(Reading time: 12 - 24 minutes)

“இப்போ என்ன பண்றது பாரதி....  எத்தனை கஷ்டப்பட்டு எல்லா தகவலும் கலக்ட் பண்ணினோம்... அத்தனையும் வேஸ்ட்.... மயிலை ப்ரோடேக்ட் பண்ணினா மாதிரி ராஜாவையும் ப்ரோடேக்ட் பண்ணி இருக்கணும்... இல்லை அட்லீஸ்ட் அவரை எச்சரிக்கையானும் பண்ணி இருக்கணும்...”

“ராஜாவை அவங்க குறி வைப்பாங்கன்னு எதிர்பார்க்கலை சப்பாணி....”

“சாரங்கன், பாரதி எதுக்கு எல்லாம் முடிஞ்சுட்ட மாதிரி வெக்ஸ் ஆகறீங்க... இன்னும் நம்மக்கிட்ட இரண்டு மணி நேரம் டைம் இருக்குது.... எப்படியாவது ட்ரேஸ் பண்ணிடலாம்... இப்போ உடனே என்ன பண்ணலாம்ன்னு பார்க்கலாம்.... நாம மறுபடி அவங்க பேசினதை கேட்கலாம்...”

“ஹே பாரதி.... ராஜா பேசி முடிக்கும்போது jesus save me அப்படின்னு சொன்னார் கேட்டியா... அவர் எப்பவுமே அப்படி சொல்லுவாரா....”

“இல்லை சாரங்கா... அவர் இதுவரை அப்படி எல்லாம் பேசினதில்லை... may be இது ஏதானும் க்ளுவா இருக்குமோ....”

“பக்கத்துல ஏதானும் சர்ச் இருக்குன்னு சொல்ல வராரோ...”

“நான் நரேஷ்க்கோ, நாராயனனுக்கோ சர்ச் பக்கத்துல ஏதானும் ப்ரோபெர்ட்டி இருக்கான்னு செக் பண்றேன்...”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது சந்திரனுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் வெளியில் வந்தார்...

“டாக்டர் சந்திரன் சார் எப்படி இருக்கார்....”

“ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சு குண்டை வெளிய எடுத்துட்டோம்... எலும்பு சேருவதற்கு உள்ளுக்குள்ள ப்ளேட் வச்சிருக்கு... இப்போ மயக்கத்துல இருக்கார்... இன்னும் ஒரு மணிநேரத்துல நினைவு வந்திடும்... அப்பறம் வார்டுக்கு மாத்திடுவோம்... நீங்க அதுக்கு அப்பறம் போய் பார்க்கலாம்..”,டாக்டர் மதியிடம் கூறிவிட்டு நகர்ந்தார்...

“சந்திரன் சார் மனைவிக்கு சொல்லிட்டீங்களா....”

“அவங்க பழனி கோவிலுக்கு போய் இருக்காங்க மதி சார்... இன்னைக்கு ராத்திரிதான் வர்றாங்க.... சீனியர் அவங்க வந்த பிறகு சொல்லிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டார்....”

பாரதியின் கைப்பேசியில் மறுபடி அழைப்பு வர, இந்த முறை அழைத்தது ராஜாவின் அம்மா...

“பாரதி பிஸியா இருக்கியாம்மா....”

“சொல்லுங்க ஆன்ட்டி... வெளிய இருக்கேன்....”

“ஓ ஒரு முக்கியமான விஷயம்... பேசலாமா....”

“ஒண்ணும் பிரச்சனை இல்லை... சொல்லுங்க....”

“பாரதி எனக்கு கொஞ்ச நேரம் முன்னால ஒரு போன் வந்துச்சு.... அதுல ராஜாவை கடத்தி வச்சிருக்கறதா சொன்னாங்க...”

“ஆமாம் ஆன்ட்டி, எனக்கும் வந்துச்சு... உங்கக்கிட்ட என்ன சொன்னாங்க....”

“அவங்க நீ ஏதோ கேஸ் எடுத்து நடத்தறதாவும், அதுல அவங்களுக்கு பாதகமா நீ எதுவும் செய்யக்கூடாதுன்னும் சொல்ல சொன்னாங்க... அப்படி அவங்க சொன்னதைப் பண்ணலைன்னா ராஜாவை கொன்னுடுவோம்ன்னு சொன்னாங்க...”

“ஆன்ட்டி....அது... என்கிட்டயும் அதேதான் சொன்னாங்க... அதுதான் என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்.... அவரைக் கடத்தினவங்க பேசறதுக்கு முன்னாடி ராஜா பேசினார்... அதுல அவரைப் பத்தி கவலைப்படாம என்னை கேஸ் ப்ரோசீட் பண்ண சொன்னார்....”

“நானும் அதை சொல்றதுக்குத்தான் கால் பண்ணினேன் பாரதி...”

“என்ன சொல்றீங்க ஆன்ட்டி...”

“உனக்கே தெரியும் என்னோட கணவர், நீதிக்கும் நியாயத்துக்கும் போராடின ஒரு நேர்மையான வக்கீல்.... அவரோட கடைசி மூச்சு வரைக்கும் அதை கடைபிடிச்சார்.... இப்போ நீ நடத்துற இந்த வழக்கும் அது மாதிரியான வழக்குதான்.... இதுல நீ என்னவிதமான மிரட்டல் வந்தாலும் பின் வாங்காத... ராஜா கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவந்தானே தவிர, கோழையோ, அறிவில்லாதவனோ கிடையாது... தன்னை பாதுகாத்துக்கொள்ள அவனுக்குத் தெரியும்... நீ உன்னோட வழக்கை கவனி... முடிஞ்சா உனக்குத் தெரிஞ்ச போலீஸ்க்கிட்ட கம்ப்ளைன்ட் மட்டும் கொடுத்துடு....”

“ஆன்ட்டி எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை... உங்க பையன் கத்தி முனைல இருக்காருன்னு தெரிஞ்சும், மத்தவங்களுக்கு நீதி கிடைக்கனும்ன்னு நினைக்கறீங்க பாருங்க.... hats off.... கண்டிப்பா இந்த வழக்கையும் ஜெயிச்சு ராஜாவையும் கண்டிப்பா காப்பாத்துவோம் ஆன்ட்டி.... இந்த ரெண்டுலயும் நாங்க வின் பண்ணணும்ன்னு வேண்டிக்கோங்க....”

“கண்டிப்பாடா உன்னோட முயற்சி கண்டிப்பா வெற்றியடையும்.... கடவுள் உனக்குத் துணையிருப்பார்...”, சுகுணா கைப்பேசியை வைக்க பாரதி தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

“ச்சே சான்ஸே இல்லை பாரதி... இப்படி ஒரு குடும்பம் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.