(Reading time: 18 - 36 minutes)

வன் மிகவுமே துடித்துப் போய்விட்டான். அவள் சொன்னது போல் கொஞ்சம் தாமதமாக சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒருவேளை அவள் லண்டனுக்கு தானே போகிறாள். போனால் போகட்டும் என்று கோபத்தோடு அமைதியாகவே இருந்திருந்தால்? நினைத்து பார்த்தாலே பயங்கரமாக இருந்தது.

அவள் தந்தையின் புறகணிப்பைக் கூட அவளால் தாங்கிக் கொள்ள முடிந்ததே? அப்படி இருக்க நான் மட்டும் என்ன ஸ்பெஷல் அவளுக்கு? புரியவில்லை அவனுக்கு.. அவளது காதலுக்கு தகுதியானவன் தானா? அதுவும் புரியவில்லை. இனியாவது அவளை வருத்தப்படாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

கையில் வைத்திருந்த அந்த விஷப்பாட்டிலை முதலில் அங்கிருந்த குப்பை கூடையில் தூக்கிப் போட்டான். இன்னும் கூட அவளது உதடு எதையோ முனகிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அவள் பேச்சு சரியாக புரியவில்லை. மெதுவாக அவள் தலைமாட்டில் அமர்ந்தப்படி அவளது தலையை கோதிவிட்டான். சிறிது நேரத்தில் அவள் ஆழ்ந்து உறங்க ஆரம்பித்தாள். அப்போது பார்த்து அறிவழகனிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வர, எங்கே சத்ததில் முழித்துக் கொள்வாளோ என்று உடனே அழைப்பை துண்டித்தான்.

“ஒருவேளை இங்க வந்துட்டானா? இல்லை வீட்ல இருந்து தான் பேசறானா?” என்ற சிந்தனையோடு சென்று அவன் கதவை திறக்க, அறிவோ வாசலில் தான் நின்றிருந்தான்.

“கதவை தட்டினா சுடர் பயந்துட போறான்னு தான் போன் செஞ்சேண்டா..” என்று அறிவு விளக்கம் கொடுக்க, ஷ் என்று வாயில் விரல் வைத்து அவனை அமைதியாக சொன்னவன், மெதுவாக கதவை சாத்தினான்.

“நல்லவேலை தான் செஞ்சடா.. சுடர் தூங்கிட்டா.. ஆனா கொஞ்சம் அசைஞ்சு அசைஞ்சு படுத்திருந்தா.. அதான் போனை கட் பண்ணிட்டேன்..”

“அதனால என்ன பரவாயில்ல..”

“வீட்ல எல்லாம் ஓகே தானே..”

“அதான் போன்ல சொன்னேனே எல்லாம் ஓகே தான்.. எல்லாம் சாப்பிட்டு படுக்க போயிட்டாங்க.. எழில் அத்தையும் மாமாவும் நான் கிளம்பனப்ப தான் கிளம்பி வீட்டுக்கு போனாங்க.. அத்தை உன்கிட்ட காலையில பேசறேன்னு சொன்னாங்க.. அப்புறம் பெரியம்மாக்கிட்டேயும் பேசிடு.. எல்லோருக்கும் முன்ன எதுவும் பாதிக்காத மாதிரி காமிச்சிக்கிட்டாலும், நீ வீட்டை விட்டு போனது அவங்களுக்கு கஷ்டமா தான் இருக்கு..”

“ம்ம் சரிடா.. அப்புறம் அருளுக்கு போன் செஞ்சேன். ஆனா அவ போனை எடுக்கவே இல்லை”

“அதான் சொன்னேனே உன்மேல ரொம்ப கோபத்துல இருக்காடா.. அது சாதாரண கோபம் இல்லை உடனே சரியாக.. அவ கோபம் தீர கொஞ்ச நாளாவது ஆகும்.. அதுவரைக்கும் பொறுமையா இரு..

அப்புறம் நான் வரும் போது கீழ ஹவுஸ் ஓனர் முழிச்சிக்கிட்டு தான் இருந்தாங்க.. உங்க விவரத்தை சொன்னேன்.. என்னன்னு யோசிச்சு முடிவெடுக்க ரெண்டு மூனு நாளாகும்.. அதுவரைக்கும் இந்த ரூம்ல தங்கிக்க நீங்க அனுமதி கொடுக்கனும்ணு கேட்டேன்.. அவங்களுக்கும் ஓகே தான், ஆனா..”

“ஆனா என்னடா..”

“இந்த ரூம் எப்பவும் பேச்சலர்ஸ்க்கு தான் வாடகைக்கு விடுவாங்களாம்… அங்க ஒரு பொண்ணு தங்கியிருந்தா வெளி ஆளுங்கல்லாம் யாரு என்னன்னு கேக்க ஆரம்பிச்சிடுவாங்க.. எல்லோருக்கும் நிலைமையை விளக்கி சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா? சொன்னா தான் எல்லோரும் புரிஞ்சிப்பாங்களா? தேவையில்லாத பேச்சு வருமாம்.. அதுவும் சுடரை தான் தப்பா பேச சான்ஸ் இருக்குன்னு சொல்றாங்கடா..

