(Reading time: 13 - 25 minutes)

‘அனுராதா... செயின்ட் ஜான்ஸ்... ரைட்???’ அவர்கள் கல்லூரி பெயரையும் சொல்லி பளீரென கேட்டான் அவளை பார்த்து.

‘எஸ் ...’ என்றாள் இமைக்க மறந்து. இத்தனை வருடங்கள் கழித்து இத்தனை அருகில் அவன் முகம். உள்ளமெங்கும் இதமாய் ஒரு சந்தோஷம்.

பழைய நினைவுகள் கண் முன்னே ஊஞ்சலாடியதைப்போல் ஒரு பாவத்தில் மெல்ல சிரித்தான் அவன். ‘இன்னும் எல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கு அனு..’ வெகு இதமான குரலில் அவன் சொல்ல

பிஹேவ் யுவர் செல்ஃப் அனு. எனக்கு உன் மேலே கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்லை.’ அவனது பழைய வார்த்தைகள் அப்போது சரியாய் ஞாபகம் வந்து தொலைத்தன அவளுக்கு. சட்டென மாற்றம் கொண்டது அவள் முகம்.

.‘நானும் இன்னும் எதுவும் மறக்கலை. நான் ஒண்ணும் பழைய அனு இல்லை ’ அடி மனதில் இருந்த வலியின் பிரதிபலிப்பாய் பட்டென வெளி வந்து விட்டன அவள் வார்த்தைகள்.  

அவள் வார்த்தைகளில் ஒரு இறுக்கமான தொனி எப்படி வந்து ஒட்டிக்கொண்டது என்று அவளுக்கே புரியவில்லைதான். சொல்லிவிட்டு அவன் முகம் பாராமல் அங்கிருந்து அகன்றிருந்தாள். விமானம் மும்பையில் தரை இறங்கும் நேரம் வரும் வரை அவன் எதிரில் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தாள் அவள்.

‘கேபின் க்ரூ இன் ஸ்டேஷன் ஃபார் லேண்டிங்’ விமானியின் அறிவிப்பு. அமர்ந்தாள் அவளுக்குரிய இடத்தில். விமானம் தரை தொட இறங்க தயாராகிக்கொண்டிருந்தான் அவன். தேடினான் அவளை. இறங்கும் வரை தேடிக்கொண்டே இருந்தான் மறுபடியும்!! மறுபடியும்!!!

ஆம்!!! நிராகரிப்பு என்பது மறக்க முடியாத வலிதான் போடா!!! மருகிக்கொண்டாள் தனக்குள்ளே!!. அவன் கண்ணில் படாத தூரத்திலிருந்து பார்த்திருந்தாள் அவனையே.

‘இப்படி பட்டென உடைத்திருக்ககூடாதோ அவன் மனதை. வாழ்த்தி இருக்கலாமோ என்னவனை??? சென்ற ஆட்டத்தில் நன்றாக விளையாடினாய் என்று கூட பாராட்டி இருக்கலாம்!!! அதில் என்ன குறைந்துவிடுவேனாம் நான்??? அவன் கண்ணிலிருந்து மறைந்த பிறகு உறுத்தியது அவளுக்குள்ளே.

இரண்டு நாட்களாக இப்படியே உழன்றுக்கொண்டிருந்து மனம். இரண்டு நாட்களுக்கு பிறகு மறுபடியும் அவள் சென்னை வந்து இறங்கிய போது அங்கே அவளது அலுவலகத்தில் அவளுக்காக காத்திருந்தது அந்த கடிதம்.

‘எனக்கா??? எனது அலுவலக முகவரிக்கு கடிதம் அனுப்புபவர்கள் யாராம்??? யோசித்தபடியே அதை அவள் ஆராய அதன் முகப்பில் சிரித்தது அந்த பெயர் ‘ஹரிஷ் சுவாமிநாதன்!!!’ என்ன இருக்கிறது இதற்குள்ளே??? பரபரத்தது அவளுக்குள்ளே. ஆனால் எல்லார் முன்னிலையிலும் பிரிக்க தோன்றவில்லை.

கடிதத்தை கைப்பைக்குள் தணித்துக்கொண்டு, படபடப்பை தனக்குள் புதைத்துக்கொண்டு எல்லாரிடமும் சிரித்து விடைப்பெற்று பெரியப்பா வீட்டுக்கு வந்து, தனது அறைக்குள் புகுந்துக்கொண்டு, கட்டிலில் அமர்ந்துக்கொண்டு பிரித்தாள் அந்த கடித்ததை.

அதற்குள் இருந்தன உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான இரண்டு அனுமதி சீட்டுக்கள். அதனுடனே சென்னையிலிருந்து மும்பைக்கான இரண்டு விமானடிக்கெட்டுகளும் நம்பவே முடியவில்லை அவளால். அதனோடு அவனது கையெழுத்தில் ஒரு கடிதம். இரண்டே வரிகள் அதில்.

‘ப்ளீஸ்,,, வா.. அனும்மா... எனக்கு உன்னோட விஷஸ் வேணும்... நீ என் கூட இருக்கணும்... ஒவ்வொரு நிமிஷமும் உன்னை எதிர்ப்பார்ப்பேன்... ஹரிஷ்!!!’ அதனோடு அவனது கைப்பேசி எண்ணையும் கொடுத்திருந்தான்.

இருபதாவது முறையாக அந்த கடிதத்தை படித்து முடித்தாள். ஆனந்த மழையில் நனைகிறது இவள் உள்ளம். உடல் முழுவதும் ஒரு சந்தோஷ நடுக்கம்.

‘போய்விட்டு வந்தால் தான் என்ன???

‘இல்லை வேண்டாம்!!! அதெல்லாம் நான் வர மாட்டேன். கண்டிப்பாக மாட்டேன்.’ கால்களை மடக்கிக்கொண்டு அமர்ந்து முகத்தை புதைத்துக்கொண்டாள். இருப்பினும் அந்த சந்தோஷ படபடப்பு மட்டும் குறையவில்லை.

‘ப்ளீஸ் அனும்மா..’ அவன் காதோரம் வந்து அழைப்பது போல் ஒரு பிரமை.

‘முடியாது. வர மாட்டேன்!!’ அவள் வாய்விட்டு சொல்லிக்கொள்ள அப்போது தட்டப்பட்டது அறைக்கதவு.  அவசரமாக அந்த கடிதத்தை தலையணைக்கு அடியில் ஒளித்து வைத்துவிட்டு கதவை திறந்தாள் அனுராதா.

‘ஹாய்...’ அவளை பார்த்து சிரித்தன அந்த வசீகர கண்கள். ‘மேடம் எப்போ வந்தீங்க???’ கேட்டது அந்த உற்சாக குரல்.

‘வந்திட்டியா???” வா வந்து தொலை..’ இது இவள்.

‘நீ எவ்வளவு திட்டினாலும் நான் வருவேனே..’ பதில் வந்தது அந்த ஜீவனிடமிருந்து.

கடிதத்தை மட்டுமே தலையணைக்கடியில் மறைத்திருந்தாள். அந்த டிக்கெட்டுகள் படுக்கை மேலேயே கிடந்ததே!!!

‘ஹேய்... என்னதிது??? வோர்ல்ட் கப் டிக்கெட்டா??? உனக்கு எப்படி கிடைச்சது???’

‘அய்யோ .. அது.. அது... வந்து.. என் ஃப்ரெண்ட்.. அனுப்பினது .’ பரபரத்தாள் அனுராதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.