(Reading time: 8 - 15 minutes)

கோபமும், எரிச்சலுமாக அவன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்த வேளை, அவள் போனை கட் செய்துவிட்டு, அவனை தடுத்தாள்…

“விக்கி… என்னாச்சு?...”

“நத்திங்க்… நான் கிளம்புறேன்…”

“விக்கி… சொல்லுன்னு சொல்லுறேன்ல…”

அவள் குரல் ஓங்கி ஒலித்திட, அவனுக்கு கோபம் உச்சம் தொட்டது…

“நான் கிளம்புறேன்னு சொன்னேன்…”

கோபத்தினை அடக்குவது அவன் குரலிலேயே தெரிந்திட, புன்னகைத்தவண்ணம்,

“என்னாச்சுன்னு கேட்டேன்….” எனவும், அவன் அங்கிருந்து நகர முயல, அவன் கைகளைப் பிடித்து தடுத்தாள் அவள்…

“கையை விடு…”

அவன் கிட்ட்த்தட்ட சீற்றத்துடன் கூற, அவள் மறுத்தாள்…

“இப்போ என்ன நடந்துச்சுன்னு இவ்வளவு கோபம் படுற?...”

அவள் மீண்டும் இலகுவாக கேட்டிட, அதுவரை அவன் காத்திட்ட பொறுமை அனைத்துமே காற்றில் பறந்த்து…

“கையை விடு….”

அவன் அந்த இடமே அதிரும்படி கத்த, அங்கிருந்த அனைவருமே அவர்களை தான் பார்த்தனர்…

“எல்லாரும் பார்க்குறாங்க விக்கி… உட்காரு… ப்ளீஸ்…”

அவளின் குரலில் இதுவரை இருந்த அந்த விளையாட்டுத்தனம் மாறி, இப்போது சீரியஸ்னெஸ் தென்பட, அவனால் ஏனோ இலகுவாக முடியவில்லை…

“நானா இங்க வரேன்னு சொன்னேன்?... நீதான வர சொன்ன?... இப்போ வந்ததும் லேட்… இதுல ஏன் லேட்டா வந்தேன்னு ஒரு ரீசன் கூட நீ சொல்ல வேண்டாம், பட் நான் இங்க இருக்கிறேன்னாவது பார்த்தீயா?... உன் இஷ்டத்துக்கு நீ பாட்டுக்கு பேசிட்டே இருக்கத்தான் இங்க வந்தேன்னா, அப்போ என்னை எதுக்கு கூப்பிட்ட?..”

அவன் குரல் ஓங்கி ஒலித்திட, அவள் அவனை சமாதானப்படுத்த முயன்றாள்…

“போன் தான விக்கி பேசினேன்?...”

அவள் சற்று இறங்கி பேசிட, அவனுக்கோ மேலும் கோபம் அதிகமானது…

“நீ இங்கயும் போன் தான் பேசுவேன்னா, அப்போ என்னை வர சொல்லியிருக்கக்கூடாது…”

“என்ன விக்கி இப்படி பேசுற?..”

“வேற எப்படி பேச சொல்லுற?... நானும் பார்த்துட்டு தான் இருக்குறேன்… வர வர நான் சொல்லுற எதையுமே கேட்கக்கூடாதுன்னு முடிவெடுத்து தான இதெல்லாம் பண்ணுற?...”

“நீயா அப்படி நினைச்சிக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்?...”

“அப்படியா?... சரி… இனி என் எண்ணத்தை மாத்திக்கிறேன்… கண்டிப்பா மாத்திக்கிறேன்…”

அவன் குரலில் ஒரு உறுதி தென்பட, அனைவரின் பார்வையும் இன்னமும் அவர்கள் மேலேயே இருப்பதை உணர்ந்து அவள் அவனிடம் தன்மையாக பேச ஆரம்பித்தாள்…

“சரி விக்கி… அதை அப்புறம் பேசிக்கலாம்… முதல்ல நீ உட்காரு…”

அவள் எதற்காக அமர சொல்லுகிறாள் என்றறிந்தவனுக்கு மேலும் எரிச்சல் உண்டாக,

“நிஜமாவே நீ நான் முதல்ல பார்த்த அனிதா தானா?.. சுயநலமா, எப்போ இருந்து யோசிக்க ஆரம்பிச்ச அனிதா நீ?...”

