இவ்வளவு நேரம் இங்கு நடந்த பிரச்சனையில் அருள்மொழியை காணுமே என்று அப்போது தான் புகழேந்தி அவளை தேடினார். இலக்கியாவிடம் “அருள் எங்க?” என்றுக் கேட்டதும்,
“உள்ள இருக்கா பெரியப்பா” என்று அவள் கைக்காட்டினாள்.
புகழேந்தி உள்ளே வந்ததும் ட்ரஸ் டேபிள் முன்பு உட்கார்ந்திருந்த அருள் எழுந்து நின்றாள்.
“மகி செஞ்சது உனக்கு கஷ்டமா இருக்காடா..?” என்று கேட்டதற்கு அவள் மௌனமாகவே இருந்தாள்.
“இங்கப் பாருடா.. ரெண்டுமுறையும் இப்படி நடந்துப் போச்சேன்னு ஃபீல் பண்ணாத.. உனக்கென்ன குறை, உனக்கு இவங்க ரெண்டுப்பேரையும் விட நல்ல மாப்பிள்ளையா அமைஞ்சு, லைஃப் நல்லா இருக்கும் பாரு..” என்று அவள் தலையை தடவியப்படியே சமாதான வார்த்தைகள் பேசிவிட்டு சென்றார். ஆனால் தன் தங்கையிடம் இப்படி பேச முடியுமா? என்று தான் அவருக்கு புரியவில்லை.
புகழேந்தி வெளியே போனதும் அறிவழகனும் இலக்கியாவும் உள்ளே வந்தனர்.
“அருள்.. வெளிய இவ்வளவு பிரச்சனை போய்க்கிட்டிருக்கு, நீ உள்ளேயே இருந்துட்ட” என்று இலக்கியா ஆதங்கப்பட,
“நீ பெரியப்பாக்கிட்ட பேசியிருந்தா மகி வெளிய போயிருக்க மாட்டான் இல்ல..” என்று அறிவு கேட்டான்.
“அவன் செஞ்சது தப்பு.. நம்மலல்லாம் விட சுடர் அவனுக்கு முக்கியமா போயிட்டால்ல.. அதுக்கு தான் மாமா இந்த முடிவு எடுத்திருக்கார்.”
“அப்போ மகி வெளியப் போனதுல உனக்கு எந்த வருத்தமும் இல்லையா?”
“அவனுக்கு என்னைப் பத்தி கவலை இருந்துச்சா.. அப்போ நான் மட்டும் எதுக்கு அவனுக்காக வருத்தப்படனும்..?”
“இப்படி பேசறன்னா.. அப்போ மகியை நீ காதலிச்சியா?”
“என்ன உளர்ற அறிவு.. எனக்கு கருத்து தெரிஞ்ச வயசுல இருந்து நான் மகி கூடவும் உன் கூடவும் ஒன்னா பழகியிருக்கேன். விளையாடி இருக்கேன். உங்கக் கூட தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணியிருக்கேன். ஆனா இதுவரைக்குமே என் மனசுல இப்படி ஒரு எண்ணம் உங்களைப்பத்தி தோணினதில்ல.. இப்பவும் அம்மா மாமா சொன்னதால தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.
என்னோட கோபம் மகி சுடரை கல்யாணம் செஞ்சுக்கிட்டது தான், அவ எனக்கு என்ன செஞ்சான்னு மகி மறந்துட்டான் இல்ல.. அவனுக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்கிறதுல விருப்பம் இல்லன்னா அதை என்கிட்ட வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம். சாய்ந்தரம் நேருக்கு நேரா கேட்டப்போ கூட சொல்லலாம். ஆனா அப்போ சுடர்க்கிட்ட கோபமா பேசிட்டு இப்போ அவ கழுத்துல தாலிக்கட்ட வேண்டிய அவசியம் என்ன? மகிக்கு சுடரை அந்த அளவுக்கு பிடிக்குமா? சொல்லு..”
“அது.. அது..” என்று தயங்கிய அறிவு,
“ஏன்னு தெரியல சுடர் இங்க வந்ததுல இருந்தே அவனுக்கு அவ மேல ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு.. அதான் இப்படி அவன் அவளை ஊருக்கு அனுப்பாம இருக்க செஞ்சு வச்சிருக்கான்..” என்று கூறினான்.
உண்மையிலேயே மகிழ்வேந்தன் சுடரொளியை அதிகமாக காதலிப்பதால் தான் இப்படி ஒரு காரியத்தை அவன் துணிந்து செய்தான். ஆனால் அதை நேரடியாக அருள்மொழியிடம் சொல்வதற்கு அறிவழகன் யோசித்ததால், அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு இப்படி கூறினான். ஆனால் அவன் அப்படி சொல்லியிருக்கக் கூடாதோ? அப்படியே அவன் சொன்னாலும், கொஞ்சம் யோசித்து பார்த்தாலே அருள்மொழிக்கு மகி சுடர் மீது வைத்திருக்கும் காதல் புரிந்திருக்கும்? ஏன் நிதானாமாக யோசித்தால் சுடரொளிக்கும் இந்த விஷயம் புரிந்திருக்கும்? ஆனால் இருவரும் யோசிக்க தான் தயாராக இல்லை.
ப்ரண்ட்ஸ் வெகேஷன்க்காக வெளிய வந்திருக்கேன். அதனால இப்போதைக்கு சிறிய அப்டேட் தான்..அடுத்தவாரம் கூட கொடுக்கப் பார்க்கிறேன். நன்றி.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.