(Reading time: 14 - 27 minutes)

“நரேஷ் வீட்டில் எடுக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில், சிறுவர் வன்கொடுமை சட்டம், பெண்கள் வன்புணர்வு சட்டம் என்று நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...”

“இந்த வழக்கு போடப்பட்டது நரேஷிற்கு தெரியுமா...”

“எங்களுக்கு ஆதாரங்கள் அனைத்தும் கிடைத்து, அதன் உண்மைத்தன்மை ஆராய சிறிது நாட்கள் பிடித்ததால் நேற்று மாலைதான் நாங்கள் வழக்கை பதிவு செய்தோம்... இன்று காலையில் அவரிடம் கோர்ட் வருவதற்கு முன்பு இதை பற்றிய விசாரணை மேற்கொள்ள அவகாசம் இல்லாததால் அவரிடம் தெரிவிக்கப்படவில்லை....”

“ஒரு மனிதனுக்கு தான் எதற்காக கைது செய்யப்பட்டோம் என்பது கூடத் தெரிவிக்காமல் இருக்கிறது காவல்துறை... அதுவும் என் கட்சிக்காரர் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்... அவருக்கே இந்த நிலைமை.. அப்பொழுது சாதாரண மக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள் யுவர் ஹானர்...”

“நரேஷ் தரப்பு வக்கீல் காவல்துறையைப் பற்றி அவதூறு பேசுகிறார்... நாங்கள் ஒரு விஷயத்தை மறைக்கிறோம் என்றால் அதில் கண்டிப்பாக அர்த்தம் இருக்கும்... நீதிபதி அவர்களே நாங்கள்  அவர் மீது போட்ட பிற வழக்குகளின் ஆதாரங்கள் அனைத்தையும் உங்களிடம் சமர்ப்பித்துள்ளேன்... அவை அனைத்தையும் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....”

“காவல்துறை கேட்டுக்கொள்வதற்கிணங்க நரேஷின் அனைத்து வழக்கையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிடுகிறேன்....”

“நடுவில் குறிக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும் மாண்புமிகு நீதிபதி அவர்களே...”,நீதிபதி உத்தரவு வாசிக்கும்போது மிகச் சரியாக பாரதி குறிக்கிட்டாள்... இது என்ன என்பதுபோல் நீதிபதி பார்க்க....

“யுவர் ஹானர்... இந்த வழக்கை விசாரிக்கும்போது பார்வையாளர்களையோ, ஊடகத்துரையையோ இந்த வழக்கில் சம்மந்தப்படாத வழக்கறிஞர்களையோ அனுமதிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....”

“எதனால் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா....”

“இந்த வழக்கில் பல இளம் மற்றும் சிறு பெண்களின் வாழ்க்கை அடங்கி உள்ளது யுவர் ஹானர்... ஊடகத்துறைக்கு  இதைப் போன்ற செய்திகள் கிடைத்தால் அல்வா போல...... அதையே திருப்பி திருப்பி போட்டு தங்கள் TRP ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வார்கள்... ஆனால் இந்த ஆதாரங்கள் வெளியில் வந்தால் அந்தப் பெண்களின் நிலை.. அதனால்தான் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறுகிறேன்.....”

நீதிபதி பாரதி கேட்டுக்கொண்டதை ஏற்றுக்கொண்டு பிற்பகல் இரண்டு மணிக்கு மறுபடி கோர்ட்டில் ஆஜராகுமாறு கூறி உத்தரவிட்டார்....

சந்திரன், பாரதி, மற்றும் சாரங்கன் மதிய உணவு உட்கொள்ள வெளியில் வர, பாரதியின் கைப்பேசியில் ராஜா நாற்காலியுடன் வைத்து கட்டப்பட்டிருப்பதுபோல் ஒரு புகைப்படம் வந்தது....

அவள் அதை பார்த்து பதைக்கின்ற அதே நேரம் எங்கிருந்தோ சுடப்பட்ட குண்டு நேரடியாக சந்திரனின் தோள்பட்டையைத் தாக்கியது....

தொடரும்

Episode 29

Episode 31

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.