அவன் ஆத்திரத்துடன் கேள்வி கேட்டிட, அவளும் படக்கென்று பதில் கூறிவிட்டாள்…

“முதல்ல பார்த்த அனிதாவை தான் உனக்கு பிடிக்கலையே… அப்புறம் என்ன?... அவளையும் பிடிக்கலைன்னு சொல்லிட்ட… இப்போ இவளையும்…”

அவள் விரக்தியோடு சொல்லிவிட்டு, “அப்புறம் என்ன சொன்ன?... சுயநலமா?... அது எனக்கு இருக்கா?... இல்லை உனக்கா?... நல்லா யோசிச்சுப்பாரு விக்கி… உன்னோட சுய லாபத்துக்காக என் காதலை நிராகரிச்சவன் நீ தான்… நான் இல்லை…”

அவளுக்கும் வார்த்தைகள் அந்நேரம் தடித்திட, அவனும் வார்த்தைகளை சிதறவிட்டான்…

“ஆமாடி…. எனக்கு என் லைப் தான் முக்கியம் தான் போதுமா?... நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்ல, அப்புறம் எதுக்கு விடாம என் பின்னாடியே சுத்திட்டு இருக்குற?... என்னை மாதிரி இளிச்சவாயன் உனக்கு யாரும் கிடைக்கமாட்டான்னு தான?... அப்போ நீ சுயநலவாதியா?... இல்லை நானா?...”

கேள்வியை அவளிடமே அவன் திருப்பிட, அவளுக்கு கண்கள் கலங்கியது…

“இளிச்சவாயனா?...”

“ஆமா… என்னை காதலிக்கிறேன்னு சொல்லிட்டு இப்போ புது புது நபர்களுடனான பழக்கம் தான உனக்கு பெரிசா தெரியுது… இதையெல்லாம் எந்த காதலன் பொறுத்துப்பான்?... நான் உனக்கு நல்லது எது, கெட்டது எதுன்னு எடுத்து தான சொல்லுறேன்… கண்டிக்கலையே… அதான் என்னை நீ இளிச்சவாயனா பார்க்குற…”

“விக்கி போதும்… உன் பேச்சு சரியில்லை…”

“எனக்கும் தான் நீ பண்ணுறது எதுவுமே சரின்னு படலை… அதுக்கு நான் என்ன பண்ணுறது சொல்லு அனிதா?...”

“சரி இல்லாத அளவுக்கு அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?...”

“ஓ… அப்போ தப்பு நடந்தா தான் சரி பண்ணுவ?... அதுக்கு முன்னாடியே சொன்னா கேள்வி தான் கேட்பல்ல?... சரி… உன் இஷ்டப்படி இருந்துக்கோ… எனக்கென்ன?...”

“விக்கி மூடி மறைச்சு எதையும் பேசாத… ஓபனா சொல்லு…”

“புதுசா உங்கூட நடிச்சானே, அந்த கரண், அவன் உன்னை விரும்புறான்… அது இண்டஸ்ட்ரீ முழுசும் பரவியிருக்கு… அது உனக்கு தெரியுமா தெரியாதா?...”

“தெரியும்….”

“தெரியுமா?...”

அவன் அதிர்ச்சியுடன் கேட்டிட,

“இதெல்லாம் சகஜம்… இதை எல்லாம் பெரிசா எடுத்துகிட்டா இங்க வாழ முடியாது…”

“அதை நீ வேணும்னா பெரிசா எடுத்துக்கலாம்… என்னால முடியாது… பிகாஸ் ஐ லவ் யூ….”

அவனும் தன் காதலை ஆத்திரத்தின் மத்தியில் வெளிப்படுத்திட, அவள் ஒருகணம் அதிர்ந்தாள்…

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.