(Reading time: 8 - 16 minutes)

திர், எழில் ரெண்டுப்பேர்க்கிட்டேயும் சொன்னா ஒரு ஆள் ஏற்பாடு செய்யப் போறாங்க.. ஆனா நீயேன் அவங்களை கலந்துக்க மாட்டேங்குறன்னு புரியல.. சரி ஆள் கிடைக்கிற வரைக்கும் நான் செய்றேன்னு சொன்னாலும் கேக்கறியா?  சரி ரெண்டுப்பேருக்கும் காஃபி கொண்டு வா என்று அனுப்பி வைத்தார்.

அமுதன் அறையை விட்டு வெளியே சென்றதும் ஆனந்தி இருவரிடமும் பொதுவாக பேசியப்படி இருந்தார். ஆனந்தியுடன் பேசியப்படி இருந்தாலும் நடு நடுவே அருளும் அறிவும் ஒருவரையொருவர் கேளி செய்து கிண்டலடித்தப்படி இருந்தனர். காஃபியை எடுத்து வந்த அமுதனுக்கு அதை பார்த்த போது ஏதோ மனதிற்குள் இனம் புரியாத கோபமும் ஆற்றாமையும் ஏற்பட்டது. அது ஏன் என்று தான் தெரியவில்லை. அவன் தான் அருள்மொழியை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றான். ஆனால் இப்போதோ அன்று மட்டும் ஒத்துக் கொண்டிருந்தால் இன்று அருள் அவனின் மனைவி. அருள் இன்று அவனுக்கு உரிமையானவளாக மாறியிருப்பாள். அந்த வாய்ப்பை தவறவிட்டதை நினைத்து இப்போது வருந்தினான்.

ஆண் பெண் நட்பு தவறில்லை என்று நினைப்பவர் தான் ஆனந்தி.. கல்லூரில் காலத்தில் இருந்து கதிரோடு இன்று வரை நட்போடு இருப்பவரும் கூட.. இப்போது அறிவும் அருளும் பேசிக் கொள்வதை ரசித்தப்படி தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அதையும் மீறி அவர்களுக்குள் இருக்கும் உறவு முறையை யோசித்து பார்த்த போது, இவர்களுக்குள் இருப்பது வெறும் நட்பு தானா? இல்லை அதை தாண்டி வேறெதுவுமா? என்ற கேள்வி பிறந்தது.

அப்படி ஒரு நினைப்பே ஆனந்திக்கு பிடிக்கவில்லை. முதலில் அருள்மொழியை பார்க்கும் போது ஏதும் தோன்றவில்லை. ஆனால் அருள்மொழியின் குணம் அவரை ஈர்த்தது. அது அவருக்கு மனதில் வேறொரு எண்ணத்தை வரவைத்தது. அதனால் இருவரைப்பற்றியும் தெரிந்துக் கொள்ள நினைத்தார். அதற்கேற்றார் போல் “வீட்டுக்கு போனதும் உனக்கு இருக்கு..” என்று அறிவழகன் கேளி செய்ததற்கு அருள்மொழி பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

“அருள்.. அறிவு உன்னோட மாமா பையன் சரி.. ரெண்டுப்பேரும் ஒரே வீட்லயா இருக்கீங்க..”

“ஆமாம் ஆன்ட்டி.. அது வந்து நான், அம்மா, அக்கா மூனு பேரும் எங்க மாமா வீட்ல தான் இருக்கோம்.” என்றவள், அதற்கு மேல அறிவுக்கும் அவளுக்குமான உறவு முறையை பற்றி கூறவில்லை. அவளைப் பொறுத்தவரை மகியும்.அறிவும் அவளுக்கு ஒரே மாதிரி தான்.

“ஆமாம் அத்தை பொண்ணு மாமா பையன்னா இந்நேரம் வீட்ல ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் பேசியிருப்பாங்களே.. உங்க வீட்ல எப்படி?” சாதாரணமாக கேட்பது போல் கேட்டார். ஆனால் அருள்மொழியின் முகம் தான் மாறிவிட்டது. அமுதனின் அம்மா அப்படி கேட்டதாலா? இல்லை அவர் சொன்னது போல் வீட்டில் அப்படி ஒரு பேச்சு வந்து, அதன்பின் நடக்கவிருந்த நிச்சயம் நின்றுப் போனதாலா என்று தெரியவில்லை.

அவள் முக மாற்றத்தை பார்த்தவர், “அய்யோ ஏதாச்சும் தப்பா கேட்டுட்டனாம்மா.. சாரி..” என்றார். அதில் அருள்மொழியும் சரியாகிக் கொண்டாள்.

“அதனால பரவாயில்ல ஆன்ட்டி.. நாங்க ரெண்டுப்பேரும் ப்ரண்ட் மட்டும் தான், ஏன் ஆன்ட்டி ஒரு பையனோட சாதாரணமா பழகறது தப்பா..”

“அய்யோ நான் அப்படி நினைச்சு கேக்கலம்மா.. இங்க இந்தியால இப்படி ரிலேட்டிவ்ஸ்க்குள்ள கல்யாணம்ங்கிறது சாதாரணமா நடக்கறது தானே அதான் கேட்டேன்.

“உண்மை  தான் ஆன்டி.. ஆனா எங்களுக்குள்ள அப்படி ஒன்னுமில்ல.. ஆனா அறிவுக்கு ஆல்ரெடி பொண்ணு ரெடியா இருக்கு..  இவனோட அத்தைப் பொண்ணு தான்.. அந்த  கருத்தம்மா ஏதோ இவன் என்கூட சுத்திக்கிட்டு இருக்கறதால அமைதியா இருக்கா.. இல்லன்னா சாமியாடிட மாட்டா..” என்று கேளி செய்ய, அவன் முறைத்தான். அதைக்கேட்டு ஆனந்திக்கு மட்டுமல்ல, அமுதனுக்கும் மனம் நிம்மதியானது.

“அத்தை பொண்ணுன்னா, இன்னொரு அத்தையோட பொண்ணா..”

“இல்ல ஆன்ட்டி.. அறிவோட அப்பா கூட பிறந்தவங்க ஒரு அத்தை தான்.. நான் அவனோட ஒன்னுவிட்ட அத்தை பொண்ணு..” என்றாள். ஆனால் இங்கு வந்ததிலிருந்தே அருளும் சரி அறிவும் சரி அமுதனை ஏற்கனவே தெரியும் என்பது போல் காட்டிக் கொள்ளவில்லை. அவனும் கூட அப்படித்தான் இருந்தான்.

பின் இருவரும் நேரமாகிவிட்டது என்று கிளம்பினார்கள். ஆனந்தியும் எழுந்து அவர்களை அனுப்ப வாசல் வரை வந்தார். வரவேற்பறைக்கு வந்த போது சோபாவில் தடுக்கி அருள் கீழே விழ பார்க்க, “ஹே லூசு பார்த்து..” என்று அறிவு பிடித்து நிறுத்தினான். இப்போது ஏனோ அமுதனுக்கு இருவரையும் பார்க்கும்போது பொறாமையோ கோபமோ தோன்றவில்லை.

“சரி வரேன் ஆன்ட்டி..” என்று இருவரும் விடைப்பெற்று வாசல் நோக்கிச் செல்லும்போது கதிரவனும் எழிலரசியும் வீட்டுக்குள் வந்தனர். மற்ற இருவரையும் அங்கே பார்த்து அதிர்ச்சிக்குள்ளானர்.

உறவு வளரும்...

Episode # 13

Episode # 15

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.