(Reading time: 27 - 54 minutes)

‘ஷங்கர்’ என்ற வார்த்தையே. இத்தனை நேரம் எதுவுமே பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த  சுவாமிநாதனை நிமிர்த்தியது

தாத்தாவின் ஊரில் மற்றவர்கள் யார் கைப்பேசியையும் அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அனுவை அழைப்பைதை தவிர அவனுக்கு அப்போது வேறே வழியும் தெரியவில்லை,

முதலில் ஒன்றுமே புரியாமல் குழம்பித்தான் போனாள் அனு.

‘என்ன அனும்மா? ஹரிஷ் கேட்க

‘எதுவும் இல்லை’ என்றார் சுவாமிநாதன் சற்றே சூடான குரலில் ‘ஒழுங்கா சாப்பிடுங்க ரெண்டு பேரும். அடுத்து சம்பிரதாயங்கள் இருக்கு’. மெலிதாய் மாற்றம் கொண்டது அனுராதாவின் முகம்.

சாப்பிட்டு முடித்துவிட்டு அவளை தனியே நகர்த்திக்கொண்டு சென்றான் ஹரிஷ் ‘என்னடா?’

தயங்கித்தயங்கித்தான் நடந்ததை சொன்னாள் அனுராதா.

‘வாட்?.

‘பயமா இருக்கு ஹரிஷ்’ என்றாள் அனுராதா. ‘யாரோ கடத்தி இருப்பாங்க போல.’ அவள் சொல்ல சில நொடிகள் யோசனையில் விழுந்தான் அவன். அனு எதுவுமே பேசவில்லை. அதற்குள் அங்கே வந்தார் சுவாமிநாதன்.

‘ஹரிஷ் அத்தை ஊருக்கு கிளம்பறா, நீ ஏர்போர்ட் வரைக்கும் போயிட்டு வா’ ஷங்கருக்கு ஏதோ பிரச்சனை என்று அவரால் ஊகிக்க முடிந்திருந்தது. அதில் ஹரிஷ் தலையிடுவதில் அவருக்கு கண்டிப்பாக உடன்பாடு இல்லை. அதை தவிர்ப்பதற்காகவே அவர் அவனை அனுப்ப முனைந்தது.

‘இதோ கிளம்பறேன்பா’ சொன்னவன்  ‘எங்கே அந்த நம்பரை குடு அனு ’ என்றான்

‘ஹரிஷ் நான் உனக்கு வேறே வேலை கொடுத்தேன்’

‘அதையும் செய்யறேன்பா. நீ நம்பரை குடு அனு. நான் ஏதாவது முடியுமான்னு பார்க்கிறேன்’ என்றான் ஹரிஷ் உறுதியாக.

சுவாமிநாதனின் கோபம் மெல்ல உயர்ந்தது ;ஹரிஷ்..’ என்றார் கோபக்குரலில்.

‘அப்பா ஷங்கரை யாரோ கடத்தி இருக்காங்க’ என்றான் ஹரிஷ் ஆற்றமாட்டாமல்

‘ஓ.. அப்படியா? நல்லதுதானே. அவன் செஞ்சதுக்கு அவன் அனுபவிக்கிறான்’ என்றார் இவர் பட்டென.

‘அப்பா.. அப்படி பேசாதீங்கபா...’ என்றான் ஹரிஷ். அதுதான் ஹரிஷ்.

‘அப்படித்தான் பேசுவேன். நான் சராசரி மனுஷன்தான்டா’ என்றவர் அனுவின் பக்கம் திரும்பினார்

‘முதல் நாள் நான் உன்னை பார்த்த போது நான் உனக்கு சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கா? இந்த வீட்டு மரியாதையை நீ காப்பத்துவேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணே இல்லையா? அது உண்மைனா அந்த நம்பரை இப்படியே டெலீட் பண்ணிட்டு அடுத்த வேலைகளை பாரு.’ என்றார் சுவாமிநாதன் இரக்கம் இல்லாத குரலில்.

‘இல்ல ப்ளீஸ்...நான் பெரியப்பாகிட்டே இந்த நம்பரை கொடுத்திடறேன்’ அவள் கண்களில் சேர்ந்த கண்ணீருடன் சொல்ல

‘நான் டெலிட் பண்ணுன்னு சொன்னேன்.’ என்றார் சுவாமிநாதன் அவருக்கு கண்மண் தெரியாத கோபம். ‘அப்படி பண்ணாத்தான் நீ இந்த வீட்டு மருமகளா இருக்க முடியும்’

‘அப்பா’ அவருடையதை விட இரு மடங்கு கோபம் அவனுக்கு ‘என்ன பேசறீங்கன்னு புரிஞ்சு பேசுங்க. கொஞ்சமாவது மனுஷத்தன்மை வேணும்பா’ என்றவன் அவளிடமிருந்து கைப்பேசியை கிட்டத்தட்ட பிடுங்கிக்கொண்டான்.

‘நாம தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அவன் உயிருக்கு ஆபத்து’ என்றவன்  அப்படியே அந்த எண்ணை  குறித்துக்கொண்டான்.

‘அனு நான் அத்தையை ஏர்போர்ட்லே விடப்போறேன். நைட் எப்போ வருவேன்னு தெரியாது. நீ தூங்கு சரியா. நான் மத்த எல்லாத்தையும் பார்த்துக்கறேன்.’

‘டேய்... உனக்கு இன்னைக்குதான் கல்யாணம் முடிஞ்சது. அதாவது ஞாபகம் இருக்கா?’ கேட்டார் அப்பா கொதிக்கும் குரலில்.

‘இருக்குபா. எல்லாம் ஞாபகம் இருக்கு’ சொன்னவன் யாரையோ கைப்பேசியில் அழைத்தபடியே நடந்தான்.

அவன் செல்லும் திசையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் அனு. அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்த நேரம் அதிகாலை மூன்று மணி. மற்ற எல்லாரும் உறங்க சென்றுவிட கூடத்திலேயே அமர்ந்திருந்தாள் அனுராதா. அவளை பார்த்ததும் மலர்ந்து புன்னகைத்தான் ஹரிஷ். எங்கே சென்றான். யாரை தொடர்பு கொண்டான் என எதுவும் தெரியாது அவளுக்கு.

‘ட்ரேஸ் பண்ணியாச்சுமா. போலிஸ் அங்கே போயிட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்திலே வீட்டுக்கு வந்திடுவான் உங்க அண்ணன்’

அவனை இழுத்து அணைத்துக்கொண்டு மாறி மாறி முத்தமிட்டாள் அனுராதா. ‘உன்கிட்டே தேங்க்ஸ்ன்னு சொல்லவா. சாரின்னு சொல்லவா. லவ் யூ ன்னு சொல்லவா’ நிஜமா தெரியலை ஹரிஷ்’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.