(Reading time: 13 - 25 minutes)

"பேசாம அம்மாவை தான் பார்க்க சொல்லணும் போல!"

"நீ ஏன் இவ்வளவு அவசரப்படுற?சரி இல்லையே..!"

"இல்லைண்ணா!நீங்களும் கல்யாணம் ஆகாம எத்தனை நாள் தான் காலம் கடத்துவீங்க?"அவன் உடையானை நம்புவதாக இல்லை.

"நீ வா!உன்னை விசாரிக்கணும்!"

"ஐயோ அண்ணா!பிலீவ் மீ!"

"வாடா!"அவனை இழுத்துக்கொண்டு சென்றான் ஆதித்யா.

"அம்மா எப்படி இருக்காங்க உதய்?"அவனது கேள்வியில் ஒரே தவிப்பு!

"ம்கூம்!இப்போ மட்டும் எங்கிருந்து இவ்வளவு பாசம்?நானாச்சு அடிக்கடி உங்களை வந்துப் பார்ப்பேன்!அம்மா 7 வருஷம் கழித்து உங்களை இப்போ தான் பார்க்கப் போறாங்க!"

"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே!"என்றான் புன்னகையுடன்!!

"சிரிக்காதீங்க!உங்களைப் பார்க்காம ரொம்ப கஷ்டப்படுறாங்கண்ணா!"கவலையுடன் கூறினான் இளையவன்.

"கவலைப்படாதே!அங்கே சிட்டிசன்ஷிப்பை கேன்சல் பண்ணிட்டு வந்துடுறேன்!"

"ம்?நிஜமாவா?"பூரிப்புடன் கேட்டான் உடையான்.

"ம்..!"

"சொல்லிட்டீங்கல்ல!இனி நான் பார்த்துக்கிறேன்!ஆமா,இத்தனை வருஷம் கழித்து வந்திருக்கீங்களே,எங்களை பார்க்க தானா?இல்லை...வேற எதாச்சு காரணம் இருக்கா?"இளையவனுக்கு எப்போதும் குறும்புத்தான்,அவன் கேள்வியிலும் கள்ளத்தனம் ஔிந்திருந்தது.

"ஆமா!இப்போ தான் வரவேண்டிய நேரம் வந்திருக்கு!"ஆனால்,முதலாமானவன் அவ்வாறு இல்லை...அவன் பேச்சில் சூட்சமம் இல்லாத வார்த்தைகளே இருக்க இயலாது.பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,அது என்ன நேரம் என்று!!!

என்ன பார்க்கிறீர்கள்?மீண்டும் மீண்டும் குழப்பமான சூழல் உருவாகின்றதா?நீதி மார்க்கத்தை தரிசிக்க சங்கடம் தோன்றுகிறதா?என்றுமில்லாத கவலை இன்று இதயத்தை வியாபிக்கின்றதா???ம்...!இருக்கலாம்!அனைவராலும் துக்கத்தில் சுகத்தை காண இயலாதல்லவா?துக்கத்தில் சுகமா?ஆம்..!துக்கத்தில் சுகம் தான்!சுகத்துக்கம் என்பது வாழ்வின் இரு ஆசான்கள்!ஒருவர் தங்கள் மீது தயை காட்டுவார்.தங்களை ஆராதிக்க வைப்பவர் அவர்.தங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்.தங்களை தோழமையாய் என்பவர்.மற்றொருவர்,அராஜககாரர்!எப்போதும் இன்னல்களையே விளைவிப்பவர். கண்ணீருக்கு காரணமாவார். நிலைகுலைய செய்து தலைகுனிய வைப்பார்.ஆனால்,இவரது பயிற்சி இல்லாமல் என்றும் முதலாம் ஆசானிடம் எவராலும் நட்பு பாராட்ட இயலாது!!சுகத்திற்கு தகுதி வேண்டும் என்றால்,அதனை நல்குவது துக்கமே!!பகல் முழுதும் சுற்றித்திரியும் காக்கை இருளில் மூழ்கும் சமயம்,பலவீனப்படுகிறது,துயரில் ஆழ்கிறது.அச்சமயம் கூகையோ கொக்கரிக்கும்,காக்கையை அச்சம் கொள்ள வைக்கும்,குயில்களோ காக்கையின் வசிப்பிடத்தை தனதாக்கும்,அதன் துக்கத்தை அனைவரும் கொண்டாடுவர்.அதே காக்கை கதிரொளி துணையுடன் எழும் சமயத்தில் விளைவது தான் என்ன?கூகையின் விழிகள் இருளில் மூழ்கும்!குயில்ளோ அஞ்சி ஓடும்!காக்கையின் கரையும் சப்தமும் கர்ஜனையாய் அதற்கு தோன்றும்,பலவீனம் பலப்படும்!அதற்கெல்லாம் காக்கைக்கு தேவை சற்றே பொறுமையும்,நம்பிக்கையும் தான்!அப்போது தானே துக்கம் என்னும் ஆசான்,கருணை பொழிந்து இனி இழக்க என்ன வைத்திருக்கிறாய்?ஏதும் இல்லையே..!எனில்,துணிந்துபோராடு,காயம் செந்நீர் வடிக்கட்டும்,நான் வைத்த இலக்கில் சென்று இளைப்பாரு என்ற நல்லொளி காட்டி நம்மை வெற்றியடைய செய்கிறார். மனதில் என்று, நம்பிக்கை மற்றும் பொறுமை சரியான விகிதத்தில் கலக்கிறதோ அன்று கதிரொளியாய் காக்க இறைவனே இரதம் ஊர்ந்து முன்வருவான்.ஐயம் கொள்ளாதீர்கள்!!

"தய்க்கு இது தெரிந்தே ஆகணும்னு நினைக்கிறீங்களா?"ஏதோ புத்தகத்தில் மூழ்கி இருந்த தாயிடம் வினவினான் ஆதித்ய கரிகாலன்.

சில நொடிகள் மௌனம் காத்தவர்,புத்தகத்தை மூடி மேசை மீது வைத்தார்.

"ஆமாம்!அவனுடைய அடையாளத்தை அவன் தெரிந்துக்கணும் ஆதி!"

"ஆனா அம்மா!அவங்க அவனை....வேணாம்மா!"இளவலின் எதிர்காலம் குறித்த கவலை தமையனுக்கு!!

"இது அவனுடைய உரிமை ஆதி!"

"மா!நான் சொல்றதை கேளுங்க!அவன்  வெளியே தான் விளையாட்டா இருக்கான்.உள்ளுக்குள்ளே அப்படியே அப்பாவுடைய குணம் அவனுக்கு!"- அவன் வாக்கியம், தர்மாவின் அக்னிப்பார்வையை அவன் மேல் விழ வைத்தது.

"மன்னிச்சுடுங்கம்மா!இத்தனை நாள் இதை நாம மறைத்தோம்னு தெரிந்தால்,அவன் நம்மளைவிட்டு போக வாய்ப்பு இருக்கும்மா!"

"அவன் போக மாட்டான் ஆதி! அவன் என்னுடைய மகன்!அவன் போக மாட்டான் ஆதி!ஒருவேளை,அப்படியே அவன் போனாலும்....பரவாயில்லை...இத்தனை நாளா மறைத்தது போதும்!"தடுமாறின அவர் வார்த்தைகள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.