுத்திவிட்டு இப்போது இந்த  முகத்தோடு அவனை மணந்து அவன் வாழ்க்கையை பாழாக்குவதா?’ நிலா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மௌனமாக வெளியேறிவிட்டாள்.

காஷுக்கு  அதிர்ச்சியாக இருந்தது.  நிலாவைக் காணாமல் மிகவும் தவித்துப்போனான். நிலா உண்மையிலேயே தன்னை பிரிந்து செல்ல சம்மதித்துவிட்டாளா? அப்படியென்றால் இத்தனைநாள் தன் அடிமனம் உணர்ந்தது உண்மையில்லையா? அவள் உண்மையிலேயே தன்னை விரும்பவில்லையா? அவளது நடவடிக்கைகளை வைத்து அவன்தான் தவறாக கணித்துவிட்டானா? அன்று இரவு முழுவதும் உறங்காமல் தவித்தான். அவள் வேலை செய்யும் பங்களாவிற்கு போய் பார்த்தபோது  அவள் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ போய்விட்டதாக பதில் கிடைத்தது.

மிகவும் சோர்ந்துபோய் வீடு திரும்பினான். நாளாக ஆக அவள் நினைவுகள் அதிகமாகத் தான் ஆனதே தவிர குறையவில்லை. வேறு திருமணத்தைப் பற்றி நினைக்கக் கூட அவன் தயாரில்லை. ரேணுகாதேவி மனம் உடைந்து போனார். இப்படி என்று தெரிந்திருந்தால் அந்தப் பெண்ணையே மணம் செய்து வைத்திருக்கலாமே என்று பலமுறை நினைத்து நொந்துபோனார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு போன் வந்தது. நாளை ஒரு குறிப்பிட்ட விலாசத்துக்கு தாயாரையும் அழைத்துக்கொண்டு வருமாறு ஒரு ஆண் குரல் கூறியது. அந்த விலாசம் நிலா வேலை செய்யும் வீட்டு விலாசம்தான். 

றுநாள்

கொடுத்த விலாசத்தில் சென்று காலிங் பெல் அடித்துவிட்டு காத்திருந்தனர் ஆகாஷும் அவனது தாயும் . கதவைத்  திறந்தவளைப் பார்த்து அப்படியே திகைத்து நின்றுவிட்டனர் . கோடி நிலவுகள் பிரகாசிக்கும் அதே அழகு முகத்துடன் கதவைத் திறந்தாள் நிலா. இருவருக்கும் ஆனந்த அதிர்ச்சி.

"முதல்ல ரெண்டு பெரும் உள்ளே வாங்க " வரவேற்ற பெரியவர் புதிதாய் இருந்தார்.

"சார் நீங்க யாருன்னு தெரியலையே " என்றான் ஆகாஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.