(Reading time: 7 - 13 minutes)

அவர் கேட்கும்போதே ஒருவாரமா என்று எண்ணியவளாக அவன் முகம் பார்த்தாள்.

செழியன் வாய் பதில் சொன்னாலும் கண்களோ மலரிடத்தில் செய்தி தெரிவிக்கும் முகமாக அவள் கண்களை நோக்கியது..

“இல்லை மேடம்.. இந்த முறை ஒரு வாரம் போகவில்லை”

“ஏன்..? எப்போதும் இது ரொம்ப முக்கியம்.. ஊருக்கு சென்று நண்பர்கள் எல்லாம் பார்த்து விட்டு, விழாக்களில் கலந்து கொண்டு வருவது வழக்கம் தானே.. அதோடு அது உனக்கும் பிடிக்குமே..”

“ஆமாம்.. ஆனால் இந்த முறை அப்பா வேறு பிளான் வைத்து இருக்கிறார்.. அதில் இருந்து எஸ்கேப் ஆகத்தான் நான் ஒரு வாரம் செல்லவில்லை..”

“என்ன பிளான்.. ? உன்னை யார் கிட்டயாவது மாட்டி விட ஏற்பாடு பன்றரா?”

இதை கேட்டதும் மலரின் பார்வை சரேலென்று உயர்ந்து செழியனை நோக்கியது.. இத்தனை நேரம் அவர்கள் இருவர் உரையாடலில் காதை வைத்து இருந்தாலும், நேராக பார்க்காமல், சுற்றுபுறம் பார்த்தபடி இருந்தாள். இப்போது அவளின் பார்வை செழியனிடம் சென்றது..

செழியனும் மலரிடம் பார்வை வைத்தபடி சற்று தயக்கத்தோடு

“ஆமாம்.. மேடம்.. அதனால் தான் நான் செல்லவில்லை..”

“நல்ல விஷயம் தானே செழியன்.. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடலாமே..”

“ஹ்ம்ம்.. என்னோட தீசிஸ் முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கு.. அது முடியற வரை என்னால் எதுக்கும் டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது.. அதான் நான் மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கேன்.. ஆனால் அவர் கொஞ்சம் சீரியசா இருக்க மாதிரி தெரியுது .. “

“ஹ்ம்ம் .. அதுவும் சரிதான்.. அப்போ நீ இந்த முறை ஊருக்கு போகபோரதில்லையா?”

“போறேன்.. மேடம்.. ஆனால் கரெக்டா ரெண்டு நாள் மட்டும் தான்.. அப்போ அங்கே திருவிழா வேலை நடக்குமே.. அதுக்குள்ளே நான் போயிட்டு வந்துடுவேன்.”

“ஹ்ம்ம் ..சரிதான்.. “ என்று முடிக்கவும் ஸ்டாப் ரூம் வரவும் சரியாக இருக்க, அதற்கு மேல் எதுவும் பேசாமல் தங்கள் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர்.

மலருக்கு செழியனிடம் தனியாக பேச வேண்டும் போல் இருந்தது.. ஆனால் அன்று முழுதும் அந்த சந்தர்ப்பம் அமையவில்லை..

மாலையில் வழக்கம் போலே பார்கிங்கில் இருந்து வண்டி எடுக்கும் போது செழியனும் வர, மலர் நின்றாள்.

அவள் அருகே சென்றவன்

“என்ன ஆச்சும்மா..காலையில் பேசியதையே நினைத்துக் கொண்டு இருக்கிறயா?”

“ஹ்ம்ம்.. உங்க அப்பா தீடிர்னு உங்களுக்கு கல்யாணம் பேச போறதா சொல்றீங்களே.. உங்களுக்கு டென்ஷன் இல்லியா?”

“ஹேய்.. அது எல்லாம் என்னை மீறி எதுவும் நடக்காது.. உனக்கும் தெரிந்து இருக்கட்டுமே அப்படின்னு தான் சொன்னேன்..”

“இல்லை .. உங்க அப்பாவ பார்த்தா கொஞ்சம் அவர் நினைச்சது நடக்கணும் நினைக்கிற டைப் மாதிரி தெரியுது.. நீங்க ஈஸியா அவர சமாளிக்க முடியும்னு நினைக்கறீங்களா?”

“அவர் பையன் நானு.. எனக்கும் அந்த பிடிவாதம் இருக்காதா... ?நான் எல்லாம் பார்த்துக்கறேன்.. இந்த ஆறு மாசம் முடிஞ்ச உடனே.. ரெண்டு பேர் வீட்லேயும் பேசலாம் சரிதான..?”

மலர் அரைகுறையாய் சரி என்று தலை ஆட்டினாள்.

“அப்புறம் மலர், நான் இன்னிக்கு மறுபடி தீசிஸ் விஷயமா ஊருக்கு போறேன்.. நான் திரும்பி வரும்போது காலேஜ் பொங்கல் லீவ் விட்ருப்பங்க.. சோ நானு அப்படி எங்க ஊருக்கு போயிட்டு பொங்கல் கழிச்சு வரேன் சரியா?” என வினவ

மலரின் மனதில் ஏதோ ஒன்று சொல்ல தெரியாத உறுத்தல் தோன்றியது.. இருந்தாலும் எதவும் சொல்லாமல் சரி என்று தலை ஆட்டி கிளம்பினாள்.

ஹாய் பிரெண்ட்ஸ் ..

எல்லோரும் தீபாவளி நல்ல கொண்டாடி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..

நன்றி.. 

 

தொடரும்!

Episode # 22

Episode # 24

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.