(Reading time: 13 - 25 minutes)

‘வேண்டாம்!!! இது என்ன பைத்தியக்காரத்தனம் .அவனை பார்த்து ஏழு எட்டு  வருடங்களுக்கு மேல் கடந்தாகிவிட்டது அவனுக்கு உன்னை அடையாளம் கூட தெரியாது.’ தன்னை தானே கட்டுப்படுத்திக்கொண்டாள் அவள்.

‘முன்பு எப்படியோ இப்போது வானத்து நிலவாய் எட்டாத உயரத்தில் அவன். அடையாளமே தெரிந்துக்கொண்டலும் புன்னகைக்க கூட மாட்டான்.’ சொல்லிக்கொண்டாள் தனக்குள்ளே.

எல்லாரும் கலைந்து செல்ல, அவர்களை வரவேற்க ஏற்பாடுகள் நடக்க, என்னதான் மனதை கட்டுப்படுத்திக்கொண்டாலும் அந்த பரப்பரப்பிலும் சின்ன தவிப்புடன் தனது கைப்பையில் இருந்த அந்த சின்ன கண்ணாடியில் தன்னை சரி பார்த்துக்கொண்டது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

விமானத்தின் வாசலில் அவளுடன் இன்னும் ஒரு  விமான பணிப்பெண் . கை நிறைய பூச்செண்டுகளுடன் இருவரும் நின்றிருக்க அவர்கள் ஒவ்வொருவராக விமானத்திற்குள் ஏறினார்கள்.

படபடவென கைதட்டல்கள் அங்கே!!! கைதட்டல்க்களுடன் கூடிய உற்சாக வரவேற்பு அவர்களுக்கு. வருபவர்களை புன்னகை முகமாக வரவேற்று பூச்செண்டு ஒவ்வொருவருக்கும் பூச்செண்டு கொடுத்துக்கொண்டிருந்தனர் இந்த இருவரும்

புரிகிறது அவளுக்கு. அவன் வந்துக்கொண்டிருக்கிறான் என தெரிகிறது அவளுக்கு. கண்ணில் படுகிறது அவனது விறுவிறு நடை. இடம் மாறி துடிக்கிறது அவள் இதயம். வந்துவிட்டான் அவர்கள் அருகே. சுவாசத்தை இறுக பிடித்துக்கொண்டு நின்றாள் அனுராதா!!!

பிஹேவ் யுவர் செல்ஃப் அனு. லுக். எனக்கு உன் மேலே கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்லை. புரிஞ்சுக்கோ.’ முன்பே தெளிவாக சொன்னவன்தானே அவன்.

அவன் மனதில் வேறே யாரோ இருக்கிறார்கள் என்பதைப்போல தானே அன்று ஆட்டம் முடிந்ததும் பேட்டியில் சொன்னான். நான் எதற்கு தேவை இல்லாமல் இப்படி தவிக்கிறேன்??? கூடாது இது தன்னை. நிதானப்படுத்திக்கொண்டு தெளிவான பார்வையுடன் நிமிர்ந்தாள் அவள்.

‘அவர்கள் அருகில் வரவும் அவனது நடையின் வேகம் கொஞ்சம் மட்டுப்பட்டது. வருபவர்கள் அனைவருக்கும் இரண்டு விமான பணிப்பெண்களும் மாறி மாறி பூங்கொத்துக்களை கொடுத்துக்கொண்டிருக்க அவனுக்கு கொடுப்பது மற்றவள் முறையானது.

அவளை அவன் பார்வை தொட புருவங்கள் ஏறி இறங்க இதழோரம் ஒரு சிறு புன்னகை குடி கொள்கிறது அவனுக்கு.

‘என்னை எங்கோ பார்த்தது போல் தோன்றுகிறதோ அவனுக்கு???’ தவித்து பொங்குகிறது அவள் உள்ளம். இருப்பினும் அவள். முகத்தில் எந்த மாற்றமும் இல்லை

‘இல்லை. இல்லை  தெரியாது!!! அவனுக்கு என்னை கண்டிப்பாக அடையாளம் தெரியாது.!!!’ மனது சொல்லிக்கொண்டிருந்தாலும், பழைய நினைவுகள் உள்ளுக்குள் பலநூறு ஓடிக்கொண்டிருந்தாலும்  எல்லாவற்றையும் உள்ளுக்குள் வைத்துவிட்டு கம்பீரமாய் அழகாய் நிமிர்ந்து அவனை பார்த்தாள் அனுராதா!!!

எப்போதும் எல்லா பயணிகளுக்காகவும் அவள் உதடுகளில் தேங்கி நிற்கும் சின்ன புன்னகை அவனுக்காகவும் விரிந்தது

அருகிருந்த இன்னொரு விமான பணிப்பெண் இவனை நோக்கி பூங்கொத்தை நீட்ட அதை மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டு அவசரமாய் அவளை நோக்கி ஓடியது அவனது பார்வை. அவனது கரம் அவளது பூங்கொத்தை நோக்கி..நீள....

‘வெல்கம் சர்..’ வெகு இயல்பாய் அவனுக்கு பின்னால் வந்த அடுத்தவனுக்கு போனது அந்த பூங்கொத்து. அதே நேரத்தில் சடக்கென எதையோ இழந்துவிட்ட பாவம் அவன் முகத்தில் பரவுவதை அவள் கவனிக்காமல் இல்லை.

ஒரு முறை அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு நகர்ந்தான் ஹரிஷ். எல்லார் முன்னிலையிலும் இப்போது எதையும் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை அவன். அவன் சற்றே அழுத்தி விடும் மூச்சுக்கூட செய்தி ஆகும் ஆபாயம் நிறையவே உண்டு.

சில நிமிடங்கள் கடக்க விமானம் கிளம்ப தயாராக விமானத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி அறிவிப்பு வர அதை சைகைகள் மூலம் பயணிகளுக்கு விளக்கிக்கொண்டிருந்தாள் அனுராதா.

அவனது இருக்கைக்கு மிக அருகில் அவள். அவனது விலகாத பார்வை அவள் மீது. எப்படியோ சற்றே தடுமாறி தடுமாறித்தான் முடித்தாள் அந்த அறிவிப்பு வேலையை!!!

விமானம் கிளம்ப தனது அடுத்த வேலைகளில் மூழ்கலானாள் அவள். ஆனால் மனம் மட்டும் அவனை நோக்கியே!!! அவனது பார்வை அவளை துரத்துவதும் புரியாமல் இல்லை அவளுக்கு.

‘என்னை அடையாளம் தெரிகிறதுதானோ இவனுக்கு??? தெரிந்தால் தெரியட்டும். நிச்சயமாய் இவனிடம் சென்று இளித்துக்கொண்டு மட்டும் நிற்க மாட்டேன்.’ உறுதி செய்துக்கொண்டாள் தனக்குள்ளே.

அடுத்து பயணிகளுக்கு காலை உணவை கொடுக்கும் வேலை அவளுக்கு, அது எப்படியோ அவனது இருக்கைக்கு அவளே செல்ல வேண்டி இருந்தது.

மிக இயல்பான புன்சிரிப்பு ஒன்றை உதடுகளுக்கு கொடுத்தபடியே உணவை அவன் மேஜையில் வைத்தாள். அவள் பேச்சை கேட்க விரும்பாத அவள் கண்கள் வெகு இயல்பாய் அவன் கண்களில் விழ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.