(Reading time: 18 - 36 minutes)

தற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? சினிமாவில் அவளுக்கு தேவையான பாதுகாப்பு குறித்து அவளுக்காக தன் தொழிலை கூட மகனிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, புவனாவின் கணவன், அவளின் பெரியப்பா சிவகுரு தான் வந்து அவளுக்கு துணையாக இருந்தார். எந்த படம் ஒத்துக் கொள்ள வேண்டும், வேண்டாம், அதன் தயாரிப்பாளர் யார்? இயக்குனர், உடன் நடிக்கும் நடிகர் இத்தனையும் பார்த்து தான் அவர் அந்த படத்தை ஒத்துக் கொள்ள சொல்வார். இதற்கும் அவர்கள் சென்னையில் கூட அப்போது இல்லை. அவளுக்காக இங்கேயும் அங்கேயும் அலைந்துக் கொண்டிருப்பார்.

அவள் படம் ஒத்துக் கொண்டபின் வரும் அட்வான்ஸ் பணத்தையும் சம்பளத்தை மட்டும் அவள் பெற்றோர்கள் வாங்கிக் கொள்வர். சிவகுருவின் தலையீடு அவர்களுக்கு பிடிக்காது தான், ஆனால் பெரியப்பா முடிவு செய்யாவிட்டால் நான் நடிக்க மாட்டேன் என்று மதுரிமா கூறியதால் வேறு வழியில்லாமல், அவள் நடித்தாலே போதும் என்று அமைதியாகிவிட்டனர். இப்போது சிவகுரு உயிரோடு இல்லை, ஆனாலும் புவனா,சிவகுருவின் மகன் பாலமுருகன் இப்போது தன் தொழிலோடு சேர்த்து மதுரிமாவின் நடிப்பு சம்பந்தமான வேலையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான். அதற்கேற்றார் போல் புவனாவும் பாலமுருகனும் சென்னைக்கே வந்துவிட்டனர்.

இப்போதும் புவனா மற்றும் பாலமுருகனின் எண்ணம், மதுரிமா நடித்தது வரை போதும், சினிமாவை விட்டு ஒதுங்கி விட வேண்டும் என்பது தான், அதிலும் புவனாவின் கவலை மதுரிமாவிற்கு நல்லப்படியாக திருமணம்  முடித்து வைப்பது தான், அதிலும் அவள் ஒரு நடிகை என்ற காரணத்தால், அவளது திருமணம் குறித்த கவலை புவனாவிற்கு அதிகமாகவே இருக்கிறது. அதை மதுரிமாவும் உணர்ந்ததால் தான், புவனாவின் பேச்சில் அவளுக்கு கோபம் வருவதில்லை.

“பெரியம்மா சாத்விக் மேல அப்படி ஒரு இன்ட்ரஸ்ட் இருந்தா உங்களுக்கு சொல்லாம இருப்பேனா? என்னை பொறுத்த வரைக்கும் சாத்விக் சினிமா ஃபீல்ட்ல ஒரு நல்ல ப்ரண்ட்.. அதுதான் அவர் கூட எனக்கு  நடிக்க ஈஸியா இருக்கு.  மத்தப்படி வேற ஒன்னுமில்ல பெரியம்மா.. நான் கல்யாணம் செஞ்சுக்கும் போது இந்த சினிமாவுக்கு முழுக்கு போடணும்னு நினைக்கிறேன். என்னை கல்யாணம் செஞ்சுக்க போறவர் என்னை ஒரு நடிகையா பார்க்கக் கூடாது.. என்னை சாதாரண ஒரு பொண்ணா தான் பார்க்கணும்.. அப்படி ஒரு ஆளை பார்த்தா உடனே இந்த நடிக்கிறதெல்லாம் விட்டுட்டு  அவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டு செட்டில் ஆயிடுவேன்.

அதுவரைக்கும் கொஞ்சம் காத்திருங்க பெரியம்மா.. இப்போ நீங்க உடனடியா மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்க ஆசைப்பட்டா, இதோ நம்ம தேவி இருக்கால்ல.. அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைங்க..” என்று மதுரிமா தேவியை பார்த்து கைக்காட்டியதும், அதுவரை இருவரின் பேச்சை வேடிக்கைப் பார்த்தப்படி இருந்த தேவி அதிர்ந்தாள்.

“நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்.  ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் நினைக்கிறேன். ஆனா அவ தான் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கா..” என்று புவனா அதற்கும் குறைப்பட்டார்.

“அய்யோ அம்மா ப்ளிஸ்  என்னோட கல்யாணப் பேச்சை எடுக்காதீங்க.. நான் கல்யாணமே செய்துக்க போறதில்ல.. நான் இப்படியே இருந்துட்றேன் ம்மா..” என்று தேவி கெஞ்சலாக கூறவும்,

“ரெண்டுப்பேரும் இப்படி ஏதாவது காரணத்தை சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. அம்மாவா என்னோட கவலை உங்களுக்கு எங்க புரியுது?” என்று புவனா வருத்தமாக பேச,

“அம்மா பொண்ணுங்களுக்கு கல்யாணம்னா கூடுதல் பொறுப்பு வந்துடும்.. அவங்க கொஞ்ச நாளைக்கு இப்படியே ஜாலியா இருக்கணும்னு நினைக்கிறாங்க.. விடுங்களேன் ம்மா..” என்று சொல்லியப்படி பாலமுருகனும் அங்கே வந்து அமர்ந்தான்.

தங்கள் சகோதரனின் ஆதரவு தங்களுக்கு இருப்பதை நினைத்து இருவரும் மகிழ்ச்சியோடு புன்னகைத்தனர்.

“ம்ம் சப்போர்ட்டுக்கு கூட ஒரு ஆளா.. இதுக்கு மேல என்னோட பேச்சு எடுபடுமா..” என்று புவனா குறைப்பட்டுக் கொண்டார். அடுத்து பேச்சு திருமணத்தை தவிர்த்து வேறு பக்கம் திசை மாறியது. நால்வரும் தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“ஓ நீங்கல்லாம் இங்க தான் இருக்கீங்களா? என்றப்படி ரூபினி உள்ளே வரவும் தான், அவர்கள் சுற்றுப்புறத்தை கவனிக்க ஆரம்பித்தனர்.

ரூபினி பாலமுருகனின் மனைவி. அவர்களுக்கு திருமணமாகி இரு வருடங்கள் ஆகிறது. இரண்டு நாளாக  பிறந்த வீட்டிற்கு சென்றிருந்தவள், இப்போது தான் வந்திருக்கிறாள்.

“ஹாய் மது எப்போ வந்த? எப்படியிருக்க?” என்று தன் நாத்தனாரை விசாரித்தவள், அவர்களோடு இருந்த தேவியை பார்த்து கடுப்பானாள்.

“நேத்து வந்தேன் அண்ணி..” என்ற மதுரிமாவின் பதிலை கூட காதில் வாங்காமல், தேவியை பார்த்து..

“உனக்கு வேலையில்லையா.. இவங்கக் கூட உக்கார்ந்து கதை பேசிட்டு இருக்க..” என்று தேவியை பார்த்து கேட்டாள். ரூபினியின் அந்த கேள்வி யாருக்கும் பிடித்தமில்லை என்பது மற்ற மூவரும் ரூபினியை பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. ஆனால் அதற்கெல்லாம் அவள் கவலைப்படவில்லை.

“வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சு அண்ணி..” என்று தேவி தயக்கத்தோடு கூறவும்,

“இதோ நான் வந்திருக்கேன் இல்ல.. போய் எனக்கு தண்ணி எடுத்துட்டு வா.. அப்புறம் எல்லோருக்கும் டீ போடு.. அப்புறம் நாளைக்கு நான் ஒரு பங்க்ஷங்க்கு போகணும்.. என்னோட மெரூன் கலர் பட்டுப்புடவையை நல்லா அயர்ன் செஞ்சு வச்சிடு..” என்று  வேலைகளை அவள் அடுக்கிக் கொண்டே போனாள்.

“அப்பப்போ நீ இந்த வீட்ல வேலை செஞ்சவங்களோட பொண்ணுன்னு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு..” என்று குத்தலாக வேறு பேசினாள்.

“ரூபி..” என்று பாலா ஏதொ கோபமாக சொல்ல வர, புவனா அவனை பார்வையால் அடக்கினார். அதற்குள் தேவியும் ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து ரூபினியிடம் கொடுத்தவள்,  ரூபினி சொன்ன வேலையை செய்ய கிளம்பிவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.