(Reading time: 36 - 71 minutes)

நம்பரை வாங்கி கொண்டு தன்னுடைய தந்தை மோகனை அழைத்தவள் இங்கு நடந்ததையும் அண்ணன் மனதில் இருக்கும் காதலையும் சொல்லி  காவ்யா வீட்டின் எண்ணையும் கொடுத்தாள்.

அனைத்தையும் கேட்ட மோகன் இனி தான்  பார்த்து கொள்வதாய் சொல்லி அழைப்பை அனைத்து விட்டு

தன் நண்பரை அழைத்து காவ்யாவின் குடும்பத்தை பற்றி சொல்லி விசாரிக்க சொன்னார்.

அடுத்து வந்த நாள்கள் ஐந்து பேருக்கும் சந்தோசமாக இருந்தது. ஊரை சுற்றி பார்க்க சந்தோசமாக சென்றார்கள்.

கலகலப்பான காயத்ரியுடன் வாயாடியான காவ்யா சேர்ந்தவுடன் ஷியாமின் நிலைமை தான் படுமோசமாக இருந்தது. அவர்கள் தன்னை கிண்டல் அடிப்பதை ஷியாமும் வெகுவாக ரசித்தான்.

தங்களை யாரும் தொந்திரவு செய்யாததால் மதியும் சூர்யாவும் காதல் உலகில் சஞ்சரித்தார்கள்.

கடைசியாக அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது. காவ்யாவை பிரிய முடியாமல் ஷியாம் தான் தவித்தான். கடைசியாக அவன் முத்த மிட்டதில் இருந்து காவ்யா ஷியாமிடம் எதுவுமே பேசவில்லை. காயத்ரியுடன் சேர்ந்து கிண்டல் அடித்தாலும் அவனிடம் நேரடியாக பேசுவதுக்கு அவளுக்கு தைரியம் இல்லை. அதுமட்டும் அல்லாமல் மறுபடியும் முத்தத்தை கொடுப்பானா என்று பயம் வேறு இருந்தது.

ஆனால் அவன் அவளை பார்க்காத போது கள்ள பார்வை மட்டும் பார்ப்பாள். அதை உணர்ந்த ஷியாமுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

ஆனால் இன்று அவள் சென்று விடுவாள் என்னும் போது மனதுக்கு வருத்தத்தை கொடுத்தது. அவளும் அவனை தன் கண்களால் பார்த்து மனதுக்குள் நிறைத்து கொண்டு தான் இருந்தாள்.

"இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பனும்", என்று சூர்யா சொன்ன பிறகு தன்னுடைய அறையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் காவ்யா. அவளுடன் அரட்டை அடித்த படியே அங்கு அமர்ந்திருந்தாள் காயத்ரி.

அப்போது தான் காயத்ரி காவ்யாவை நன்கு பார்த்தாள். இவளுடைய பேச்சை காவ்யா கவனித்த மாதிரி இருந்தாலும் அவள் கவனம் வேறெங்கோ இருந்தது. அதை உணர்ந்த காயத்ரியும் சிரித்து கொண்டு  வெளியே வந்து தன் அண்ணனை தேடினாள்.

அவனும் தனியே அமர்ந்து வானத்தை வெறித்து கொண்டு அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்ற காயத்ரி "அண்ணா உன்னை காவ்யா தேடுனா. பாத்தா அவ ரூம்க்கு உன்னை வர சொன்னதா சொல்ல சொன்னா", என்று சொல்லி விட்டு டிவி முன்னர் போய் அமர்ந்து விட்டாள்.

சந்தோசத்துடன் கிளம்பினான் ஷியாம். காவ்யாவோ அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு கடைசியாக அவன் வாங்கி தந்த சேலை கவரை கையில் எடுத்தாள். சந்தோசமாக அதை வெளியே எடுத்தவள் முகம் முழுவதும் சிரிப்புடன் அதை வருடி கொடுத்தாள். பின் கண்ணில் பட்ட விலையை பார்த்தவள் திகைத்தாள். அதில் நாலாயிரம் என்று போட்டிருந்தது.

அவள் அந்த கவரில் இருந்து சேலையை எடுக்கும் போதே அங்கு வந்து விட்டான் ஷியாம். அவள் அதை வருடி கொடுத்ததும் இவனுக்கு இங்கே சிலிர்த்தது.

அவள் விலையை பார்த்து அதிர்ச்சி அடைவதை பார்த்தவன் "என்ன மேடம்? மிச்ச ரெண்டாயிரத்தை தரதுக்காக தான் என்னை தேடுனியா?", என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தான்.

அவனை பார்த்து புன்னகைத்தவள் "ரெண்டுமே தப்பு. நான் உங்களை தேடவும் இல்லை. அப்புறம் ரெண்டாயிரம் தரவும் மாட்டேன்", என்றாள்.

"ஹா ஹா, நீ என்னை தேடலை அப்படிங்குறதை வேணும்னா ஒத்துக்குறேன். ஆனா விலையை பாத்த உடனே பணம் கொடுக்கணும்னு நினைச்ச? அப்படி தான?"

"அப்படி எல்லாம் இல்லையே. நான் எதுக்கு கொடுக்கணும்?"

"நீ கொடுத்த ரெண்டாயிரத்துக்கு தான அந்த சேலையவே வாங்கி கிட்ட. அப்ப மிச்ச ரூபாயை தரணும்னு தான நினைப்ப?"

"எங்கயாவது பொண்டாட்டிக்கு புருஷன் சேலை எடுத்து கொடுத்தா அதுக்கு பணம் கொடுக்கணுமா?", என்று கேட்டு விட்டு முகத்தை அவனுக்கு காட்டாமல் அந்த பக்கம் திரும்பி கொண்டாள் காவ்யா.

காதில் விழுந்த வார்த்தையை நம்ப முடியாமல் ஆனந்த திகைப்பை அடைந்த ஷியாம் மெதுவாக அவளை நோக்கி நடந்தான்.

அவளுக்கு பின்னே நின்றான் ஷியாம். அவனுடைய மூச்சு காற்றை அவள் முதுகு உணர்ந்தது. அவளுக்கு படபடப்பாக இருந்தது. "என்ன சொல்லுவானோ?", என்று எதிர்பார்த்து காத்திருந்தவளின் கழுத்தில் தன்னுடைய உதட்டை பதித்தான் ஷியாம்.

ஒரு வித சிலிர்ப்புடன் அவனை நோக்கி திரும்பியவளை இழுத்து அணைத்தவன் அவளுடைய முகமெல்லாம் முத்தமிட்டான். அதை அவளும் ஆவலாக எதிர்கொண்டு அவனை அணைத்து கொண்டாள்.

"எப்படி டி லவ்னு ஒத்துக்கிட்ட?", என்று வியப்பாக கேட்டான் ஷியாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.