(Reading time: 14 - 28 minutes)

“மா. அது எல்லாம் வேண்டாம். உங்க கிட்டே ஒன்னு சொல்லனும்னு நினைச்சேன். நீங்க மித்ராவ அவளுக்கு எந்த டைம் எந்த புடவை கட்டணும்னு தோணுதோ அதே கட்டச் சொல்லுங்க. அதே மாதிரி ரிசெப்ஷனுக்கு லேஹெங்கா ஆன்லைனில் ஆர்டர் பண்றேன். அதை பிட்டிங் பார்க்க மட்டும் டைலர் வரச் சொல்லிடுங்க” என்றான்.

அப்போது உள்ளே வந்த சுமித்ரா “டேய் அண்ணா. சும்மா கலக்குறியே. ரூல்ஸ் ராமனுஜத்தை பக்கத்திலேயே வச்சுக்கிட்டு ஆன்லைன் ஆர்டரா நடத்து. நடத்து. “ என்று போட்டுக் கொடுக்க, ராம் ஷ்யாமை முறைத்தான்.

“அப்பா  நோ.. மீ பாவம். உங்களுக்கு அந்தப் பேரை வச்சது உங்க செல்லப் பொண்ணு தான். “ என்று அவளை மாட்டி விட , இப்போது ராம் அவளை முறைத்தான்.

அதை துடைத்து போட்டு விட்டு “டாடி. மீ நோ முறைசிங். இந்த அரும்பெரும் பேரை கண்டு பிடிச்சதே உங்க செல்ல மருமகள் மித்ராதான்” என்று கூற, ராம் சிரித்து விட்டான்.

சுமித்ரா காதைப் பிடித்து திருகியவன் “விளையாட்டு ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு. கொஞ்சம் குறைச்சிக்கோ “ என்று மட்டும் கூறி விட்டுச் சென்று விட, மைதிலியும் சென்று விட்டாள்.

“டேய் அண்ணா. இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா”

“என்னடி சொல்ற?

“இல்லை ராமர் இருக்குமிடம் சீதைக்கு அயோத்தியாம், அத இந்த கலியுகத்திலே பாலோ பண்றது யாருன்னா இந்த ராமும் , மைதியும் தானாம். அப்படின்னு நம்ம வீட்டு ஒல்டீஸ் ரெண்டும் ஊர்லே இருக்கிறவங்களுக்கு எல்லாம் கதா காலட்சேபம் நடத்திட்டு இருக்குதுங்க. கொஞ்சம் சீக்கிரம் வந்து என்னைக் காப்பாத்தேன்” என்று முழு நீள வசனம் பேசிவிட்டுத் தண்ணீர் குடித்தாள்.

அப்போதுதான் ரவியைப் பார்த்தவள், “ஹாய்.. ரவி அண்ணா. உங்கள எங்கிருந்து பிடிச்சாங்க? பரவால்லப்பா இந்த வானத்தைப் போலே குடும்பம் தீயா வேலைய பார்க்குதுங்க.” என்று மேலும் வம்பளந்து கொண்டு இருந்தாள்.

பேசியபடியே ஷ்யாம் ரெடி ஆகி வர, நிச்சயம் நல்லபடியாக நடைபெற்று முடிந்தது.

சுமித்ரா, சைந்தவி, ரவி மூவரின் கலகலப்பாலும் மணமக்கள் முகத்திலும் அவ்வப்போது சிரிப்பு வந்து சென்றது.

மாலையிலும் வரவேற்பில் நல்ல கூட்டம். ஒரு சிலர் அங்கே அங்கே முணுமுணுத்தாலும் , பெரும்பாலோனோர் அவர்களை பகைத்துக் கொள்ள விரும்பாமல், பேசாமல் வாழ்த்தி விட்டுச் சென்றனர்

தொழில் விஷயத்தில் ராமே சில விஷயங்களில் தேவலாம் என்பதைப் போல் ஷ்யாமின் நடவடிக்கை இருக்கும் என்பதால் வந்தவர்கள் அனைவரும் மனதை மறைத்து  ஒரு உதட்டு சிரிப்போடு வாழ்த்தி விட்டுச் சென்றனர்.

மாலை வரவேற்பு ஆரம்பிக்கும் போது மித்ராவை மேடைக்கு அழைத்து வரச் சொல்லவும், திரும்பி பார்த்த ஷ்யாம் அசந்து விட்டான்.

அவனின் தேர்வு தான் என்றாலும் கூட அது அவளுக்குப் பொருந்திய விதம் பக்கவாக இருந்தது. இத்தனை நாள் அவளுக்கு டிரஸ் பொருந்துகிறதா என்று மட்டுமே கண்ட கண்கள், இன்று அவளின் அழகை எடுத்துக் காட்டுகிறது என்று எண்ண வைத்தது.

அவன் கண்கள் அவளை விட்டு விலக மறுத்தது. பக்கத்தில் இருந்த ரவி

“டேய்.. ஜொள்ளு ஆறு ஓடுது. காவேரி இங்கே இருக்குன்னு மக்கள் ஓடோடி வந்துறப் போறாங்க பார்த்துக்கோ”

“டேய் நீ இன்னும் இங்கேதான் நிக்கறியா ?

“நேரம்டா “ என்று மட்டும் கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கினான்.

அன்று காலையில் இருந்து நடைபெற்ற சட்கங்குகளில் எல்லாம் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சொன்னதை மட்டும் செய்து கொண்டு இருந்தார்கள். இப்போது அவள் அருகில் சற்று நெருங்கியவன்

“மிதுமா.. செம சூப்பரா இருக்க. உனக்கு பிடிச்சு இருக்கா?

மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள், “பிடிச்சு இருக்கு” என்று கூற, மெதுவாக அவளின் கையை அழுத்திக் கொடுத்தான். இருவரும் நேருக்கு நேர் பார்த்த சில நிமிடங்களில் அவர்களை அறியாமல் வழிந்த நேசம் கேமரா கண்களுக்குத் தெரிய, அழகாக அந்த போஸ்சை கிளிக் செய்தார் போடோக்ராபர்.

ரிசெப்ஷனில் தோன்றிய அந்த இதமும், மென்மையும் மறுநாள் திருமணம் முடியும் வரை தொடர்ந்தது.

இளையவர்களின் முயற்சியால் ரிசெப்ஷன் போது ஆட்டம் , கொண்டாட்டம் எல்லாம் நடந்தது. ஷ்யாம் பிரெண்ட்ஸ் சிலர் வர எல்லோரும் சேர்ந்து ஒரே ஆட்டம் தான்.

ரிசெப்ஷன் முடியவும் ஷ்யாம் பிரெண்ட்ஸ் அவனையும் ஆட அழைத்துச் செல்ல, அவன் மறுத்தான். அவனை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றனர்.

அவர்களுக்காக இரண்டு பாடல்கள் நடனம் ஆடிவிட்டு வந்தான் ஷ்யாம். பிறகு பாட்டுக் கச்சேரியிலும் அவனைப் பாட சொல்லி வற்புறுத்த,

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது

அதை அறியாமல் விட மாட்டென்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.