(Reading time: 12 - 24 minutes)

“ஆமாம் சாரங்கா... மதி சார் இப்போ என்ன பண்ணலாம் சொல்லுங்க...”

“நரேஷ், நாராயணன் ரெண்டு பேரோட இடங்களையும் நான் சோதனை போட போறேன்... சந்திரன் சார் முழிச்ச உடனே நீயும், சாரங்கனும் கிளம்பி கோர்ட் போங்க... உன்னோட ராஜகுமாரனை காப்பாத்த வேண்டியது என்னோட பொறுப்பு பாரதி.... கவலைப்படாம நீ அந்த குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கறதுன்னு மட்டும் பாரு...”

“கண்டிப்பா மதி சார்... என்னோட ராஜா மேல கையை வச்சவங்க யாரா இருந்தாலும் சரி... செத்தானுங்க....”

“அடியேய் பக்கி... ஹீரோ பேசவேண்டிய டயலாக் எல்லாம் நீ பேசறியே... இதை நாவல் உலகம் ஒத்துக்கவே ஒத்துக்காது.... ராஜா பாரு அவனுங்களை அடிச்சுப் போட்டு கோர்ட்க்குள்ள வந்து குதிக்கப் போறாரு....”,சாரங்கன் கலாய்க்க, மதி சிரித்தபடியே அவர்களிடம் விடைபெற்றான்....

டுத்த அரைமணியில் சந்திரன் கண் விழிக்க, அவரிடம் தாங்கள் சென்று நல்ல முறையில் வழக்கை நடத்துவதாகக் கூறி, ஒரு காவலரை அவரது பாதுக்காப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு இருவரும் கோர்ட் நோக்கி சென்றார்கள்...

மாலை நான்கு மணிக்கு கோர்ட் கூட மறுபடியும் வழக்கு ஆரம்பித்தது... இந்தமுறை பாரதி கேட்டுக்கொண்டபடி வழக்கு மூடிய அறைக்குள் நடைபெற்றது... நீதிபதி, வழக்கு நடத்தும் வக்கீல்கள், நரேஷின் மாமனார் மற்றும் மனைவி இவர்கள் மட்டுமே அந்த அறையில் இருந்தார்கள்... ராணிக்கூட இந்த முறை அறைக்குள் வரவில்லை...

நீதிபதியிடம் சந்திரன் தற்பொழுது வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதால்  இன்று வழக்கை தான் நடத்தப்போவதாக சொல்லி அனுமதி கோரினாள் பாரதி... நீதிபதி அனுமதி வழங்க வழக்கு விசாரணை ஆரம்பம் ஆனது.....

நரேஷ் தரப்பு வக்கீல் அம்பலவாணர் தன் கட்சிக்காரர் தவறு ஏதும் செய்யாமல் அவர் மீது அநியாயக் குற்றம் சாட்டுவதாகக் கூறி வாதாடினார்...

“மாண்புமிகு நீதிபதி அவர்களே... இந்த நரேஷ் பெரிய மனிதன் என்ற பெயரில் இருக்கும் ஒரு மனித மிருகம்... இத்தகைய கடுமையான சொல்லாடலை இங்கு பயன்படுத்த நான் வருந்துகிறேன்... ஆனால் இவன் செய்திருக்கும் செயல்கள் அத்தகையது...”

“இவனால் பாலியல் துன்பத்திற்கு ஆளானவர்கள் பல பேர்.... வெளியில் சொல்லவே வெட்கமாக இருக்கிறது... பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களும் இவனால் இத்தகைய துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்... இதில் சிறுமிகளும், சிறுவர்களும் கூட அடக்கம்....”, பாரதி கூற நரேஷின் மனைவி, அவனை அதிர்ந்து போய் பார்த்தாள்.

“இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஹானர்.... எதிர்கட்சி வக்கீல் தேவையில்லாமல் என் கட்சிக்காரரை தகாத வார்த்தைகளால், அவர் செய்யாத செயல்களை செய்ததாகக் கூறி அவமானப்படுத்துகிறார்... உடனடியாக அவரின் வார்த்தைகளை திரும்பப்பெற வேண்டும்....”

“கண்டிப்பாக திரும்பபெற மாட்டேன் யுவர் ஹானர்... இவர் செய்த இழி செயல்களைக் கேட்டால் இதைவிட கேவலமான வார்த்தைகளால் நீங்களே அவரைத் திட்டுவீர்கள்...”

“பாரதி வழக்கு மன்றத்திற்கென்று ஒரு நடைமுறை இருக்கிறது... அதை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்... திரு. நரேஷ் அவர்கள், இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை... அதுவரை அவருக்கு தகுந்த மரியாதையை நாம் கொடுக்க வேண்டும்....”, நீதிபதி கூற, அம்பவாணர் மிதப்பாக பாரதியை பார்த்தார்...

“Yes யுவர் ஹானர்.... கண்டிப்பாக... நான் இதோ நிற்கும் இந்த நரேஷின் மீது சாற்றிய குற்றச்சாட்டிற்கான ஆதாரங்கள்....”,பாரதி நரேஷ் வீட்டிலிருந்து எடுத்த CDக்கள், பாஸ்புக், போனில் ரெகார்ட் செய்த வீடியோ அனைத்தையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தாள்...

“யுவர் ஹானர் நான் நரேஷை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...”

“அவரை கேள்வி கேட்க உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன்... அதே நேரம் அவருக்கு உரிய மரியாதையையும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...”

“நன்றி நீதிபதி அவர்களே... நரேஷ் சில நாட்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதுக்காக ராமு அப்படிங்கற பையனை காவல்துறை கைது செய்தது உங்களுக்குத் தெரியுமா...”

“நீதிபதி அவர்களே... இந்த வழக்கிற்கு தேவையான விஷயங்களை மட்டும் கேட்குமாறு எதிர்கட்சி வக்கீலை கேட்டுக்கொள்கிறேன்... தேவையில்லாத கேள்விகளால் கோர்ட்டின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்....”

“இதுவும் வழக்கு சமந்தப்பட்ட கேள்விதான் யுவர் ஹானர்... நீங்க சொல்லுங்க நரேஷ்...”

“இல்லை எனக்கு அப்படி யாரையும் தெரியாது...”

“அப்படியா maybe உங்களுக்கு நியாபகம் வரலையா இருக்கும்... உங்களோட மேனேஜரோட அக்கா பையன் ராமு... இப்போ நினைவு வந்துடுச்சா... அவனை வெளிய எடுக்கக்கூட நீங்க முயற்சி செய்தீங்களே....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.