(Reading time: 15 - 30 minutes)

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க.. அவங்களுக்கு காலையில் கடைக்கு கிளம்பும் முன்னாடி வீட்டுலே எங்க கூட கொஞ்ச நேரம் இருக்கணும்.. அதான் நாங்க அங்க போனோம்னா, எங்களை பார்த்துட்டு கடைக்கு புறப்பட தயாரகிருவார்.. அதான் போன் செஞ்சு எங்கன வந்துட்டு இருக்கோம்ன்னு கேக்குறார்..”

அதற்குள் அவர்கள் திருச்சி நெருங்கி இருக்கவே,

“நாங்க வேணா இங்கே இறங்கிக்கவா அத்தை.. இங்கிருந்து ஆட்டோ பிடிச்சு போயிக்கிறோம்.. நீங்க நேரா வீட்டுக்கு போனீங்கன்னா சீக்கிரம் போகலாமே..” என்று வினவ

பார்வதியோ “ஏன்மா அப்படி சொல்ற? உங்கள பாதியில இறக்கி விடவா, அங்கிருந்து கூட்டிகிட்டு வந்தோம்.. வீட்டிலே கொண்டு விட்டுட்டு போறோம். நீ பேசாம இரு” என

செழியனும் மலரை கண்ணாடி வழியாக முறைத்தான். அவனை பார்த்தவள், அவனின் முறைப்பில் அடங்கி, அதற்கு மேல் அதை பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

சற்று நேரத்தில் மலரின் வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன், இவர்கள் இறங்க கதவை திறந்தான்.

வள்ளி “அக்கா.. உள்ளார வாங்க.. “ என்று அழைக்க,

“இருக்கட்டும்ங்க.. அவங்க அடுத்த போன் போடறதுக்குள்ளே நாங்க வீட்டுக்கு போகணும்..”

இப்போது ஆச்சி “ என்ன பார்வதி இது.. ? எங்க வீட்டு வாசலுக்கு வந்துட்டு ஒரு வாய் காபி தண்ணியாவது குடிச்சிட்டு போகாம, நாங்க விட்ருவோமா? வள்ளி நீ கதவை திறந்து உள்ளார போ .. அவங்க வருவாங்க..” என

“பெரியம்மா.. நமக்குள்ளே என்ன வேண்டி கிடக்கு? உங்க வீடு இருக்க இடம் பாத்துட்டேன்.. இனி இந்த பக்கம் வாரேயிலே நம்ம வீட்டுலே வந்து விருந்தே சாப்பிட்டு போறேன்.. இப்போ நான் கிளம்புதேன்.. “ என்று சற்று கெஞ்சலாகவே கூறவும், சரி என்று வழி அனுப்பி வைத்தார்.

இப்போது முறைப்பது மலரின் முறை ஆனது.. அவளின் பார்வையை உணர்ந்தவன், மற்றவர் அறியாதவாறு “சாரி” என்று வாய் அசைத்தான். அதை கண்டாலும், ஒன்றும் சொல்லாமல், அவர்களை வழி அனுப்பி வைத்தாள் மலர்.

தங்கள் வீட்டிற்கு சென்ற செழியனும் அவன் அம்மா பார்வதியும் வீட்டினுள் செல்ல, அவன் அப்பா கடைக்கு புறப்பட தயாராக காத்து இருந்தார்.

“ஏம்மா.. சாமிய நல்லா கும்பிட்டு வந்தீங்களா? எதுக்கு இந்த வயசிலே ராத்திரி முழுசும் முழிச்சிட்டு கிடக்கிற.. ? அப்படி இருந்தாதான் கேக்குறத கொடுப்பேன்னு சாமி சொல்லிச்சா என்ன?” என்று சற்று எரிச்சலோடு சொல்ல,

“சாமி அப்படி சொல்லலை.. நாம நம்ம குடும்பத்தோட சந்தோஷமா இருக்கதுக்குன்னு நேரம் ஒதுக்கரோம்லே.. அதே போலே சாமிக்கும் வருஷத்துலே ஒரு நாள் கொடுப்போமே.. நமக்கு சாமி தான் எல்லாம்.. சாமிக்கு எல்லாம் நாம தான்.. அப்படிங்கப்போ அவருக்காக ஒருநாள் முழிச்சு இருந்தா என்ன?”

