(Reading time: 12 - 24 minutes)

தனதறையில் எதுவுமே பேசாமல் அமர்ந்திருந்த சாருவின் அருகே வந்தமர்ந்தான் தீபன்…

சில நொடிகள் அவள் முகத்தினையே பார்த்தவன், “என்ன?...” என்பது போல் புருவம் உயர்த்தி கேட்டிட,

“ஒன்றுமில்லை…” என்பது போல் தலையசைத்து கண்மூடி சோபாவில் சாய்ந்து அமர்ந்தவள், தீபனின் வார்த்தைகளில் சட்டென விழிகளை திறந்தாள்…

“அவர் பேரு கௌஷிக்….”

அவனின் வார்த்தைகளில் விழி விரிய, “யா………..ர்…….. பே……..ரு…..” என அவள் திக்கித் திணறிட,

“உன் யோசனையில இப்போ யாரு இருக்குறாரோ… அவர் பேரு…” என்றான் அழுத்தம் திருத்தமாய் தீபன்…

பார்ட்டியில் அத்தனை நேரம் பேசிய போதும், கௌஷிக்கின் பெயரை அவர்கள் உச்சரித்துக்கொள்ளவில்லை….

அவனது பெயர் தெரியாத அவள், அது பற்றிய யோசனையில் இருந்ததும் உண்மையே… எனினும் அவள் யோசனை அவனின் மாற்றத்தினையே யோசித்துக்கொண்டிருந்தது பலமாய்…

இப்பொழுது தீபன், சட்டென பெயரையும், அவளின் யோசனைப் பற்றியும் கூறிட, தூக்குவாரிப்போட்டது அவளுக்கு…

அவளின் அந்த அழகான முகத்தில் இருந்த பயம் கலந்த வருத்தம் தீபனுக்கு புரிந்திட,

தமக்கையின் கைகளைப் பிடித்துக்கொண்டான் அவன்…

“தீபா….. நான்…..” அவள் பேச முடியாது தடுமாற,

“அன்னைக்கு நாம கச்சேரிக்கு போகும்போதே, அவரை கவனிச்சேன்… ஆனா பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கலை… அவரோட பார்வை உன் மேலயும், என் மேலயும் இருந்ததை என்னால உணர முடிஞ்சது… அதுமட்டும் இல்லாம அவரைப் பார்த்துட்டு வந்தபிறகு இதே மாதிரி அன்னைக்கும் நீ யோசனையோட உட்கார்ந்திருந்த… நான் வந்து கச்சேரி புக் பண்ணியிருக்காங்கன்னு சொன்னப்போ கூட நீ பதிலே பேசலை… அப்பவே தெரிஞ்சது அவர் உன்னை பாதிச்சிருக்குறார்னு…”

தீபன் தெளிவாய் நடந்ததை உரைத்திட, அதிர்ச்சியில் ஆழ்ந்து போனாள் சாரு…

“இன்னைக்கு பார்ட்டியில ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துகிட்ட பார்வையிலேயே தெரிஞ்சுகிட்டேன் இரண்டு பேரும் ஒருத்தர்கிட்ட இன்னொருத்தரை தொலைச்சிட்டிருக்கீங்கன்னு….”

தீபன் உண்மையை, மறைக்காது கூறிட, சாருவின் விழிகளிலோ நீர் சூழ்ந்து நிறைந்து நின்றது விழத் தயாரானபடி…

சட்டென தமக்கையின் முகம் பற்றியவன், “ஹேய்… லூசு அக்கா… ஏன் அழுற?....” என கேட்டிட,

அவள் எதுவுமே பேசிடவில்லை… அவளின் கண்ணீர் மட்டும் அவனது கரங்களைத் தொட்டது…

“சாரு… இப்போ அழுறதை நிறுத்தப்போறீயா இல்லையா?...”

அவன் சற்றே கோபமாக கேட்டிட, அவள் நிமிர்ந்தாள் பட்டென…

“எதுக்கு அழுற?... அத முதல்ல சொல்லு?...”

