(Reading time: 18 - 36 minutes)

வெளியில் இருந்து வந்ததால் ஃப்ரஷ் ஆகி வருகிறேன் என்று சொல்லி ரூபினி அவளது அறைக்குச் சென்று விட, மதுரிமா தேவியை தேடி சமையலறைக்குச் சென்றாள். புவனா ஏதோ சிந்தனையோடு அமர்ந்திருப்பதை பார்த்த பாலா..

“என்னம்மா.. ரூபி பேசினதை நினைச்சு வருத்தப்பட்றீங்களா? தேவிக்கிட்ட இப்படி நடந்துக்காதன்னு அவக்கிட்ட சொல்லலாம்னு பார்த்தாலும், நீங்க தடுத்திட்றீங்க.. அப்புறம் இப்படி வருத்தப்பட்றீங்க.. ஏன் ம்மா..” என்றுக் கேட்டான்.

“பாலா.. நாம தேவிக்காக ரூபினிக்கிட்ட பேச பேச ரூபினிக்கு தேவி மேல வெறுப்பு கூடிக்கிட்டே தான் போகும்.. கூடவே உங்களுக்குள்ளேயும் பிரச்சனை வரும்.. அதை தேவியும் விரும்பமாட்டா.. கூட தேவி எல்லாம் புரிஞ்சு நடந்துக்கிற பொண்ணுடா.. அதனால ரூபினி பேசறத பெருசா எடுத்துக்க மாட்டா..”

“ஆனாலும் நாம அமைதியா இருந்தா ரூபினி இருக்க இருக்க கொஞ்சம் ஓவரா தான் நடந்துக்கிறா ம்மா..”

“அதுக்கு தான் சீக்கிரமா தேவிக்கு ஒரு வரன் பாருன்னு சொல்றேன்.. கூடவே நம்ம மதுவுக்கும் சீக்கிரம் கல்யாணம் செய்யணும்.. இந்த ஜென்மத்துக்கு உன்னோட சித்தப்பா, சித்திக்கு இப்படி ஒரு எண்ணம் தோணாது.. அதனால நாமதான் மதுவுக்கும் நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும்.. நம்ம பொறுப்புல இருக்க தேவிக்கும் நல்லப்படியா கல்யாணம் செய்து வைக்கணும்.. அதை சொன்னா நீ எங்க புரிஞ்சிக்கிற..”

“எனக்கு புரியாமலாம்மா.. சும்மா கல்யாணம் செஞ்சுக்கன்னு சொன்னா ரெண்டுப்பேரும் வேண்டாம்னு தான் சொல்வாங்க.. ஒரு நல்ல வரனா கொண்டு வந்தா அப்புறம் அவங்களுக்கு மறுக்க தோணாது..

என்னோட ப்ரண்ட் விபா சென்னை வரான் இல்ல.. மும்பைல அவனோட தங்கையோட இருக்க அவங்க அம்மா விபாக்கு சீக்கிரம் கல்யாணம் செய்ய நினைக்கிறாங்க.. எனக்கு ஒரு யோசனை, நம்ம மதுவுக்கு விபாவை பார்த்தா என்ன? அதுமட்டுமில்ல விபாவோட தங்கை புருஷனோட தம்பி அஜய்.. அவன் தான் விபாவோட சென்னை பிஸ்னஸை கவனிச்சிக்கிறான்.. நம்ம தேவிக்கு அவனை வரனா பார்க்கவும் ஒரு யோசனை இருக்கும்மா..”

“நல்லது தான் பாலா.. இருந்தும் எடுத்தோம் கவுத்தோம்னு இல்லாம நல்லா யோசிச்சு முடிவு பண்ணு.. ஏன்னா மது ஒரு நடிகை அவளை அவங்க குடும்பத்துக்கு பிடிக்கணுமில்ல.. அதேபோல தேவியை நம்ம பொண்ணா நினைக்கிறோம்.. ஆனாலும் ரூபினி மாதிரி அவங்க நினைச்சிடக் கூடாதில்ல.. அதனால பொறுமையாகவே இந்த விஷயத்துல முடிவு பண்ணுவோம்..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அம்மா விபா விஷயத்தில் மதுவை நாம நம்பி கொடுக்கலாம்.. ஏன்னா நடிகைகளை பத்தி கீழாக எல்லாம் அவன் பார்க்கமாட்டான். அதேபோல தேவி விஷயத்திலும் விபா சொன்னா அஜய் வீட்ல மறுத்து பேச மாட்டாங்க.. நாமும் தேவியை சும்மாவா அனுப்பப் போறோம்.. அவளுக்கு செய்ய வேண்டியதை சிறப்பா செஞ்சு தான் புகுந்த வீட்டுக்கு அனுப்புவோம்.. அதனால நீங்க ரெண்டுப்பேரை நினைச்சும் கவலைப்பட வேண்டியதில்ல.. முதலில் விபாகரனோட சேர்த்து பிஸ்னஸ் ஆரம்பிப்போம்.. அப்புறம் இந்த கல்யாண விஷயத்தை மெதுவா ஆரம்பிக்கலாம்” என்றதும், புவனாவும் மகிழ்ச்சியோடு தலையசைத்தார்.

அங்கே சமையலறையில் மதுரிமா தேவியிடம் வருத்தத்தோடு பேசினாள்.

“அண்ணி உன்கிட்ட நடந்துக்கிறது எனக்கு பிடிக்கவே இல்லை தேவி.. ஏன் எப்பவும் உன்னை வேலைக்காரி போலவே ட்ரீட் பண்றாங்க.. கொடு நான் டீ போட்றேன்..”

“அய்யோ மது.. இது என்னோட வீடு இல்லையா? இங்க நான் இந்த வேலையெல்லாம் செய்றதுல ஒன்னும் தப்பில்லையே.. அண்ணி சொல்லாட்டியும் இதெல்லாம் நான் எப்போதும் செய்வேன்..”

“அதான் ஏன்னு கேக்கறேன்.. நீ நல்லா படிச்சிருக்க, அண்ணாவே நம்ம கம்பெனில உனக்கு நல்ல போஸ்ட்டா போட்டுக் கொடுக்கிறேன்னு சொல்றாங்க..  இல்லை வேறெங்காவது நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்றேன்னு சொல்றாங்க.. ரெண்டையும் வேணாம்னு சொல்லிட்டு இப்படி வீட்டு வேலை செஞ்சுட்ருந்தா.. அண்ணி இப்படித்தான் பேசுவாங்க.. அது உனக்கு கஷ்டமில்லாம இருக்கலாம்.. ஆனா எங்களுக்கு கஷ்டமா இருக்குல்ல.. இந்த கஷ்டத்துல இருந்து உனக்கு விடுதலை வேணும்னா பேசாம நீ கல்யாணம் செஞ்சுக்கிட்டு இந்த வீட்டை விட்டு போறது தான் பெஸ்ட் தேவி..” என்றதற்கு,

“அதுக்காக இப்போ யாராச்சும் கல்யாணம் செஞ்சுப்பாங்களா? போ மது இப்போ எனக்கு கல்யாணத்துக்கு அவசரம் இல்ல.. மெதுவா செஞ்சுக்கலாம்..” என்று சிரித்துக் கொண்டே கூறினாலும், திருமணம் என்ற வார்த்தை தேவியின் மனதில் கலவரத்தை உண்டாக்கியது.

மையல் தொடரும்..

Episode # 02

Episode # 04

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.