(Reading time: 27 - 54 minutes)

‘அட பரவாயில்லைமா. ஒரு நிமிஷம் இப்படி வா’ சொல்லிவிட்டு இடம் மாறி அமர்ந்தார் அவர். இப்போது அவள் கைக்குள் தனது கையை கோர்த்துக்கொண்டான் ஹரிஷ்.

‘லவ் யூ அனும்மா’

‘லவ் யூ ஹரிஷ்.’ என்றவள் அவன் முகம் பார்த்தாள் ‘ஹரிஷ் ஒரே ஒரு முத்தம் குடு ஹரிஷ் ப்ளீஸ். எனக்கு இப்போவே முத்தம் வேணும்’

‘ஹேய்... இப்போவா?’

‘இப்போதான். இப்போவேதான் வேணும்.’ அப்படியே அவளை இழுத்து அவள் இதழோடு இதழ் பத்திதான் ஹரிஷ். இருவர் உயிரும் ஒன்றுக்குள் ஒன்று கலந்து கரையும் உணர்வில் சில நொடிகள் உருகினர் இருவரும். பின்னர் விலகவே மனமில்லாமல் விலகினர்.

‘போதும். இது போதும் உன்னோட பல வருஷம் வாழ்ந்த சந்தோஷம்’ அழகாய் சிரித்தாள் அனுராதா அவளை தோளோடு சேர்த்துக்கொண்டான் ஹரிஷ்.

‘இறைவனின் முடிவு எதுவாக இருந்தாலும் சரி உன்னோடு நான். என்னோடு நீ’

தே நேரத்தில் அங்கே காக்பிட்டில் மேகக்காதலிகளை பார்த்து கண்சிமிட்டினான் நம் விவேக் ‘அப்படி எல்லாம் அத்தனை சீக்கிரம் எதுவும் நடந்துவிடுமா என்ன? இன்னும் எத்தனை நாட்கள் நான் உங்களை எல்லாம் கொஞ்ச வேண்டும்?’

அதே நேரத்தில் வானத்தை பார்த்து கண்சிமிட்டினாள் அவனவள் ‘அப்படி எல்லாம் என்னை விட்டுவிடுவாரா என்ன எனக்குள்ளே இருக்கும் என் தந்தை. இன்னும் நான் எழுத வேண்டிய கவிதைகள் எத்தனை மிச்சமிருக்கின்றன?’

விமானம் பெங்களூரு நகரை நெருங்கியிருந்தது. ஓடு தளத்தில் இடம் கிடைப்பதற்காக அங்கேயே வட்டமிட ஆரம்பித்தது விமானம்.

இங்கே ஹரிஷின் முன் சீட்டில் அமர்ந்திருந்த பரம் அகர்வாலுக்குள்ளும் ஏதேதோ நினைவுகள். என்ன தோன்றியதோ ஹரிஷின் பக்கம் திரும்பினான் அவன்.

‘ஐ.யாம் சாரி ஹரிஷ். எக்ஸ்ட்ரீம்லி சாரி ஃபார் எவ்ரிதிங்’ வாய்விட்டு சொன்னான் அவன். வியந்து போனான் ஹரிஷ். ‘மரணத்தின் அருகாமை மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகிறது?

அடுத்து இன்னொரு அறிவிப்புக்கு பிறகு சில நிமிடங்கள் தாழ்வாய் பறந்தது விமானம்.

தேவையான சோதனைகளுக்கு பிறகு தரை இறங்க அனுமதி கிடைக்க கொஞ்சம் கூட பதற்றமே இல்லாத முகத்துடனும், சலனமற்ற மனதுடன் விமானத்தை கீழே இறக்க அரம்பித்தான் விவேக் ஸ்ரீனிவாசன்.

விமானத்துக்குள் இருந்த எல்லா உதடுகளும் இறைவனை அழைத்துக்கொண்டிருக்க ‘அ...ப்...பா’ என்ற ஒற்றை சொல்லை உச்சரித்த படியே பத்திரமாய் மெத்தென தரை இறக்கினான் விமானத்தை. பெருமிதமாய் சிரித்துக்கொண்டாள் அவனவள். அப்படியே அவனை அணைத்துக்கொண்டார் துணை விமானி.

அழகாய் தரை இறங்கி ஓடுதளத்தை முத்தமிட்டது விமானம். விமானத்துக்குள் இருந்த அனைவரிடமிருந்தும் உற்சாக கூச்சல்..

சில அடிகள் சென்று நின்றது விமானம். எல்லாரும் சிறிது நேரம் அமர்ந்திருங்கள் என்ற அறிவிப்பு வந்தாலும் யாரும் அமர்வதாக இல்லை. எல்லாரிடமும் நிறைவும், நிம்மதியும்.

சந்தோஷமாய் ரகுவை அணைத்துக்கொண்டாள் ஸ்வேதா.

‘சீக்கிரமா டீம்லே சேருற வழியை பாருங்க’ என்றாள் அவள்.

‘மகனையும், மருமகளையும் தன்னோடு சேர்த்துக்கொண்டார் சுவாமிநாதன் ‘இதுதானா? இவ்வளவுதானா வாழ்க்கை? இந்த சில நிமிடகங்களுக்குள்ளாகவே பல நூறு விஷயங்கள் புரிந்திருந்தது சுவாமிநாதனுக்கு.

அடுத்து எல்லா பயணிகளும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர். கடைசியாக விமானி இறங்கி வருவதற்காக எல்லாருமே காத்திருக்க இறங்கி வந்தான் விவேக் ஸ்ரீனிவாசன். அவனே எதிர்ப்பார்க்காத நேரத்தில் கிரிக்கெட் மைதான பழக்க தோஷத்தில் அவனை அப்படியே தூக்கி சுத்த ஆரம்பித்தனர் ஹரிஷும், ரகுவும். அங்கே எல்லார் மனதிலும் குதூகலம் நிரம்பி வழிந்தது.

 

நிறைந்தது.....

Episode 17

{kunena_discuss:1147}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.