Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

ன்று 1999

அந்த ஒரு நாள் முழுவதும் திலோவிற்கு அவள் அப்பா மகாதேவனே பார்த்து பார்த்து அனைத்து வேலைகளையும் செய்தார்.

ஆனால் சித்தார்த்துடன் இருந்து பழகிப் போன திலோவிற்கு அவன் ஞாபகமே வர அவள் மகாதேவனிடம்

”சரிப்பா நான் சித்தார்த் கிட்ட போறேன்” என எழுந்தவளை அப்படியே அமுக்கி உட்கார வைத்தார் மகாதேவன்

”எதுக்குமா அவன் கிட்ட போற, அப்பா நான் இருக்கேன்ல என் கூட இரு” என்றார்

”எதுக்கு. இத்தனை நாளா நான் அங்க தானே இருந்தேன்”

”இனிமே இங்க இரு, நீ அங்க போக வேணாம்”

”ஏன்?”

”ஏன்னா பாரு உன்னை அவன் தானே காலையில விட்டுட்டுப் போனான், அதுக்குள்ள மறந்துட்டியா எல்லாத்தையும்”

”ஆமாம்பா”

”அவனுக்கு நீ வேணாவாம், அதான் உன்னை இங்க விட்டுட்டு போயிட்டான்”

”அப்படியா இல்லையே அப்படியிருக்காது”

”என்ன இல்லையே அவன் என்கிட்ட சொல்லிட்டுதான் உன்னை கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனான்”

”நிஜமாவா”

”சத்தியமா” என அவள் தலையில் அடித்து சத்தியம் செய்ய அவள் நம்பிவிட்டாள். அவளுக்கு சாப்பாடு ஊட்டி தன்னுடனே படுக்க வைத்துக் கொண்டார் மகாதேவன்.

அவள் உறங்கியதும் பார்வதி மகாதேவனை எழுப்பி

”உங்களுக்கு அறிவிருக்கா பெத்த பொண்ணு மேல பொய் சத்தியம் செய்றீங்களே மனுசனா நீங்க” என கோபப்பட்டார்.

”என்னை என்னடி செய்ய சொல்ற. பார்த்தியா உன் பொண்ணை வீட்டுக்கு வந்து முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள சித்துகிட்ட போகனும்னு சொல்றா. எனக்கு எப்படியிருந்திருக்கும் இப்படியே விட்டா அவன் இவளை தூக்கிட்டுப் போயிடுவான்”

”போட்டுமே என்ன தப்புங்கறேன்” என்றார் பார்வதி

”அடியே அவன் பணக்காரன்டி. இன்னிக்கு தனியா இருக்கான். அப்பா அம்மா இல்ல, போர் அடிக்குதுன்னு இவளை கொஞ்சறான் அவன் வளர்ந்து பெரியவனாயிட்டா இவளை திரும்பி கூட பார்க்கமாட்டான்.

பெரிய கோடீஸ்வரன் பையன் அவனுக்காக எத்தனை பொண்ணுங்க போட்டி போடுவாங்க, .பணக்கார வீட்டு பொண்ணுங்கள்லாம் க்யூல நிப்பாங்க. நம்ம பொண்ணு அங்க நிக்க முடியுமா என்னிக்கு இருந்தாலும் திலோ சாதாரண போஸ்ட் மேன் பொண்ணுதான் அதை நீ புரிஞ்சிக்க”

”ஏங்க சித்தார்த் நம்ம பொண்ணு மேல உயிரா இருக்கான் அப்படியிருக்கறப்ப அவன் ஏன் இவளை விடப்போறான்”

”அடி பைத்தியம் அவனை பொருத்தவரைக்கும் இவள் வெறும் டால்தான். அவன் கண்ணுக்கு இப்பவும் அப்படித்தான் தெரியறா. என்னிக்காவது இவள் பேர் சொல்லி கூப்பிட்டிருக்கானா சொல்லு, அவனுக்கு இவள் பேர் கூட தெரியாது, இந்த லட்சணத்துல அவன் இவளை பத்திரமா பார்த்துக்குவானா”

”சரிங்க அப்படியே இருக்கட்டும் ஆனா, அவன் நம்ம பொண்ணுக்காக செஞ்ச அத்தனை விசயத்தையும் மறந்துட்டீங்களா நீங்க”