“நான்… நான்…”

அவள் திணற, “நீ ஏன் அழறன்னு நான் சொல்லவா?... தம்பி கிட்ட இதுவரை எதுவுமே மறைச்சதில்லையே… இப்போ திடீர்னு புதுசா ஒருத்தர் கிட்ட மனசு தன்னை அறியாமலேயே போகுதுன்னு சொன்னா, எப்படி எடுத்துப்பான்?... என்ன நினைச்சுப்பான்னு தான யோசிக்குற?....” என்றான் அவன் அவளின் முகம் பார்த்தபடி…

அவள் நினைத்துக்கொண்டிருப்பதை அவன் கூறிட, அவள் விழிகளில் மேலும் நீர் பெருகியது…

“இல்ல தீபா… என்னால இதை சாதாரணமா எடுத்துக்க முடியலை… அவரைப் பார்த்த்திலிருந்து நான் நானா இல்லை… என்னால இதை உங்கிட்ட சொல்லவும் முடியலை… சொன்னாலும் நீ எப்படி எடுத்துப்பேன்ற பயமும் வேற… அதுமட்டுமில்லாம, என் மனசு தான் அவரைத் தேடி போகுது… அவருக்கு என் மேல எதுவும் அபிப்பிராயம் இருக்கா இல்லையான்னு தெரியாம என்னால இந்த விஷயத்தைப் பத்தி உங்கிட்ட பேச முடியாதுன்னு தோணுச்சு… ஆனா இப்போ நீ, நான் சொல்லாமலே எல்லாத்தையுமே தெரிஞ்சிகிட்டு எங்கிட்ட கேட்டதும் என்னால, அந்த உணர்வை எப்படி சொல்லுறதுன்னு தெரியலைடா…”

சிறுகுழந்தையாய், அவள் மழங்க மழங்க விழித்தபடி கூறிட,

“லூசு….” என்றபடி அவளை அணைத்துக்கொண்டான் அவன்…

“நீ எனக்கு அக்காதான்… ஆனா அது இரண்டாவது… முதல்ல நீ எனக்கு ப்ரெண்ட்… அது உனக்கும் தெரியும்தான?...”

அவன் கேட்க, அவள் ஆம் என தலையாட்டினாள்…

“என் ப்ரெண்டோட உணர்வுகளை என்னால புரிஞ்சிக்க முடியும் சாரு… சரியா?... அதுவும் இல்லாம, எனக்கு தெரிஞ்சு அவர் மனசிலயும் நீ ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்குற…. ஒரு ஆணா அதை என்னால உறுதியா சொல்லமுடியும்… அதனால நீ தேவை இல்லாம மனசை குழப்பிகிட்டு இருக்காத…”

“என்ன சொல்லுற தீபா?...”

“உண்மை சாரு… அவர் மனசுல நீ இல்லன்னா, நான் உங்கிட்ட இப்போ அவர் பத்தி பேசியிருக்கவே மாட்டேன்…”

அவன் கூறியதும், வியப்போடு அவனைப்பார்த்தவளிடம், “ஆமா சாரு… அவர் மனசுல நீ இல்லன்னும் போது, உங்கிட்ட அவர் பத்தி பேசி, உன் மனசுல அவரைப் பத்தின எண்ணத்தை நான் விதைக்கிறது சரியில்லையே…”

அவன் அழுத்தமாய் உரைத்திட, அவளுக்கும் அது சரியென்றே பட்டது… எனினும், அவன் மனதில் அவள் இல்லாது போனாலும், அவனைப் பற்றிய எண்ணங்களை அவளால் தூர விலக்கிட முடிந்திருக்காது என்ற உண்மையும் அவளுக்கு அந்நேரத்தில் புரியவர, மனதின் பதிலானது அவளுக்கு, தன்னுள் கௌஷிக்கின் இடத்தை தெளிவுபடுத்த, அதிர்ச்சியும் வியப்பும் ஒருங்கே அவளுள் அலையென எழுந்திட, அவள் அதில் மூழ்கி கொண்டிருந்தாள், கரை சேரும் எண்ணமே இல்லாது…

அதே காதல் அலையில் அந்நேரம் அவளுடன் சேர்ந்து பயணித்துக்கொண்டிருந்தான் கௌஷிக்கும் அவளைப் போன்ற மன நிலையுடனே, அவளில் எண்ண அலைகளில் நீந்தி மூழ்கியபடி, கரை சேர்ந்திடும் எண்ணமே இல்லாது….

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

எப்படி இருக்கு இந்த அத்தியாயம்?...

படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை கூறுங்கள்…

மீண்டும் அடுத்தவார அத்தியாயத்தில் சந்திக்கலாம்…

 

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.