(Reading time: 26 - 52 minutes)

‘அவர் இப்போ நல்லா இருக்கார் ஹரிஷ். ஷங்கரும் அண்ணியும் என்னை விட வந்தாங்க. என்னை அங்கே ரோட்டிலேயே விட்டுட்டு அவங்க கிளம்பிடறதா பிளான். ஆனா வழியிலே ஷங்கருக்கு ஏதோ வேலைன்னு கமிஷனர் கூப்பிட்டார்னு போயிட்டான் இவங்களை என்னாலே தனியா அனுப்ப முடியலை ஹரிஷ். சாரி ஹரிஷ். நான் காலையிலே அனுப்பறேன் ஹரிஷ் ’ அவள் படபடக்க

‘தட்ஸ் ஒகே’ என்றான் கீதாவின் பக்கமே திரும்பாமல் ‘நீ எதுவம் சாப்பிட்டியா? சாப்பிட்டிருக்க மாட்டே. இங்கே ரூமிலேயே உனக்கான ட்ரெஸ் எல்லாம் இருக்கு.. சீக்கிரம் ஃப்ரெஷ் ஆகிட்டு வா. சேர்ந்து சாப்பிடலாம்’ என்று சொல்லிவிட்டு நகரப்போனவனின் கை பற்றிக்கொண்டாள் அனு.

‘ரொம்ப ரொம்ப சாரி எல்லாத்துக்கும். சும்மா ராணி மாதிரி வந்து இறங்கி இருக்கணும் எல்லார் முன்னாடியும். இப்போ பைத்தியக்காரி மாதிரி வந்து இறங்கி இருக்கேன்’

‘நீ இப்பவும் ராணிதான்டி அனும்மா’ என்று அவள் கன்னம் தட்டி புன்னகைத்தான் ஹரிஷ். ‘இந்த ட்ரெஸ், நகை, அந்தஸ்து, பணம் எல்லாத்தையும் பெருசா நினைச்சு பந்தா பண்ணிட்டு இருந்த ஹரிஷ் போலிஸ் ஸ்டேஷன்லே கைதிகளோட கைதிகளா கிடந்து மூணு நாள் அடி வாங்கினப்போவே செத்து போயிட்டான். இப்போ இந்த ஹரிஷுக்கு வாழ்க்கைன்னா என்னன்னு புரிஞ்சுடுச்சு. இது வேறே ஹரிஷ். உண்மையான அன்புக்காக மட்டுமே ஏங்குற ஹரிஷ். இந்த பக்குவத்தை எனக்கு கொடுத்ததுக்கு நிறைய பேருக்கு நான் தேங்க்ஸ் சொல்லணும்’ என்றபடியே ஒரு ஆழ்ந்த மூச்சுடன் மெல்ல கண்களை நிமர்த்தி அவன் கீதாவை பார்த்த ஒற்றை பார்வை கீதாவை சுக்கல் சுக்கலாக கிழித்து எறிந்தது.

‘நீ ரொம்ப யோசிக்காம சீக்கரம் ரெடி ஆகிட்டு சாப்பிட வா’ அனுவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தான் ஹரிஷ்.

‘என்னடா நடக்குது? எதிரில் வந்தவனை பார்த்து சீறினார் அப்பா. அவர் கீதாவைதான் சொல்கிறார் என்று நன்றாக புரிந்தது அவருக்கு.  

‘அப்பா... எதுவுமே யாருமே வேணும்னே செய்யலை. சூழ்நிலைகள்பா. விடுங்க’ என்றான் நிதானமாக. நடந்தவற்றை விளக்கவும் செய்தான் அவருக்கு.

‘கதை எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அது இருக்கட்டும் ஒரு பக்கம். ஆனா என் வார்த்தைக்கு என்னடா மரியாதை கொடுக்கறீங்க எல்லாரும்? என்னதான் இருந்தாலும் அவ உன் ஃப்ரெண்ட்தானே. அதான் விட்டுக்கொடுக்காம பேசறே?

