(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 05 - சகி

Nenchil thunivirunthaal

த்தனை நாள் வேண்டுதல் இது!இன்றுதான் கரம் கூட வாய்ப்புக் கிட்டியதா?விமான நிலையத்தில் எவரின் வருகையையோ எதிர்நோக்கி காத்திருந்தான் உடையான்.வருபவர் போகிறவர் அனைவரும் அவனிடம் புகைப்படம் எடுக்க வேண்டும்,அவனது கையொப்பம் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க அவர்களின் விண்ணப்பத்தை வேறு ஈடேற்றும் கட்டாயம் வேறு!!உலகமே கொண்டாடும் ஒரு கலைஞன் எவருக்காக இங்கு காத்திருக்கிறான்???அனைவரது கேள்விப் பார்வையும் அவனையே தாக்கியது.அவனோ அதை மதியாமல் தன் கடிகாரத்தை பார்ப்பதும்,எங்கோ வெறிப்பதுமாகவே இருந்தான்.

"சார் ஃப்லைட் லேண்ட் ஆகி முப்பது நிமிஷம் ஆச்சு!"அவனது உதவியாளன் உடையானின் செவியில் கிசுகிசுத்தான்.

"என்ன இன்னும் காணலை?"யாரையோ தேடின அவன் விழிகள்!!அவன் தேடிய பொழுதுக்குள் சற்று தூரத்தில் ஏதோ பரபரப்பாகி அங்கு ஒரு கூட்டம் கூடியது.

"ரித்திக் அங்கே என்னாச்சு?"

"பார்க்கிறேன் சார்!"அவன் உதவியாளன் சம்பவ இடத்திற்கு புறப்பட்டான்.அவன் வந்து சேரவதற்குள் பொறுமை தாளாதவன் அக்கூட்டம் நிரம்பிய இடத்திற்கு பயணமானான்.

"ஒண்ணமில்லை...டோன்ட் பீ பேனிக்!நான் ஒரு டாக்டர் தான்!"கம்பீரமான குரல் ஒன்று செவிகளில் விழுந்தது.

அவன் வருவதை கண்டதும் கூட்டத்தை விலக்கினான் உடையானின் உதவியாளன்.

"என்னாச்சு?"

"யாருன்னு தெரியலை சார்!வலிப்பு வந்துடுச்சு!"என்றான் ரித்திக்.சற்றே உற்று சூழ்நிலையை தரிசித்தவனின் விழிகள் விரிந்தன.

"அவ்வளவுதான்!ரிலாக்ஸ்!எதுவுமில்லை!"என்றப்படி ஒரு ஊசியை வலிப்பு வந்தவரின் கையில் செலுத்தினான் அவன்.

"அவ்வளவு தான்!"சில நொடிகளில் எல்லாம் சூழலை அமைதிப்படுத்தினான் அவன்.

"என்னாச்சு டாக்டர்?"விமான நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளர் வினவினார்.

"நத்திங் சீரியஸ்!ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் டிரிப்ஸ் ஏற்றினால் சரியாகிடும்!ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு பண்ணுங்க!"-கன நேரத்தில் துரிதமானது அனைத்தும்.பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்!

"தேங்க்யூ டாக்டர்!பை த வே உங்களை எங்கேயோ பார்த்துக்கிறேன்.நீங்க யாரு?"-அவன் மென்மையாக புன்னகைத்தான்.

"ஆதித்ய கரிகாலன்!"-அவன் பெயரை கேட்டதும் அவர் விழிகள் விரிந்தன.

"நீங்க தானே கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்!ரிசர்ச்ல லாஸ்ட் இயர் நோபல் பரிசு வாங்கினது?"என்றார் விழிகள் விரிய!!!

"ஞாபகம் வைத்திருக்கிறதுக்கு நன்றி!"புன்னகை மாறாமல் அமைதியாக கூறினான் அவன்.மேற்கொண்டு சில நலன்கள் விசாரிக்கப்பட்டு பின் விடைப்பெற்றான் அவன்.சற்று தூரத்தில் யாரையோ தேடின அவன் விழிகள்!

"இங்கே இருக்கேன்!"-அவன் பின்னல் இருந்து குரல் வந்தது.பின்னால் திரும்பியவனின் முகம் மட்டற்ற மகிழ்ச்சியில் விரிந்தது.

"உதய்!"-உடையானோ உர்ரென்று முகத்தை வைத்திருந்தான்.

"என்னடா?நான் ஊருக்கு வந்தது சந்தோஷமா இல்லையா?"மீண்டும் அதே வசீகரிக்கும் புன்னகை!

"நோவ்!காலையில இருந்து உங்களுக்காக வாட்ச்மேன் மாதிரி வெயிட் பண்றேன் தெரியுமா?அம்மா அப்போவே சொன்னாங்க சாப்பிட்டு போக சொல்லி,உங்களுக்காக அவசர அவசரமா வந்தேன்.சாப்பிட கூட இல்லை!நீங்க என்னன்னா தம்பியைவிட்டு அந்த மீசைக்கிட்ட நலம் விசாரிச்சிட்டு வரீங்க!"என்றான் குழந்தையாக!

"சரி...அலுத்துக்காதே!நீ ஏன் வந்த?காரை தானே அனுப்பி வைக்க சொன்னேன்?"என்றான் அவன் தோளில் கைப்போட்டப்படி!

"நீங்க இந்தியா கடைசியா எப்போ வந்தீங்க தெரியுமா?7 வருஷத்துக்கு முன்னாடி,7 வருஷம் கழித்து அண்ணனை பார்க்க போறேன்னு ஆசை ஆசையா ஓடி வந்தா ஏன் வந்தேன்னு கேட்கிறீங்க?இருங்க..அம்மாக்கிட்டயே சொல்றேன்!"மிரட்டினான் இளையவன்.

"சரி கோபப்படாதே!வா வீட்டுக்கு போகலாம்!"

"இருங்க!"என்று யாரையோ தேடினான் அவன்.

"யாரை தேடுற?"

"தனியாகவா வந்தீங்க?"

"ஆமா!ஏன் என்னாச்சு?"

"ம்கூம்...!ஒண்ணுமில்லை..நான் யாராவது வருவாங்கன்னு எதிர்ப்பார்த்தேன்!"சலித்துக்கொண்டான் உடையான்.

"அடி வாங்குவ!ஒழுங்கா வா!நீ யாரை தேடுறன்னு புரியுது!அப்படி எல்லாம் யாரும் இல்லை!"

"ச்சே!ஆல் மை எக்ஸ்படேஷன்ஸ் போச்சே!"அவ்வாறு அவன் கூறிய தொனியில் சிரித்துவிட்டான் ஆதித்ய கரிகாலன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.