அதனால கீழ பின்னாடி போர்ஷன் காலியா தான் இருக்காம்.. அதுல உங்களை இருந்துக்க சொன்னாங்க.. வாடகைக்குன்னு இருந்தாலும் ஓகே தானாம்.. இல்ல ஏதாவது முடிவு எடுக்கற வரைக்கும் தங்கிக்கிட்டாலும் பரவாயில்லையாம்.. நாம என்பதால வாடகை ஏத்தாம ஏற்கனவே கொடுத்தவங்க வாடகையே கொடுத்தா போதும்னு சொல்றாங்க.. அட்வான்ஸ் கூட கம்மியா கொடுத்தா போதுமாம். இல்ல கொஞ்ச நாள் தங்கிக்கிறதா இருந்தாலும் ஒன்னும் பிரச்சனையில்லைன்னு சொல்லிட்டாங்க.. அவங்க மெதுவாவே வேற ஆளுக்கு வாடகைக்கு விட்றாங்களாம்.. நீ என்ன சொல்ற?”

“நான் எப்படியோ ஏதாவது வீடு பார்த்து போகலாம்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்கேண்டா.. எத்தனை நாளானாலும் சுடர் அவங்க வீட்டுக்கு போக மாட்டேன்னு பிடிவாதம் தான் பிடிப்பா.. அதனால இந்த ஐடியா பெட்டர் தான்.. எப்படியோ வீடு தேடினா அட்வான்ஸ், வாடகைன்னு கணக்கு போட்டு பார்த்தா, இவங்க கம்மியா தானே சொல்றாங்க.. அதனால இங்கேயே இருக்கலாம்னு தான் தோனுது.. இங்க இருந்து நம்ம ரெஸ்ட்டாரண்ட், சுடர் காலேஜ் எல்லாமே கிட்ட தான், சுடரும் இங்க அடிக்கடி வந்ததால இங்க அவளுக்கு பழக்கம் தான்.. அதேபோல ஹவுஸ் ஓனரும் நமக்கு தெரிஞ்சவங்க தான் அதனால இந்த ஐடியாவே ஓகே தாண்டா..”

“அதெல்லாம் சரி தாண்டா.. ஆனா வீடு கொஞ்சம் சின்னது தாண்டா.. பெட்ரூம் கிச்சன்ல்லாம் சின்னதா இருக்கும்.. அட்டாச்ட் பாத்ரூம்ல்லாம் இல்ல.. வீட்டுக்கு வெளிய தான் வரணும்.. சுடருக்கு செட்டாகுமாடா..”

“காலையில கேப்போம்.. அவளுக்கு ஓகேன்னா பேசலாம்.. இல்லன்னாலும் வேற வீடு பார்க்கற வரைக்கும் அவங்க சொன்ன மாதிரி இருந்துக்கலாம்.. அதுக்க்கேத்த பைசா கொடுத்திடுவோம்..”

“அப்ப ஓகே சுடர்க்கிட்ட பேசிட்டு சொல்லு.. அவங்கக்கிட்ட பேசிடலாம்..”

“சரிடா காலையில் பேசுவோம்..”

“சரி ஒரு பெட்ஷீட் கொடு, நான் இப்படியே படுத்துக்கிறேன்.. நீ உள்ள போய் படு..”

“இல்லடா.. நானும் இங்கேயே படுத்துக்கிறேன்..”

“ஹே தனியா வீடு பார்த்து குடித்தனமே போகப் போறீங்க அப்புறம் என்னடா.. உள்ள போய் படுக்கறதானே..”

“ஹே நான் வீட்ல சொல்லிட்டு வந்தது தான்.. அருள் கல்யாணம் முடிஞ்சு, எங்க கல்யாணம் ஊரறிய நடக்கற வரை நாங்க எங்க வாழ்க்கையை ஆரம்பிக்க போறதில்ல.. சுடரும் அதைத்தான் விரும்புவா.. ஆனா அதுவரைக்கும் நாங்க ரோட்லயா இருக்க முடியும்.. இருக்க வீடு வேண்டாமா? அதனால நான் இன்னைக்கு இங்கேயே படுத்துக்கிறேன்.. நீ பேசாம தூங்கு” என்றவன், சத்தமில்லாமல் உள்ளே சென்று இருவருக்கும் தலையணையும் பெட்ஷீட்டும் எடுத்துக் கொண்டு வந்தவன், அந்த பால்கனியிலேயே விரித்து போட்டு பேசாமல் படுத்துக் கொண்டான். அறிவழகனும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவனும் அமைதியாக படுத்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.