(Reading time: 36 - 71 minutes)

"உங்க ஒருத்தருக்கு வீடா? குடும்பமா இருக்குறதுக்கு தானே தம்பி பெரிய வீடா  இருக்கும்? அப்படி பாத்தா பெரிய வீடுன்னா அட்வான்ஸ் வாடகைன்னு அதிகமா இருக்குமே", என்று அவன் சொன்ன பொய்யை உண்மை என்று நம்பி கேட்டாள் திலகா.

"பெரிய வீடா இருந்தா பரவால்ல ஆண்ட்டி. கொஞ்சம் வசதியா தான் நானும் எதிர் பாக்குறேன். ஆனா ஒரு மாசம்னா எல்லாரும் யோசிப்பாங்களோ?", என்று பவ்வியமாக கேட்டான் ஷியாம்.

"ஹ்ம்ம் ஆமா, ஆனா வேற வீட்டை ஏன் பாக்கணும்? நம்ம வீடே மாடில சும்மா தான் இருக்கு. காவ்யாவுக்காக கீழயும் மேலயும் ஒரே மாதிரி கட்டினோம். அவளுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் சும்மா ஏன் போடணும்னு வாடகைக்கு விடலாம்னு நானும் சுந்தரும் பேசிட்டு தான் இருக்கோம். ஒரு மாசம் நீங்க இங்க தங்குறதுல எங்களுக்கு சந்தோசம் தான்"

"ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி. அட்வான்ஸ் வாடகை எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா???"

"மதி என்னோட பொண்ணு மாதிரி. சூர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை. அவரோட பிரண்டுக்கு வீடு கொடுக்குறதுக்கு பணம் வாங்குனா நல்லாவா இருக்கும்? அது மட்டுமில்லாம உங்க தங்கச்சி காவ்யாவுக்கு சேலை எல்லாம் வாங்கி கொடுத்துருக்கா. நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர் தான் தம்பி. வீடு புடிச்சிருக்கான்னு பாக்குறீங்களா?"

"ஐயோ வேண்டாம் ஆண்ட்டி. இவ்வளவு சொன்னதே போதும். நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன். அவன் வீட்டுல தங்க மாட்டேன்னு சொன்னதுக்கே எப்படி முறைக்கிறான் பாருங்க. இதுல அவன் வீட்ல நாலு நாளாவது இருக்காம வந்தா  நட்பையே முறிச்சிருவான்", என்று சிரித்தான் ஷியாம்.

"சூர்யா தம்பி அப்படி எல்லாம் கோப பட மாட்டாங்க. சரி நைட்க்கு சாப்பாடு செய்றேன். இருந்து சாப்பிட்டுட்டு போகணும்", என்று திலகா சொன்னதும் சரி என்று ஷியாம் சொல்ல வருவதுக்கு முன்னர் "எங்க அத்தையும் மாமாவும் இப்ப வருவாங்க மா. அவங்களை கூட்டிட்டு வர அத்தான் போகணும். இன்னொரு நாள் சாப்பிடுறோம்", என்றாள் கலைமதி.

மனதறிந்து செயல்படும் மனைவியை பாசமாக பார்த்தான் சூர்யா. மனதில் இருந்த ஆசையை கெடுத்த தங்கச்சியை கோபமாக பார்த்தான் ஷியாம்.

கணவனை அன்பாக நோக்கிய மதி ஷியாமை பார்த்து முகத்தை திருப்பி கொண்டாள். "போச்சு டா. பொண்டாட்டி புருஷன் ரெண்டு பேரையும் சமாதானம் செய்ய வேண்டி இருக்கே", என்று மனதில் எண்ணி கொண்டான் ஷியாம்.

"மதி இப்படி தான் பொறுப்பா இருக்கணும். உன்னை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு டா. உனக்கு அமைஞ்ச மாதிரியே நல்ல குடும்பம் காவ்யாவுக்கு அமைஞ்சா ரொம்ப சந்தோசமா இருக்கும். அவ குணத்துக்கு எப்படி மாமனார் மாமியாரை அனுசரிப்பாளா? இல்லை அவங்க கூட குடுமி சண்டை போடுவாளான்னு தெரியலை", என்று திலகா சொன்னதும் தன் சித்தியுடன் காவ்யா சண்டை போட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணி சிரித்து கொண்டான் ஷியாம்.

கீழே நடந்து கொண்டிருக்கும் எந்த விவரமும் தெரியாமல் குளித்து விட்டு கீழ வந்தாள் காவ்யா.

பனியில் பூத்த மலர் போல இருந்தவளை ரசித்து கொண்டிருந்தவனை "சரி ஆண்ட்டி நாங்க கிளம்புறோம். வறோம்  காவ்யா", என்று சொல்லி விட்டு எழுந்த சூர்யாவின் குரல் நடப்புக்கு கொண்டு வந்தது.

"துரோகி, கொஞ்ச நேரம் என் செல்லத்தை ரசிக்க விடுறானா?", என்று எண்ணி கொண்டே "கிளம்புறோம் ஆண்ட்டி, ரெண்டு நாள் கழிச்சு வரேன்", என்று சொல்லி உறுதி படுத்தி கொண்டான் ஷியாம்.

"இவன் என்ன ரெண்டு நாள் கழிச்சு வரேன்னு சொல்றான்? எதுக்கு இப்படி சொல்றான்?", என்று யோசித்து கொண்டிருந்தாள் காவ்யா.

மூவரும் காரில் ஏறி கார் கிளம்பியதும் உள்ளே வந்த திலகா காவ்யாவிடம் "மேல வீட்டை நாளைக்கு சுத்தம் பண்ணனும் டி", என்றாள்.

"இப்ப எதுக்கு மா? ஆள் கிடைச்சிட்டாங்களா?", என்று கேட்டாள் காவ்யா.

"இதோ, ஷியாம் தம்பி தான் ஒரு மாசம் இங்க தங்க வரார்", என்று திலகா சொன்னதும் அதிர்ச்சியானவள் "என்னது? நம்ம வீட்லயா?", என்று கேட்டாள்.

"நீ ஏன், இவ்வளவு சாக் ஆகுற?"

"ஹி ஹி இல்லை மா, பாரின்ல வேலையை வச்சிட்டு இங்க எதுக்கு? அதுவும் சூர்யா அண்ணா வீடு இருக்கும் போது? அதான் கேட்டேன்"

"அடுத்த மாசம் பாரின் போறதுக்குள்ள இங்க ஒரு சைட் பாக்கணுமாம். அதுக்கு நேரங்கெட்ட நேரத்துல அலைய வேண்டி இருக்கும். அதான் தனி வீடு கேட்டார். நம்ம வீடு சும்மா தான இருக்கு? இதுல சூர்யா தம்பிக்கு வருத்தம் போல? அதான் ரெண்டு நாள் கழிச்சு வரேன்னு சொன்னார். சரி நைட் பூரி சாப்பிடுவ தான?"

"ம்ம் சரி மா", என்று காவ்யா சொன்னதும் திலகா உள்ளே சென்று விட்டாள்.

"பிராடு, சாஃப்ட்வெர் என்ஜினீயரா இருந்துகிட்டு எதுக்கு டா சைட் பாக்க போற நீ?", என்று நினைத்து சிரித்து கொண்ட காவ்யாவுக்கு இதே வீட்ல அவன் இருந்தா என்று நினைக்கும் போதே உடலெல்லாம் ஒரு பரபரப்பு ஓடியது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.