(Reading time: 8 - 16 minutes)

பெதும்பை அவளோ படு சுட்டி

பண்பில் குணத்தில் வெல்லக்கட்டி (24)

 

பட்டை தீட்டிய வைரமாய் மீளி அவனும்

பார் போற்றும் விதமாய் குணநலனும் (25)

 

நீள்வட்ட பாதையில் பூமியும் சுழல

நால்வகை பருவ மாற்றங்கள் நிகழ

சற்றும் மாறாமல் நின்றது ஒன்றே

சிறுவர் இருவரின் செல்ல உரசல்களே (26)

 

மங்கையவள் முகைமடல் மெல்ல விரிய

மடம் நாணம் அவளிடம் அச்சம் கொண்டு விலக

பொலிவுடனே பவனி வந்தாள்

பார்வை தாழாது நிமிர்ந்து நின்றாள் (27)

 

மறவோன் அரும்பு மீசை முறுவல் புரிய

மதி நுட்பத்திலும் சிறந்து விளங்க 

கம்பீரமாய் வளர்ந்து வந்தான்

கர்வம் குறையாமல் நிலைத்து நின்றான் (28)

 

அன்பு பாட்டனார் மறைவு

அலைகடல் தாண்டி குடும்பம் பெயர்வு

இங்கே வருவதற்கில்லை இறுதி முறை இதுவே

இனி சண்டையிடுவான் வான்நிலவின் உடனே (29)

 

ஆண்டுக்கொரு முறை அவன் வரவை

ஆவலாய் எதிர்பார்க்கும் அப்பாவை

இனிமேல் யாருடன் தர்க்கம் செய்வாள்

இரவு வானின் மணிகளோடு யுத்தம் புரிவாள் (30)

 

முன்போர் தினம் உடைத்து விட்டான்  

மன்னிப்பை இப்பொது வேண்டி நின்றான்

மொழிந்தவன் அணிவித்தான் ஓர் ஆபரணம்

மின்னிய ஒற்றை நட்சத்திரம் அவன் ஞாபகம் (31)

 

பகல் நிலவாய் அவள் குளிர் புன்னகை

பதுங்கிக் கொண்டது அவன் ஆழ்மன குகை (32)

 

அன்று அவளும் அவன் ஓவியம் அழித்தாள்

அதற்கு வருத்தம் என்றே உரைத்தாள்

பட்டாடையில் நீட்டினாள் அவளும் ஓர் சித்திரம்

பால்நிலவும் அதன் அருகே துருவ நட்சத்திரம் (33)

 

நட்சத்திர விழிகளில் ஆச்சரிய மின்னல்

நுழைந்து இணைந்தது அவள் இதயத்துடிப்பில் (34)

 

திறவோன் திரண்டான் வாலிப விடலை

தடுமாறினான் இல்லை வஞ்சிகளின் வலை

வான் நோக்கினான் அவனைக் கண்டு நகைத்த நிலவை

வஞ்சித்தான் அந்நிலவு ஒன்றே அறியும் அவன் மனதை (35)

 

அகந்தை அழிந்திட மலர்ந்தாள் மடந்தை

அவள் படிப்பில் செலுத்தினாள் சிந்தை

என்றும் நிலைத்து நிற்பேன் உரைத்தது துருவம்

எண்ணங்களை கரங்கள் தீட்டியது நட்சத்திர உருவம் (36)

 

பட்டம் பெற்றான் காளை வான் அறிவியலில்

பதவியும் பெற்றான் விண்வெளி மையத்தில் (37)

 

அறிவை வளர்த்தாள் அவனின் அரிவை

அறிவியல் கற்பிக்கும் பள்ளி ஆசிரியை (38)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.