”என்னத்தடி செஞ்சான் என்னத்த செஞ்சான். பணக்கார வீட்ல இப்படிதான் இருப்பாங்க தன் பையன் கூட யாராவது ஒரு ஏழை பையனையோ, ட்ரைவர் பையனையோ சேர்த்து வளர்ப்பாங்க. அவனுக்கு அடிமை மாதிரி அந்த பையனும் வேலை செய்யற மாதிரி மாத்துவாங்க என்ன இங்க பையன் இல்லாம பொண்ணு இருக்கா அவ்ளோதான் வித்தியாசம் அதை புரிஞ்சிக்க”

”என்ன நீங்க என்னென்னவோ சொல்றீங்க எனக்கு புரியல” என குழம்பினார் பார்வதி

”உனக்கு ஆசை கண்ணை மறைச்சிடுச்சிடி. அதான் பேராசையால உண்மை உன் கண்ணுக்கு தெரியல. அந்த பெரியவர் அன்னிக்கு என்ன சொன்னார்னு தெரியும்ல இங்க கான்வென்ட்ல சித்துக்கு படிப்பு முடிஞ்சதும் பெரிய படிப்புக்கு லண்டனுக்கு அனுப்பறதா இருக்காராம்.

எப்படியும் இன்னும் 5 வருஷத்துல படிப்பு முடிச்சிட்டு அவன் லண்டனுக்கு பறந்துடுவான். அப்புறம் நம்ம பொண்ணு நிலைமை என்னாகிறது. போறவன் என்ன இவளையும் கூட்டிட்டு போவானா அப்படியே கூட்டிட்டு போனாலும் லண்டன்ல இருக்கற பொண்ணுங்களோட பார்த்தா நம்ம பொண்ணு சாதாதான் தெரியும்ல அவன் விட்டுடுவான்டி

சின்ன பசங்கள நம்ப கூடாது என்னிக்கு இருந்தாலும் சித்தார்த் ஆபத்தானவன், இன்னும் கொஞ்ச வருஷத்துல நம்ம பொண்ணு வயசுக்கு வந்துட்டான்னு வை. அவன் ஏதாவது செஞ்சிட்டான்னா அப்புறம் கல்யாணம் ஆகாமயே உன் பொண்ணு கர்ப்பமா நின்னா என்ன பண்ணுவ. சித்துகிட்ட போய் நின்னாகூட அவன் முடியாதுன்னு சொல்வான்டி அதை மட்டும் மண்டையில ஏத்திக்க” என கூறிவிட்டு படுத்துவிட்டார்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகாsaaru 2018-07-17 15:11
Woooowww
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகாThenmozhi 2018-07-06 16:39
nice ud Sasirekha (y)

Sidharth Thilo than Doll-nu kndupidichutara?

Athuku mela enna agum?

Waiting to read about it
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகாmahinagaraj 2018-07-06 12:04
amazing super..... :clap: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகாராஜேந்திரன் 2018-07-05 22:50
interesting update :yes: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகாராணி 2018-07-05 22:48
விறுவிறுப்பாக உள்ளது அடுத்த வாரம் இன்னும் களைகட்டும் போல தெரிகிறது :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகாvijayalakshmi 2018-07-05 22:47
all the best big sid next epilayavathu thilova kandupudichudunga :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகாDayani 2018-07-05 22:33
Superb update. Eagerly waiting for Sid to know his Doll. Thanks for the big update and waiting for the next. :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகாAdharvJo 2018-07-05 21:10
Sid oda indha "adra rama adra rama" attam funny to read :D for sure siddha n kupitta mattum ivarukku purivadhu konjam.doubt than avarukk purinjalum ninga avara confuse panama vittuduvingala sasi ma'am :D :lol: irundhalum boss k employees mele ivalo nambikaya :Q: INI attam eppadi kalai katta pgudhu endru therindhu kola waiting.thank you for this long and interesting update :clap: :clap: past and present oda synchronization is superb (y) look forward for next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகாmadhumathi9 2018-07-05 19:43
Mudhalil big :thnkx: mam kooduthalaanna pages koduthatharkku.eppothaan intha sidhu kandupidithu steam ponga mam.intha vaaram kandu pidithu viduvaanga appadinnu vaaram thaan poikittirukku.aanal sidha kandu pidikkave illa.emaanthu poittom. :no: romba aarvama irukku eppo kandu pidikka porangannu therinthu kolla.nice epi.padikka viruviruppa supera poguthu. :clap: :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top