(Reading time: 8 - 16 minutes)

அவர் பேட்சில் முத்துகுமரன் என்ற பித்தளை எழுத்துகள் அவன் பெயரை சொன்னது. சுவாமிஜி மௌனமாக இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

சுவாதி மனமோ இது திட்டமிட்ட கொலை என புலம்பியது. வெளியே சொல்ல முடியவில்லை. ஆதாரம் இல்லை. இன்னும் எத்தனை உயிர் போக போகிறதோ என அச்சப்பட்டாள்.

இறந்துப் போன செல்வன் சுவாதிக்கு நல்ல நண்பன். கடந்த இரண்டு வருடங்களாக இங்கு அவளுக்கு உற்ற துணையாக இருந்தவன். “சுவாதி உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும் . . அதை எப்படியாவது சுவாமிஜிகிட்ட சேர்த்துடு . . எனக்கு எப்ப வேணா எதுவும் நடக்கலாம்” என அவன் கூறிய கடைசி வார்த்தைகள் இன்னமும் காதில் எதிரொலித்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சுவாதி அடுத்து பலியாக போகும் நபர் யாரென தெரியாவிட்டாலும் . . ஒரு யூகம் இருந்தது. ஆனால்  எப்படி காப்பாற்றுவது என்றுதான் தெரியவில்லை. தவித்துப் போனாள்.. காப்பாற்றியே ஆக வேண்டும் என மனம் துடித்தது.

அப்பாவியாய் இறந்த செல்வனுக்கு அஞ்சலி செலுத்தி அவன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அவன் உறவினர் என்ற வகையில் பெற்றோர் வந்திருந்தனர். அழுது அழுது அவர்கள் கண்ணீர் வற்றிய நிலையில் சடலத்துடன் சென்றுவிட்டனர்.

இத்தனையும் கவனித்துக் கொண்டிருந்த இரண்டு நபர். அடுத்த பலிக்கான நேரத்தை குறிக்க தொடங்கினர்.  இனி தங்கள் வேலையை சுலபமாக செய்யலாம் என்ற எண்ணத்தில் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

செல்வன் இறப்பிற்கு காரணம் விஷபோஜனம் என்பதை எப்படி நிரூபிப்பது என்ற குழப்பத்தில் சிலவற்றை கவனிக்க தவறினாள் சுவாதி.

தொடரும் . .

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.