(Reading time: 12 - 24 minutes)

சில நாட்களுக்குப் பிறகு, இரவு வேளையில்

“கௌஷிக்… சாங்க் கம்போசிங்க் எல்லாம் முடிஞ்சிட்டு… ஷூட் மட்டும் தான் பாக்கி… சாங்க் ஒருதடவை கேட்டுப்பார்க்குறீங்களா?..”

அவர் தயங்கி தயங்கி கேட்டிட, அவனோ “நீங்க கேட்டீங்கல்ல சார்… அதுவே போதும்…” என அவன் அகன்றிட, அவன் பின்னேயே சென்றார் அவர்…

“கௌஷிக்… உங்களுக்கு இப்போ எதுவும் முக்கியமான வேலை இருக்கா?...”

“இல்ல சார்… வீட்டுக்குப் போறேன்…”

“அப்போ எங்கூட கொஞ்சம் வரீங்களா?..”

“எங்க சார்?...”

“வாங்க கௌஷிக்…”

“இல்ல சார்… நான்…” என இழுத்தவனை, சம்மதிக்க வைத்து அவர் அழைத்துச் சென்றார் ஓர் இடத்திற்கு…

பார்ட்டி நடப்பது போல் இருந்திட்ட அவ்விடம் கௌஷிக்கின் விழிகளை சுருக்கிட வைத்தது…

“சார்… நான் கிளம்புறேன்… இது ஏதோ பார்ட்டி மாதிரி தெரியுது…”

“பார்ட்டி தான்… ஆனா நீங்க நினைக்குற மாதிரி பார்ட்டி இல்ல… வாங்க தம்பி…”

அவனின் கைப்பிடித்து இழுத்துச் சென்றார் அவர் கிட்டத்தட்ட…

“கௌஷிக்… மீட் மிஸ்டர் விக்கி… அவர் அட் டைரக்டர்…”

அவர் அறிமுகப்படுத்த, அவனும் சிறு புன்னகையோடு கைகுலுக்கினான்…

வரிசையாக ஒவ்வொருவராக அவர் அறிமுகப்படுத்த, அவனும் ஒரு பார்மாலிட்டிக்கு புன்னகையை முகத்தினில் ஒட்டிக்கொண்டு அங்கே நின்றிருந்தான்…

பின்னர் சற்று நேரத்தில், “எக்ஸ்கியூஸ்மி…” என்றவாறு அங்கிருந்து அகன்று சென்று சற்று ஓரமாக நின்றான்…

கை தானாக மணியை பார்த்துவிட்டு, போனை எடுத்து பெயரை தேடி எடுத்தான்…

“கௌஷிக்… கண்ணா…”

தாயின் முகம் ஸ்கிரீனில் தெரிய, “அம்மா…” என்றான் அவன்…

“சாரிம்மா… வீட்டுக்கு வர கொஞ்ச நேரம் ஆகும்னு நினைக்கிறேன்…”

“சரிப்பா… பரவாயில்லை… ரொம்ப வேலையா?...”

“இல்லம்மா.. சுரேஷ் சார் தான் இங்க ஒரு பார்ட்டிக்கு கூட்டிட்டு வந்திருக்குறார்…”

“சரிப்பா… பார்ட்டி முடிஞ்சதும் வா… மெதுவா பார்த்து வா… நைட் நேரம் வேற…”

தாயின் அக்கறை புரிய, “சரிம்மா… நீங்க சாப்பிட்டீங்களா?...” என கேள்வி கேட்டான் அவன்…

“9 மணிக்கே சாப்பிட்டேன்… அதையும் கூட நீதான போன் பண்ணி நியாபகப்படுத்தின…”

கல்யாணி கூறியதும், இதழ்களில் தவழ்ந்த புன்னகையினை படரவிட்டு அவன் தாயினைப் பார்த்திட, அவரும் புன்னகைத்தார்…

“சரிம்மா… நீங்க தூங்குங்க… லேட் ஆகிடுச்சு… நான் பார்த்து வீட்டுக்கு வந்திடுவேன்…”

அவன் தாயினை நேரத்தினை காட்டி தூங்க சொல்ல, அவருக்கும் உடல் அசதியில் தூக்கம் வந்தது…

“சரிப்பா…” என்றவர் போனை கட் செய்துவிட, தாயின் சிரித்தமுகம் ஒன்றே கண்ணுக்குள் நிற்க, அப்படியே ஒரு ஓரமாய் சென்று மரத்தில் சாய்ந்தவாறு நின்றுவிட்டான் கௌஷிக்..

நேரம் எப்படி போனது என்றே தெரியாமல் சென்றுவிட, சட்டென தோளின் மீது ஒரு கரம் விழுகவும், திரும்பி பார்த்திட்டான் அவன்…

விக்கி அங்கே நின்றிருக்க, சிநேகமாய் புன்னகைத்தான் கௌஷிக்…

“சார்… உங்களைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்… ஆனா இன்னைக்குத்தான் உங்களை நேர்ல பார்க்குற சான்ஸ் கிடைச்சிருக்கு… ரொம்பவே சந்தோஷம் சார்… யங்க்ஸ்டர்ஸ்க்கு நீங்க எப்பவுமே ஒரு ரோல்மாடல் தான்… எனக்கும் கூட… இந்த சின்ன வயசில இவ்வளவு பெரிய உயரம் எப்படி சார்?...”

விக்கி கேள்வி கேட்டிட, “நான் இன்னும் முதல்படியில நிக்குறதா தான் நான் நினைக்குறேன்…” என்றவன், விக்கியைப் பார்த்துவிட்டு, “இது உங்க ஃபர்ஸ்ட் அட் ஆ?...” என நிறுத்த,

“எப்படி சார் கரெக்டா கேட்குறீங்க?...” என வியந்தான் விக்கி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.