வருவது யாரென்று கண்காணித்த மர்மமனிதன் பூபதியைப் பார்த்து, "இவனா? இவன் எதற்கு இங்கு வந்து கொண்டிருக்கிறான்" என்று மனதில் எண்ணிக்கொண்டே பூபதியைத் தடுத்து நிறுத்தினான்.
"என்ன, இந்தப் பக்கம்?" என்று சற்று கடுமையான குரலில் கேட்டான்.
"இந்தப் பக்கம் வரக் கூடாதென்று யாரும் உத்தரவு பிறப்பிக்கவில்லையே" என்று பூபதியின் பதிலைக் கேட்ட மர்ம மனிதன் முகம் சிவநதான். இருந்தும் தன் சினத்தை அடக்கி, "சரி, எதற்காக வந்திருக்கிறாய்?" என்று சற்று பொறுமையாகக் கேட்டான்.
"ஒருவனைத் தேடி வந்திருக்கிறேன். அவனைத் தெரியுமா உனக்கு?"
"பேரைச் சொன்னால் தானே தெரியும்" என்று அதட்டலோடு மர்ம மனிதன் கேட்டான்.
"நீ எதற்கு காலில் காயம் பட்டது போல் குதித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று பூபதி திமிர் கலந்த தொனியுடன் கேட்டான்.
மர்ம மனிதன் பூபதியைப் பார்த்து முறைத்தான்.
"முறைக்காதே. சம்யுக்தன் எங்கு காவல் புரிவான் என்று உனக்குத் தெரியுமா?"
"அவனை எதற்குத் தேடுகிறாய்?"
"அதெல்லாம் உனக்கு எதற்கு? அவனுடன் சேர்ந்து இன்று காவல் புரிந்து பூங்கொடியை மணக்கப் போகிறேன்."
'சரியான அடிமுட்டாள்' என்று மனதில் நினைத்துக்கொண்டே, "சம்யுக்தன் காட்டுப் பகுதியில் காவல் புரிகிறான். நீயும் சென்று சேர்ந்துகொள். நான் வந்து வழி அனுப்புகிறேன்"
"எனக்கு வழி தெரியும். நானே செல்கிறேன்" என்று கூறி பூபதி குதிரையை விரட்டினான்.
"இறப்பதற்கு இவ்வளவு அவசரமா" என்று பூபதி செல்வதைப் பார்த்துக்கொண்டே மர்ம மனிதன் முணுமுணுத்தான்.
தொடரும்...
{kunena_discuss:1135}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.