(Reading time: 14 - 28 minutes)

அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது

கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்

கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா

சிரிக்கும்போது கண்ணில் மின்னல்

தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா

மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே

அதுவா அதுவா அதுவா

கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே

அதுவா அதுவா அதுவா

அதை அறியாமல் விட மாட்டென்

அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது

அதை அறியாமல் விட மாட்டென்

அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று

தள்ளி உள்ளதே அதுவா தள்ளி உள்ளதே அதுவா

சங்கு கழுத்தை பாசிமணிகள்

தடவுகின்றதே அதுவா தடவுகின்றதே அதுவா

ஒவ்வொரு வாக்கியம் முடியும் முன்னே புன்னகை செய்வாய்

அதுவா அதுவா அதுவா

ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய்

அதுவா அதுவா அதுவா

அதை அறியாமல் விட மாட்டென்

அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது

அதை அறியாமல் விட மாட்டென்

அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது

என்று பாடினான் ஷ்யாம். அவன் பாடலைக் கேட்ட யாரும் முதல் நாள் இரவு தான் முடிவு செய்த கல்யாணம் என்று எண்ண மாட்டார்கள். அந்த அளவிற்கு ஆழ்ந்து பாடினான்.

கல்யாணத்திற்கு சம்மதித்த பின் கூட இருந்த தயக்கம் எல்லாம் எப்போது அவளை அவனின் கண்கள் ரசிக்கத் தொடங்கியதோ அப்போது பறந்து விட்டது.

ஷ்யாமைப் பொறுத்தவரை மித்ரா தான் தனக்கு ஏற்றவள் என்ற எண்ணம் வலுப்பெற்று விட்டது. அவனின் முகத்தில் தெரிந்த தெளிவும், மகிழ்ச்சியும் வீட்டில் இருந்த பெரியவர்கள் கண்களுக்குத் தப்பவில்லை.

வரவேற்பு முடிந்த பின் எல்லோரும் செல்ல, ரவியின் அருகில் வந்த ராம்

“தேங்க்ஸ் ரவி. நாங்கள் எதிர்பார்த்ததை விட அவன் திருமணம் நன்றாக நடைபெற்றுக் கொண்டு இருப்பதற்கு காரணம் நீயும் ஒரு முக்கிய காரணம். எப்படி நன்றி சொல்ல என்று தெரியவில்லை. உனக்கு என்ன வேணுமோ கேள்”

“அப்பா, ஒன்னும் பெரிசா வேண்டாம். ஒரு பச்சிலோர்ஸ் பார்ட்டி மட்டும் ஏற்பாடு பண்ணுங்க” என்று ரவி கூற, இப்போது அவனை முறைத்தான் ராம்.

அப்போது அங்கே வந்த சந்தோஷ் “டேய் ரவி, இதைப் போய் ரூல்ஸ் கிட்டே கேட்டுட்டு இருக்கியே. நீ வா நான் ஏற்பாடு பண்ணித் தரேன்” என்று கூறினான்.

“டேய். என்னடா சின்னப் பசங்களுக்கு சமமா கிழவன் நீயும் ஏத்தி விட்டுட்டு இருக்க?

“யாரு கிழவன்? இப்போ கூட டென்னிஸ் விளையாடலாம் வரியா? “ என்று சந்திக்கு வந்தான்.

தன் தலையில் அடித்துக் கொண்ட ராம் “என்னவோ பண்ணு” என்று கூறிவிட்டுச் சென்று விட்டான்.

இப்படியான கலட்டாக்களோடு அன்றைய இரவு கழிய, மறுநாள் அதி காலையில் உறவினர்கள் ஷ்யாம், மித்ரா இருவருக்கும் தனித்தனியாக நலுங்கு வைத்து அனுப்பி வைத்தனர்.

குளித்து ரெடியாகி வந்த இருவரையும் பார்லர் ஆட்கள் கவனித்துக் கொள்ள, மற்றவர்கள் சடங்குகளில் பிஸி ஆகினர்.

முதலில் ஷ்யாமை அழைத்து மணவறையில் அமர்த்தி, ஹோமம் செய்ய, சற்று நேரத்தில் மணமகளை அழைத்து வரசொன்னர்கள். அவளின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து இருந்தான் ஷ்யாம்.

முந்தைய நாள் அலங்கராத்தில் ஒரு விதத்தில் கவர்ந்தவள், இன்றைக்கு பட்டுப் புடவையும் , நகையும் அலங்காரமும் பார்க்க மனதிற்கு பாந்தமாக நிறைவாகத் தெரிந்தாள்.

மற்றவர்களின் அசைவில் தன்னை மீட்டவன், குறித்த நேரத்தில் மனதாரக் கடவுளை வேண்டிக் கொண்டு மாங்கல்யம் அணிவிக்க வந்த அவன் கைகள் நிற்க, சில நொடிகளில் மித்ரா நிமிர்ந்து பார்க்கவும், அவளின் கண்ணைப் பார்த்து அவன் புருவங்கள் உயர்த்த, அவன் கேள்வி புரிந்தவளாக புன்னகையோடு கண் மூடித் திறந்தாள்.

அதில் மகிழ்ச்சி அடைந்தவன் அவளின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்துத் தன் மனைவி ஆக்கிக் கொண்டான் ஷ்யாம். இருவரின் பெற்றோரும் கண்கள் நிறைய இதைப் பார்த்து ஆனந்தம் அடைந்தனர். இந்த சந்தோஷம் என்றும் தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டனர்.

தொடருமா?

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.