(Reading time: 36 - 71 minutes)

அதன் பின் ஒரு நாளை கஷ்ட பட்டு நெட்டி தள்ளியவன்  அவளை பார்ப்பதுக்காக  ஆவலாக இருந்தான்.

காலையில் மதி காலேஜ் கிளம்பும் போதே ஷியாமும் கிளம்பி விட்டான். சூர்யா மதியை விடுவதுக்காக காரை எடுத்தவுடன் ஷியாம் சூர்யாவின் பைக்கை எடுத்து கொண்டான்.

மூவரும் கிளம்பினார்கள். "என் பின்னாடியே வா டா. நான் உன் ஆள் பஸ் ஏறும் இடத்தை உனக்கு காட்டுறேன். அவளோட வீட்டையும் காட்டுறேன். அப்புறம்  நீ வெயிட்  பண்ணி பாத்துட்டு அவளை காலேஜ்க்கு  கூட்டிட்டு வா. நாங்க காலேஜ் கிட்ட உள்ள காபி ஷாப்ல வெயிட் பன்றோம் ", என்று சொல்லி விட்டு காரை கிளப்பினான் சூர்யா.

மதி, சூர்யா அருகில் அமர்ந்து கொண்டாள். அவர்கள் கார் கிளம்பியதும் ஷியாமும் அவர்கள் பின்னே வண்டியை செலுத்தினான்.

ஒரு இடத்தில் நின்ற சூர்யா "இது தான் காவ்யா  வீடு", என்று கார் ஜன்னல் வழியாக சொல்லி விட்டு சிறிது தூரம் சென்ற பின்னர் "இங்க தான் பஸ் ஏறுவா. பத்திரமா வா டா ", என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

ஷியாமும் சிரித்து கொண்டே காவ்யாவின் வீட்டை பார்த்து வண்டியை திருப்பினான்.

அவள் வீட்டின் எதிரே வண்டியை நிறுத்தியவன் அவள் வீட்டையே நோட்டம் விட்டான். அப்போது அவள் வீட்டின் மாடியில் வீடு வாடகைக்கு விட படும் என்ற போர்டு கண்ணில் பட்டது. பின் அவள் எப்போது வெளியே வருவாள் என்று காத்திருக்க ஆரம்பித்தான்.

"அம்மா நேரம் ஆகிட்டு . நான் கிளம்புறேன்", என்று திலகாவிடம்  சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள் காவ்யா. அவளை பார்த்து ஒரு வாரம் ஆனதில் நொந்து போய் இருந்தவன், இன்று கிடைத்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியாக  உணர்ந்தான் ஷியாம்.

அவன் ஹெல்மட் போட்டிருந்ததால் "யாரோ நிக்காங்க", என்று எண்ணி கொண்டு மெதுவாக பஸ் ஸ்டான்ட்  நோக்கி நடக்க ஆரம்பித்தவளின்  பின்னே வண்டியை மெதுவாக உருட்டி கொண்டு சென்றான். பின் அவள் வீட்டை விட்டு சிறிது தூரம் தள்ளி சென்றதும் வண்டியை வேகமாக உருட்டியவன் அவளை வழி

மறைத்த மாதிரி நிறுத்தினான்.

திடீரென்று ஒரு பைக் வழி மறைக்கவும் பயந்து போனவள் சுற்றி முற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்வையை ஓட்டினாள்.

"ஏய், ஏதோ திருடன்னு  நினைச்சு ஏதாவது விபரீதமா செஞ்சிறாத மா. மானம் போயிரும்", என்று சொல்லி கொண்டே மாட்டி  இருந்த ஹெல்மட்டை  கழட்டினான் ஷியாம்.

குரலிலே அவன் தான் என்று உணர்ந்தவள் வியப்பின் எல்லைக்கே சென்றாள். அவன் ஹெல்மட்டை கழட்டவும் அவன் அருகே ஓடி சென்றவள் "நீங்களா? எப்ப வந்தீங்க?", என்று ஆர்வமாக கேட்டாள்.

அந்த ஆர்வத்தில் அவன் மனமும் துள்ளியது. தன்னை தேடிய அவளுடைய செய்கையில் அவன் மனம் குளிர்ந்து போனது.

"வந்து ரெண்டு நாள் ஆச்சு டி. உன்னை பாக்காம இருக்க முடியலை தெரியுமா? எப்ப டா பாப்பேன்னு இருந்தது. எப்படி இருக்க?", என்று சிரித்து கொண்டே கேட்டான் ஷியாம்.

"நல்லா இருக்கேன். எனக்கும் உங்களை  பாக்கணும்னு தோணுச்சு. அட்லீஸ்ட் போன்லயாவது  பேசலாம்னு ஆசை பட்டேன். ஆனா அம்மா, அப்பா கூட கிராமத்துக்கு போய்ட்டேன். சரி இன்னைக்கு கிளாஸ் போன அப்புறம்  மதி கிட்ட கேட்டு கால் பண்ணலாம்னு நினைச்சேன். பாத்தா நீங்களே வந்து நீக்குறீங்க?", என்று சொல்லும் போதே சந்தோஷத்தில்  அவள் கண்களும் கலங்கியது.

அதில் நெகிழ்ந்தவன் "இங்க இருந்து பேச முடியாது. வா கிளம்பலாம்", என்றான்.

"வண்டியிலயா?", என்று தயக்கமாக கேட்டாள் காவ்யா.

"பொண்டாட்டி, புருசன் பின்னாடி உக்காரலாம். தப்பில்லை", என்று சிரித்தான் ஷியாம்.

"ப்ச், போங்க. நான் அப்பாவை தவிர யார் கூடவும் பைக்ல போனது இல்லை தெரியுமா?"

"இனி காலம் முழுவதும் என் பின்னாடி தான் உக்காரனும். காமெடி பண்ணாம ஏறு செல்லம்"

"எனக்கு கூச்சமா இருக்கு"

"ஏய், அன்னைக்கு  மாதிரி உனக்கு முத்தமா கொடுத்தேன்? பின்னாடி உக்காருன்னு தான டி  சொன்னேன்? என்னை தொடாம உக்காரு மா. போதுமா?", என்று சொல்லி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

தயக்கத்துடன் அவன் அருகே சென்றவள் அவன் முறைக்கவும் பின்னே ஏறி அமர்ந்தாள். அவள் நுனியில் அமர்வதை பார்த்தவன் "பாத்து பாத்து என் மேல பட்டுற போகுது? நான் தீண்டத்தகாதவனா டி? இதுக்கு முன்னாடி நான் உன்னை தொட்டதே இல்லையா? உன்னை பாக்க அங்க இருந்து வந்தேன் பாரு? என்னை சொல்லணும்", என்று சொல்லி கொண்டே வண்டியை கிளப்பினான்.

அவனுடைய கோபத்தை தாங்க முடியாமல் மெதுவாக அவன் தோள் மீது கையை வைத்தவள் வண்டியில் சரியாக அமர்ந்து விட்டாள்.

அதன் பின்னும் அமைதியாக இருந்தவனை "சாரி, அதான் உங்களை பிடிச்சிகிட்டேன்ல ?", என்று கெஞ்சும் குரலில் சமாதானம் செய்தாள் காவ்யா.

அதில் உள்ளுக்குள் சிரித்து கொண்டவன் கண் முன் வந்து கொண்டிருந்த வேகத்தடையை  பார்த்தான். அதை பார்த்து மனதுக்குள் குதூகலித்தான் ஷியாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.