"ஆமா அண்ணா", என்று சிரித்தாள் காயத்ரி. "சரி அது வரைக்கும் ரெஸ்ட் எடுங்க", என்று ஷியாம் சொன்னதும் அனைவரும் அவரவர் அறைக்கு சென்று விட்டார்கள்.
ஷியாமோ நேரடியாக காவ்யாவின் அறைக்குள் நுழைந்து விட்டான். அவனை பார்த்து திகைத்தவள் "என்ன? என்ன ஆச்சு?", என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.
"என்ன? என்ன ஆகணும்?", என்று கேட்டு கொண்டே கதவை தாளிட்டவன் அவளை நெருங்கினான்.
"என்னோட ரூம்க்கு எதுக்கு வந்தீங்கன்னு கேட்டேன்", என்று சொல்லி கொண்டே பின்னே நடந்தாள்.
"எல்லார் முன்னாடியும் நான் வேண்டாம்னு சொல்ற? நீ எப்படி அப்படி சொல்லலாம்?"
"இங்க பாருங்க ஷியாம். என் மனசுல பட்டதை சொன்னேன். இதுக்காக இப்படி எல்லாம் உள்ள வந்து கிட்ட வர கூடாது", என்று அவள் சொல்லும் போது சுவரோடு பல்லி மாதிரி ஒட்டி இருந்தாள் காவ்யா.
அவனும் அவளை நெருங்கி இரு பக்கமும் தன்னுடைய கையை வைத்து சிறை செய்திருந்தான். சிறிது அசைந்தாலும் அவனை தீண்டி விடுவோம் என்பதால் அசையாமல் இருந்தாள் காவ்யா.
"மனசுல பட்டதை சொல்லுவியா? அதை எல்லாம் ஏத்துக்க முடியாது. நீ என்னோட பொண்டாட்டி. என் தங்கச்சி உன்னை அண்ணின்னு தான் சொல்லுவா. நீயா எப்படி அப்படி சொல்லலாம்"
"நான் உங்களை எல்லாம் லவ் பண்ண மாட்டேன். நான் லவ்வே பண்ண மாட்டேன்"
"உங்க அம்மா அப்பா பாக்குற பையனை கட்டிக்கிட்டு லவ் பண்ணுவ தான?"
"தெரியுதுல்ல? அப்புறம் எதுக்கு இப்படி இம்சை பண்றீங்க? நகருங்க"
"ஏய் லூசு, உன்னோட அம்மா அப்பா பாக்குற பையன் நானா இருந்தா???"
ஆச்சர்யமாக அவனை பார்த்தாள் காவ்யா. "என்ன முழிக்குற? உங்க வீட்ல என்னை மாப்பிள்ளையா செலெக்ட் பண்ணா உனக்கு என்னை பிடிக்கும் தான?"
"ம்ம்", என்று முனங்கினாள் காவ்யா.
"அப்படியா? அப்ப மட்டும் உனக்கு எதுக்கு பிடிக்கும்?"
"ஏன்னா, எங்க அம்மா அப்பா உங்களை செலெக்ட் பண்ணுவாங்க. நீங்களும் படிச்சிருக்கீங்க? நல்ல வேலைல இருக்கீங்க? அதை விட அழகாவும் இருக்கீங்க? அப்புறம் என்ன? எனக்கும் பிடிக்கும்"
"அட பாவி, பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லி நான் அழகா இருக்கிறதை எல்லாம் கவனிச்சிருக்க?"
"அதெல்லாம் அப்படி தான். விடுங்க, நீங்க"
"அதெல்லாம் முடியாது. வேணும்னா நீயே ஓடி போ"
"இப்படி நின்னா எப்படி போறதாம்?"
"போகலைன்னா அப்படியே இரு. ஆனா நான் எதாவது செஞ்சா எதுவும் சொல்ல கூடாது"
"ஏதாவதுன்னா?"
"அது எப்படி சொல்றது? இதோ இப்படி இன்னும் கிட்ட வரலாம். உன்னை இப்படி பிடிக்கலாம்", என்று சொல்லி அவள் இடுப்பில் கை வைத்தான். அதிர்ச்சியாக அவனை பார்த்து விழித்தாள் காவ்யா. அவன் கை அவள் சுடிதாரின் மேல் இருந்தாலும் கூட அவளுக்கு ஒரு மாதிரியான உணர்வை கொடுத்தது.
அதுவும் அவனுடைய நெருக்கம், அவன் கண்களில் இருந்த மயக்கம் அனைத்தும் அவளை சுயநினைவையே மறக்க வைத்தது.
தன்னையே மறந்து அவனை பார்த்த படி இருந்தாள் காவ்யா. அவள் கண்களில் மயக்கத்தை கண்ட ஷியாமும் அடுத்த நொடி அவளை இறுக்கி அணைத்து அவள் உதடுகளை சிறை செய்தான்.
அவள் கைகள் அவனுடைய சட்டையை இறுக்கி பிடித்தது. சில நிமிடம் கழித்து அவளை விட்டவன் "கூடிய சீக்கிரம் உன்னோட அம்மா அப்பா கிட்ட உன்னை பொண்ணு கேட்டுருவேன். அதுவரைக்கும் என்னை லவ் பண்ண வேண்டாம். அதுக்கப்புறம் என்னை எப்படி எல்லாம் லவ் பண்ணனும்னு யோசிச்சு வை சரியா?", என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அப்படியே சரிந்து அமர்ந்தவள் சுவரில் சாய்ந்து கொண்டாள். "என்ன தான் அவனை லவ் பண்ணலை பண்ணலைன்னு சொன்னாலும் இனி வேறு ஒருத்தனை என்னால எப்படி நினைக்க முடியும்? இனி வேற யாரையும் நினைக்க முடியாத படி முத்தத்தை கொடுத்துட்டானே", என்று எண்ணி கொண்டவளுக்கு சிரிப்பு வந்தது. கூடவே அவனை அவளுக்கு பிடித்திருப்பதையும் உணர்ந்தாள்.
"அம்மா, அப்பாக்கு இவனை கண்டிப்பா பிடிக்கணும். கடவுளே நீ தான் எனக்கு உதவி செய்யணும். இவனை அவங்க வேண்டாம்னு சொல்லிட்டா நான் எப்படி ஷியாமை மறப்பேன்? கடவுளே கடைசில எனக்கும் காதலோட வலியை கொடுத்துடீங்களே", என்று புலம்பி கொண்டிருந்தாள்.
அதே நேரம் கலைமதியிடம் காவ்யாவின் வீட்டு எண்ணை வாங்கி கொண்டிருந்தாள் காயத்ரி.