“அது சரி.. அதுக்கு கோவிலே கதின்னு விடிய விடிய கிடக்கணுமா என்ன? வீட்டிலே இருந்து கும்பிட்டா பத்தாதா?”

“அங்கன போனா.. நாலு பேரை பார்க்கலாம்.. பழகலாம்.. வீட்டுக்குள்ளே உக்கார்ந்து குண்டு சட்டியிலே குதிரை தான் ஒட்டனும்.. நீங்க என்னத்துக்கு இந்த வரத்து வாரீங்கன்னு தெரியும்.. இதோ உங்க காபி .. “

“அது சரி.. உனக்குத்தான் தெரியுமே.. இந்நேரம் நீ இல்லைனா நான் ஒன்னும் செய்துகிட மாட்டேன்னு.. பொறவு ஏன் இவ்ளோ நேரந்கழிச்சு அம்மையும், மவனும் பைய வாறீங்க..”

“அங்கன.. நம்ம செழியன் கூட வேலை பாக்குதே. அந்த புள்ள மலரு.. அன்னைக்கு அவன் காலேஜ் விழாவிலே கூட பார்த்தோமே.. அவங்களும் கோவிலுக்கு வந்து இருந்தாங்க.. கிளம்பும் போது அந்த புள்ள அப்பாவுக்கு ஏதோ வேலை வந்துட்டுதாம்.. அதான் நாங்க அவங்கள கொண்டு வீட்டுலே விட்டுட்டு வந்தோம்..” என்று சாதாரணமாக சொன்னவர்,

“நல்ல குடும்பம்ங்க.. நல்ல பழகறாங்க.. அவுங்களும் நம்ம பக்கமாட்டம் தான் போலே இருக்கு.. பேசாம நம்ம செழியனுக்கு இந்த புள்ளைய பேசலாமா.. ? அவன் படிப்புக்கேத்த பொண்ணு, அதே சமயம் நல்ல குணமாவும் இருக்கு.. என்ன சொல்லுதீங்க?” என்று கேட்க,

அப்பா, பையன் இருவருக்கும் புரை ஏறியது.. செழியன் மனதில் “ஆஹா.. நம்ம அம்மாவா இது? பையன் என்னோட மனச புரிஞ்ச மாதிரி பேசறாங்களே.. அம்மா என் தெய்வமே.. இந்த பிட்ட அப்படியே எக்ஸ்டென் பண்ணி, கல்யாண பேச்சு வார்த்தையா மாத்திரு” என்று தன் அன்னைக்கு மனசுலே கோவில் கட்டிக் கொண்டு இருந்தான்.

செழியன் அப்பாவோ “இவ தெரிஞ்சு செய்யரளா? தெரியாம செய்யராளேன்னு தெரியலையே.. நானே அவன் அந்த பொண்ண கண்ணு வச்சிருக்கன்னு தெரிஞ்சும், அத வளரவிடக் கூடாதுன்னு பார்த்துகிட்டு இருக்கேன்.. இவளே ஊதி பெரிசாகிருவா போலேவே..” என்று மனத்தினுள்  தன் மனைவிக்கு லட்சார்ச்சனை நடத்தினார்.

“இப்போ எதுக்கு இந்த பேச்சு? உள்ளார போயி வேலைய பாரு” என்று அனுப்பி வைத்தார்.

அதற்குள் தன் அப்பாவின் மனநிலை புரிந்தவன், தன்னிடம் அவர் பேச வருவதற்குள் எஸ்கேப் ஆகி விட எண்ணி தன் அறைக்கு சென்று விட்டான் செழியன்.

அவன் செல்லுவதை பார்த்தவர், தன் மனைவி அருகில் சென்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.