(Reading time: 14 - 28 minutes)

“ம்ம் அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அவ எப்பவுமே இந்த டைம்ல தான் கால் பண்ணுவா..பேசி ரெண்டு நாள் ஆச்சுல அதான் கொஞ்சம் லேட் ஆய்டுச்சு..”

“ஓ ரெண்டுநாள் ஆச்சா ஏதோ ரெண்டு வருஷம் மாதிரி இருக்கு நீங்க குடுக்குற பில்டப்..”

“ஹே என்ன இப்படி சொல்லிட்ட டெய்லி பேசிடுவோம் ஒரு நாள் பேசலனாலும் அன்னைக்கு நாள் நல்லாவே இருக்காது..”,எனமேலும் சோகமாய் அவன் கூற

ஓ என்றவள் அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் எழுந்து உள்ளே செல்ல அவனுக்கோ ஒரு மதிரியான குளிர் காற்றின் உணர்வு அவளை அப்படி சீண்டியதில்..

“ரைட்டு டீச்சரம்மாவ வெறுப்பேத்த ஐடியா கிடைச்சுருச்சு..சாரி சாரு எருமை மாடே..தயவுசெஞ்சு அவ கண்ணுல பட்றாத உன்னை கொன்னாலும் கொன்டுருவா..”,என மனதில் நினைத்து சிரித்தவனுக்குத் தானே தெரியும் அவர்கள் இருவரும் பேசுவதே மாதம் ஒரு முறை தான் அதுதவிர எதேனும் உதவி வேண்டுமென்றால் தான் கால் செய்தே பேசுவாள்.இன்று வேலை விஷயமாய் அவன் நண்பனை சந்திக்க வேண்டுமென்பதற்காக தான் பேசியதே..அதுகூட பேசும் போது ஆயிரம் சாரி கூறியிருந்தாள் டிஸ்டர்ப் செய்ததற்காக..

உள்ளே சென்றவளை பின் தொடர்ந்தவன்,”சரி சாரு…ஆங்ங்ங் சாரி திஷா டியர் நாம எங்கேயாவது வெளில போய்ட்டு வரலாம் வாயேன்..”

“ஏன் உங்க ப்ரெண்டையே கூட்டிட்டு போ வேண்டியது தான..”

வொர்க் அவுட் ஆகுது..”ம்ம் இங்க இருந்தா பரவால்லை அவ தான் வர ஒன் மந்த் ஆகுமே..அதுவரை உன்னை தான் தொல்லை பண்ணணும் என்ன பண்றது”,என சோகமாய் கூற அவன் விளையாட்டுக்கு பேசுவது தெரிந்தாலும் ஏனோ அதை ரசிக்கும் நிலைமையில்லை அவளுக்கு.

அவள் முக பாவத்தை கண்டவன் இதற்குமேல் இன்னைக்கு வேண்டாம் என நினைத்து,”டியர் நீ ரெடி ஆய்ட்டு வா நா ஆல்மோஸ்ட் ரெடி தான் ஹால்ல வெயிட் பண்றேன்..”,என்றவாறு சாவியை எடுத்துக் கிளம்பினான்.

“பெரிய ப்ரெண்ட் அப்படி என்ன தலை போற காரியம்..இவரு ஏதோ பேசுசுற என்கிட்டையே இவ்ளோ பேசுறாரு..அப்போ கேக்கவா வேணும்..”,என்று புலம்பியவாறே தயாராகி வெளியே வந்தாள்.

“வாவ் மை ப்ளக் ப்யூட்டி செமயா இருக்கு இந்த சுடி..போலாமா”,என்றவன் அவளோடு கிளம்பினான்.

காரில் ஒலித்த பாடல்களும் இருந்த வானிலையுமாய் அவளை ஓரளவு நிதானத்திற்கு கொண்டு வந்திருக்க சற்றே சகஜமாகியிருந்தாள்..அந்த தியேட்டர் வாசலில் காரை நிறுத்தியவன் அவளை காத்திருக்க சொல்லிவிட்டு டிக்கெட் கவுண்டருக்குச் செல்ல அருகிலிருந்த சில கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுக்குள் அவர்களைப் பார்த்து ஏதோ கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

அவளின் முகமாற்றத்தை உணர்ந்தவன் ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருக்க அவளோ சில நொடிகளில் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.இதை கவனித்தவன் டிக்கெட் எடுக்காமல் அவள் அருகே சென்று தோள் தட்ட திரும்பியவளின் கண்கள் லேசாய் கலங்கியிருந்தது.

“திஷா..”,என அதிர்ச்சியாய் அவன் அழைக்க,

“ப்ளீஸ் நாம இங்கயிருந்து போய்டலாமா..”

“பேபி..”

“ப்ளீஸ்ங்க..”,கண்களின் கெஞ்சல் அவனை அதற்கு மேல் பேசவிடாமல் ஆக்கியிருந்தது..ஒன்றும் பேசாமல் காரை கிளப்பியவன் நேராக வீட்டிற்குச் செல்ல குனிந்த தலை நிமிராமல் அப்படியே அறைக்குள் புகுந்து கொண்டாள்.சாரதா என்னவென மகனைப் பார்க்க கண்களாலேயே சமாதானப்படுத்தியவன் தங்களறைக்குச் சென்று கதவை தாளிட்டு திரும்ப கட்டிலில் அமர்ந்திருந்தவளின் முகம் இன்னுமே வாடிப் போயிருந்தது.

அமைதியாய் அவளை நெருங்கி அமர்ந்தவன் தோளை சுற்றி அணைத்து தன்னோடு அழுத்த அடுத்த நொடி அவன் சட்டையை கசக்கிப் பிடித்தவள் மார்பில் சாய்ந்து தன் கண்ணீரால் அவன் மார்பை நனைத்தாள்.

“திஷா!!”,சற்று கோபமாகவே வந்தது அவன் குரல்..

“நா ரொம்ப வீக் ஆய்ட்டேன்ப்பா..இது இல்ல நா..எனக்கு இது பிடிக்கல..”முகத்தை அவனுள் புதைத்தவாறே விம்ம ஆரம்பித்திருந்தாள்.

“திஷா ஏன் இப்படி பேசுற..நீ சொல்றத தான் நானும் சொல்றேன்..இது என் திஷா இல்லையே..நா பாத்த திஷாக்கு மனசு இவ்ளோ கோழை கிடையாதே..”

“இல்ல திஷானிக்கு அப்படி கிடையாது ஆனா இப்போ திஷானி அபினவ்க்கு மனசு ரொம்ப பலகீனமா ஆய்டுச்சு..”

தன்னிடமிருந்து பிரித்தெடுத்தவன் அவள் முகம் நிமிர்த்தி,”சோ உன் இந்த நிலைமைக்கு காரணம் நா தான்..”

“அப்படி சொல்லல..அது..”

“வேற எப்படி சொல்றதா எடுத்துகிட்டும் நா..”,அவளை பேச வைத்தே தீர வேண்டும் என்ற உறுதி அவனிடம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.