(Reading time: 8 - 16 minutes)

ன்றோர் அந்தி மாலை நேரம்

அனல் தணியும் காலம்

இரவின் மடியிலே முழுநிலவு தவழவே

இருகரங்கள் அதனை சிறைபிடிக்க முனையவே (7)

 

தரையில் தீட்டினான் நிலவை சித்திரமாய்

தடுத்து நின்றாள் அவளும் ரௌத்திரமாய் (8)

 

அனுமதி இல்லை உனக்கு என்னை வரையவே

அவன் கரங்களை அவள் கைகள் சிறை பிடிக்கவே (9)

 

தலைக்கனம் கொண்டாயோ

தண்ணிலவு நீ என்றே நினைத்தாயோ (10)

 

விலக்கி விட்டான் அவள் பிடியை

வலிக்க பற்றினான் அவள் முடியை (11)

 

சற்றே தான் அவள் துடித்தாள்

சட்டென பிடி தளர்த்தினான் (12)

 

சிறுகடி ஒன்று பதில் அளித்தாள்

சிறுவன் அவனும் சீறி நின்றான் ( 13)

 

அவள் கழுத்தில் நட்சத்திர வடிவ ஆபரணம்

அவன் பார்வையில் விழுந்தது பரிதாபம் (14)

 

அனுமதி இல்லை உனக்கு இதை அணியவே

அவன் பற்றி இழுத்தான் சிறுமி அலறவே 

அன்னையர் விரைந்து வருகவே

அவர்கள் இருவரையும் விலக்கி நிற்கவே (15)

 

பெயரில் தான் தித்திக்கும் குளிர்நிலவாய்

பார்வை செயலெல்லாம் தகிக்கும் செந்தணலாய் (16)

 

ஆகாதடி உனக்கு இத்தனை அகங்காரம்

அன்னை அதட்டவே மங்கியது ஒளிமுகம் (17)

 

கோடை விடுமுறையில் வருடம் ஒருமுறை

கிராமத்து பாட்டன் வீட்டிற்கு அவன் வருகை (18)

 

பாட்டானார் எஜமானர் அவர்தம் இளவரசன்1

பாட்டாளியின் ராஜகுமாரி ஆவாளோ சரி சமன் (19)

 

பிஞ்சு பருவத்திற்கு விளங்கவில்லை ஏதும்

பாரினிலே பரவி நிற்கும் இந்தப் பேதம் (20)

 

குழந்தைகள் சண்டையும் கோபமும் 

கனலி மறைக்கும் மேகம் போல விலகிப் போகும்

விதைக்க வேண்டாம் பேதங்கள் அவர்தம் மனதில்

வேற்றுமை விரிசல் வேண்டாம் தூய பந்தத்தில் (21)

 

அவனது அன்னை அவளை அணைக்க

அவள் அகம் புறம் விகசித்து மலர

வான் நிலவு தோற்றேனடி உன் முன் என்றே

விரைந்து ஓடி மறைந்தது மேகக்கூட்டத்தின் பின்னே (22)

 

அந்த ஒர் கணம்

வெண்ணிலா மலர் முகம்

அவன் மனதின் ஆழம்

வேரூன்றியது திண்ணம் (23)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.