"கடைசி வரைக்கும் இப்படியே இருந்துவிடுவேன்.வேற ஒரு பொண்ணை கனவுல கூட முடியாதுண்ணா!"முகம் கலை இழந்தது அவனுக்கு!!
"நான் அம்மாக்கிட்ட பேசுறேன்!"
"அண்ணா?"
"ஆனா,அந்தப் பொண்ணு அம்மாவை மதித்து நடக்கிறவளான்னு எனக்கு தெரியணும்,அதுக்கு அப்பறம் தான் பேச முடியும்!"இளையவனின் மனதில் ஒரு அச்சம்!இதை குறித்து சிந்திக்கவே இல்லையே!ஆம்...!பலரும் சிந்திக்காத இடம் இதுவல்லவா?
"அப்படி அவ இல்லன்னா?"அச்சம் தொனித்தது அவன் குரலில்!!
"நான் அம்மாவை தனியா என்கூட கூட்டிட்டு போயிடுவேன்."இடியை இறக்கினான் ஆதித்யா.
"அவங்க நான் உயிரோட இருக்கிற வரைக்கும், யாரையும் நம்பி வாழ கூடாது!நீ கேட்டியே எப்போண்ணா கல்யாணம் பண்ணிப்பன்னு, இந்த ஒரே பயத்தால தான் இதுநாள் வரைக்கும் அதைப்பற்றி நான் யோசிக்க கூட இல்லை!"மீண்டும் புன்னகையுடன் கூறிவிட்டு நடந்து சென்றான் ஆதித்யா.
உண்மையில் அந்நொடி அங்கு ஒரு உள்ளம் குற்ற உணர்வை சந்திக்க தான் செய்தது!!!
"எனக்கு வேலை இருக்கும்மா!என்னால போக முடியாது!உங்களுக்கு நான் இங்கே இருக்க பிடிக்கலைன்னா சொல்லுங்க,நான் அமெரிக்காவுக்கே கிளம்புறேன்!"தாய்க்கும் மகளுக்குமாக யுத்தம் வெடித்துக் கொண்டிருக்க,சமாதானம் செய்ய முயன்றிருந்தாள் மாயா.
"ஏ...என்னடி கூட கூட பேசுற?சொன்னா செய்ய மாட்டியா?"
"முடியாதும்மா!சும்மா அங்கே போ!இங்கே போன்னு!"
"ஏ...அது நம்ம சொந்த ஊருடி!"
"இருக்கட்டும்,வேணும்னா நீயும்,அக்காவும் கிளம்புங்க!என்ன ஆளை விடுங்க!"கை எடுத்து கும்பிட்டு வேகமாக படி ஏறினாள் ஸ்வேதா.உச்சக்கட்ட எரிச்சல் சத்யாவிற்கு!!முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது தெளிவாக தெரிந்தது.
"மா!"பயத்துடனே தாயை அழைத்தாள் மாயா.
"என்ன?என்ன வேணும்?நீயும் போக முடியாதுன்னு சொல்ல போறீயா?என் கண்ணு முன்னாடியே நிற்காதே!அப்படியே அறைந்துடுவேன்!போ!"-இது அனைத்து பெற்றோருக்குமான சுபாவம்,ஒரு பிள்ளை எப்படியே அப்படியே மறுபிள்ளையும் என்று முடிவெடுத்து விடுகின்றனர்.அல்லது ஒரு பிள்ளையின் மேலான சினத்தை மற்றொரு பிள்ளையின் மேல் பதிவு செய்துவிடுகின்றனர்.
தாயின் கடுமை துயரை அதிகரிக்க,கண்ணீருடன் தனது அறைக்குள் ஓடி கதவை தாழிட்டு கொண்டாள் மாயா. அவளுக்கு அந்நேரம் ஆறுதல் கூற அவளது சூரிய நாராயணரும் இல்லை.இரவு வேளை அல்லவா,அவரும் தலைமறைவாகிவிட்டார்!!!மென்மையான இருதயம் கொண்டவள்,சிறு கோபத்தை தாங்க மாட்டாள்!தாயின் இத்தகு கடுமை,அவளை பலவீனமடைய வைத்தது.மெத்தையில் அமர்ந்துக் கொண்டு,அழுதுத்தீர்த்தாள்.மனம் சோர்ந்திருந்ததால் அழுகை கட்டுக்கு வர மறுத்தது.பின் ஒரு வழியாய், கண்ணீர் கட்டுக்கு வர,நிலை கண்ணாடி முன் சென்று தன் சிவந்த கண்களைத் துடைத்தாள். அந்த நிலைக்கண்ணாடி அவள் பின்னால் திரை முழுதும் மறைக்காத அந்த ஓவியத்தை அவளுக்கு காட்டி தன்னால் இயன்ற உதவியை செய்தது!நீண்ட நிமிடமாய் நிலைக்கண்ணாடி வழி வல பாகம் மட்டுமே தெரிந்த அந்த ஓவியத்தின் பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஒரு பாகம் அவளது இட பாகத்தில் வீற்றிருந்த இதயத்தை வசீகரித்தது. தன்னையே அறியாமல் சென்று அதனை எடுத்து கொண்டு வந்து அமர்ந்தாள் மாயா. விழிகள் இல்லாத அந்த ஓவியம் அவளது பாரத்தை பெருமளவு குறைத்தது.அவளது இட கண் சிந்திய கண்ணீர் கன்னம் வழியே அந்த ஓவியத்தின் வல கண்ணில் விழுந்தது.
பலகனியில் நின்று தீவிர சிந்தனையுடன் திங்களை தரிசித்து கொண்டிருந்தவனது இட கண்ணில் தூசிப்பட்டு அவன் விழிகளை மூட வைத்தது. ஏதோ ஒரு பெரும் துன்பத்தை அளித்தது அது!!அவனது இடது கண் முழுதுமாக சிவந்துப் போனது!! வேதனை தாளாமல் உள்ளே வந்து முகத்தை நன்றாக கழுவினான் அவன். வேதனை சற்றே ஓய்ந்திருக்க, மனதளவில் ஏதோ ஒரு தடுமாற்றம்,ஒருவேளை தடம் மாற்றமாகவும் இருக்கலாம்!!அங்கே தான் வரைந்த அந்த விழியற்ற ஓவியத்தை தன்னுடன் இறுக அணைத்து ஆறுதல் தேடினாள் மாயா!இங்கே நேரம் கடப்பதை உணர்ந்தவன், வழக்கம் போல தலையணையை தன் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.முதன்முறையாய் அந்த இறுக்கம்,சற்று அதீத இறுக்கமாகவே இருந்தது!!!
தொடரும்!
{kunena_discuss:1163}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.