‘அப்பா என்னப்பா நீங்க? உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க. உங்களை விட அவ எனக்கு முக்கியமாபா?. கண்டிப்பா இல்லைன்னு உங்களுக்கே தெரியும். ஆனா இந்த ராத்திரி நேரத்திலே அவ இங்கே இருக்க கூடாதுன்னு விரட்டி விட்டு சீன் போட நான் விரும்பலை.. இருந்திட்டு காலையிலே போகட்டும்பா’

‘காலையிலேன்னா கல்யாணம் முடிஞ்சதும் இல்லையா?

‘நீங்க சொல்றதுதான்பா. நீங்க அவளை காலையிலே விடிஞ்சதும் அனுப்ப சொன்னா அனுப்பிடறேன்பா. சொல்லுங்க’ என்றான் அவர் முகத்தை பார்த்தபடியே..

அனுப்பிவிடு என அப்போதே அவர் உறுதியாக சொல்லி இருக்க வேண்டும்தானே. சொல்லவில்லை.

‘இத்தனை வருஷத்திலே நல்லா பேச கத்து வெச்சிருக்கேடா’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர்.

அடுத்த சில நிமிடங்களில் மயில் வண்ண ஜரிகை சேலை சரசரக்க அதற்கேற்ற நகைகளுடன் பூச்சரங்களும் கூந்தலில் விளையாடிக்கொண்டிருக்க பளிச்சென இறங்கி வந்தாள் அனுராதா.

அவன் யாருடனோ பேசிவிட்டு விலக ‘ஹரிஷ்...’ அவனருகில் வந்து அவள் அழைக்க திரும்பியவனின் இமைகள் கீழிறங்க மறுத்தன.

‘நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். நீ எனக்காக ஒரு விஷயம் செய்யேன் அருகில் வந்தவளின் காதில் மெல்ல கிசுகிசுத்தான்

‘என்ன சொல்லு ஹரிஷ் செய்யறேன்’

‘ஒரே ஒரு முத்தம் கேளேன்’ ப்ளீஸ்...’ அவன் கெஞ்ச முகத்தில் பூத்த வெட்க பூக்களுடன் அவன் கையை கிள்ளினாள் நறுக்கென.

‘உனக்கு வேறே வேலையே கிடையாதா? முதல்லே உங்கப்பா எங்கேனு சொல்லு வந்ததிலிருந்து அவரை பார்க்கவே இல்லை.’

அவன் அழைத்து செல்ல அவர் முன்னால் சென்று நின்றாள் அவள். என்னதான் கோபம் இருந்தாலும் அவள் முகத்துக்கு நேரே காட்டும் எண்ணம் ஏனோ வரவில்லைதான் அவருக்கு. புன்னகைதான் மலர்ந்தது அவர் முகத்தில்.

அவர் பாதம் தொட்டு வணங்கிவிட்டு ‘சாரி அங்கிள். நான் வர ரொம்ப லேட் ஆகிடுச்சு. மெஹெந்தி ஃப்ங்ஷன்னுக்கு வர முடியலை அங்கிள்’ என நடந்ததை விளக்கி சொன்னாள் அனுராதா.

‘சரி விடும்மா. இப்போ தாத்தாக்கு பரவாயில்லையா? கேட்டுக்கொண்டார் அவர்.

அப்போதாவது சொல்லி இருக்க வேண்டாமா அவர். கீதாவை திருப்பி அனுப்பி விடு என? சொல்லவில்லை. நான் முன்னமே ஒரு முறை சொல்லி இருக்கிறேனே அதை அவள் நினைவில் வைத்துக்கொண்டு நடக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் அவருக்கு.

ங்கே ஆட்டத்தின் நடுவே இரண்டரை நிமிட இடைவெளி முடிந்து விளையாட்டுக்கு திரும்பி இருந்தனர் ஆட்டக்காரர்கள். உள்ளுக்குள் இருந்த தவிப்பு கொதிப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு பந்து வீச தயாரானான் ஹரிஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.