(Reading time: 36 - 71 minutes)

அவள் அவனை  சமாதான படுத்தனும்  என்ற எண்ணத்தில் இருந்ததால் அவன் வண்டியை வேகத்தடை மீது செலுத்தியதும் அவன் மீதே மொத்தமாக சாய்ந்து அவன் இடுப்பை சுற்றி ஒரு கையை போட்டு பிடித்து கொண்டாள். விழுந்து விடுவோமோ என்று பதறி போனாள் காவ்யா.

"ஹா ஹா, இதை இதை தான் எதிர்பார்த்தேன்", என்று சிரித்த ஷியாம் "நீ டபுள் சைட் கால் போட்டு உக்காருந்தேன்னா இன்னும் சூப்பரா  இருந்திருக்கும்", என்றான்.

"வேணும்னு பண்றீங்களா? உங்களை", என்று சொல்லி கொண்டே அவன் முதுகில் நன்கு கிள்ளி விட்டாள்.

"ஹா ஹா, இப்ப தான் காவ்யாவை பாக்குற மாதிரி இருக்கு. நீ இவ்வளவு நேரம் மாதிரி வெட்க பட்டு சிணுங்கிட்டு   இருந்தேன்னு  வை உன் மாமா நிலைமை பாவமா ஆகிறும் செல்லம். கல்யாணம் முடியுற வரைக்கும் ப்ளீஸ்  ரவுடியாவே  இரு டி", என்று சிரித்தான் ஷியாம்.

"எல்லாரும்  அமைதியா அடக்க ஒடுக்கமா இருக்குற பொண்ணு வேணும்னு கேப்பாங்க. நீங்க என்னனா ரவுடியா இருக்கணும்னு சொல்றீங்க?"

"எனக்கும்  ஆசையா தான் இருக்கு. ஆனா நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் உன்னை பிரிஞ்சு இருக்கணுமே. அது வரைக்கும் நல்ல தோழியா நினைச்சா தான் உண்டு. இல்லைனா உன்னோட வெட்கம் எல்லாத்தையும் ரசிச்சேன்னு வை, இப்படியே உன்னை தூக்கிட்டு போய், கல்யாணம் பண்ணி, கட்டி புடிச்சு....", என்று அவன்  சொல்வதுக்குள் அவன் வாயை பின்னால் இருந்து மூடி இருந்தாள் காவ்யா.

அவளுடைய தொடுகை அவனுக்கு நிறைவாக இருந்தது. மென்மையாக இருந்த அவளுடைய உள்ளங்கை அவனுடைய ஈர உதட்டில் பட்டு இருவருக்குமே ஒரு சிலிர்ப்பை கொடுத்தது.

அதனால் உடனே கையை விலக்க போனாள் காவ்யா. அதை உணர்ந்தவன் அடுத்த நொடி அவள் கையை பிடித்து அவள் விரலில் முத்தமிட்டான்.

கரண்ட் சாக் எடுத்து போல கையை வெடுக்கென்று உருவி கொண்டவள் "இப்படி எல்லாம் செய்யாதீங்க ஷியாம்", என்று மெல்லிய குரலில் முனங்கினாள்.

"நானும் அப்படி தான் நினைச்சேன். பட் முடியலை. சாரி. சூர்யா வெயிட் பண்றான். வேகமா போவோம்", என்று சொல்லி சாலையில் கவனத்தை பதித்தான் ஷியாம்.

அதன் பின் அந்த காபி ஷாப் சென்று  மதி சூர்யா அருகில் அமர்ந்து கொண்டார்கள்.

காலேஜ் டைம்க்கு ஐந்து நிமிடத்துக்கு முன்னர் தான் இருவரும் சொல்லி கொண்டு கிளம்பினார்கள். பின் ஷியாமும், சூர்யாவும்  வீட்டுக்கு சென்று சாப்பிட்டு முடித்த பிறகு "டிவி பாருடா. லேப்டாப் யூஸ் பண்ணு. மதியம் நான் வந்ததும் சேந்து சாப்பிடலாம். சாயங்காலம் நான் சீக்கிரம் வீட்டுக்கு வரேன். அப்புறம் மதியை கூட்டிட்டு வர போகலாம். உன் ஆளையும் சேத்து தான் டா", என்று சொல்லி விட்டு வேலைக்கு சென்று விட்டான் சூர்யா.

அவன் சொன்னதை எதையும் செய்யாமல் நன்றாக உறங்கி விட்டான் ஷியாம். மதியம்  சூர்யா உள்ளே வந்தது கூட அவனுக்கு தெரியாது. சூர்யாவே தன்னிடம் இருக்கும் சாவியை கொண்டே திறந்து உள்ளே சென்றான்.

பின் அவனும் எழுந்த பிறகு இருவரும் மதி செய்த குழம்பை சூடு செய்து சாப்பிட்டார்கள். "சாயங்காலம் பாப்போம்", என்று சொல்லி விட்டு சென்ற சூர்யா ஐந்து மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டான். "சரி தூங்குறவனை எழுப்ப வேண்டாம்", என்று எண்ணி மதியம் போலவே கதவை திறந்தான். திறந்தவன் அதிர்ந்து போனான்.

அங்கே டிப்டாப்பாக கிளம்பி சூர்யாவுக்காக காத்து கொண்டு இருந்தான் ஷியாம்.

"அட பாவி, மதியம் நான் கதவை தட்டியும் திறக்காம தூங்குனது என்ன? இப்ப கிளம்பி இருக்குறது என்ன?", என்றான் சூர்யா.

"அதெல்லாம் அப்புறம் திட்டிக்கோ. வா கிளம்பலாம். என் டார்லிங்கை பாக்கணும்" என்று சொல்லி வீட்டை பூட்டி விட்டு உடனே காரை எடுக்க சொன்னான் ஷியாம்.

காரை எடுத்து கொண்டே "காவ்யாவை பாக்க இவ்வளவு ஆர்வமா கிளம்பிட்ட? நீ மதியம் மாதிரியே தூங்கிட்டு இருப்பேன்னு நினைச்சேன் டா?", என்றான் சூர்யா.

"நீ வேற, நானே எப்ப டா அஞ்சாகும்னு நினைச்சு இப்படி உக்காந்துருக்கணும்னு தான் காலைல அப்படி தூங்குனேன்", என்று சிரித்தான் ஷியாம்.

"நல்ல பாலிசி டா மச்சான்"

"ரொம்ப புகழாத. சரி காவ்யா வீட்டு மேலயும் ஆள் இருக்காங்களா?"

"அப்படி எல்லாம் இல்லை டா. அது சும்மா தான் இருக்காம். வாடகைக்கு விட தான் நல்ல ஆளா தேடிகிட்டு இருக்காங்க", என்று சூர்யா சொன்னவுடன் ஷியாம் மனதில் ஒரு யோசனை வந்தது.

அதற்கான சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்தவன் மனசுக்குள்ளே முடிவெடுத்து விட்டு அமைதியாகி விட்டான்.

எப்போதும் மதி, சூர்யாவுக்காக காத்திருப்பாள். ஆனால் காலேஜ் விட்டதும் காவ்யா கிளம்பி விடுவாள். அப்படி அவள் கிளம்பி விட கூடாது என்பதால் தான் இருவரும் சீக்கிரம் காலேஜ் வந்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.