(Reading time: 13 - 26 minutes)

அவளை யாரும் அதிகம் மார்க்கோ, பர்ஸ்ட் ரேங்க் என்று எல்லாம் எதிர்பார்க்காததால் அவள் பாஸ் பண்ணுவதே போதும் என்று இருந்தனர். அதே போல் பள்ளியிலும் அவள் பாஸ் செய்து விடுவதால் அதற்கு மேல் அவளை கண்டு கொள்ளவில்லை.

அப்போதும் யாராவது சீண்டினால், இதே போல் தன் டெட்டியோடு ஊஞ்சலில் உட்கார்ந்து விடுவாள். அதற்கு பின் சபரி போன் போட்டு ஷ்யாம் வர சொல்ல, அவனிடம் நடந்ததை சொன்ன பின் தான் அமைதியாவாள்.

இத்தனை நேரம் அவளின் சிறு வயது செயல்களை எண்ணிக் கொண்டு இருந்த ஷ்யாம் , இப்போது மித்ராவைப் பார்க்க, இன்னும் அந்த வின்னியோடு தான் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தாள். இதற்கு மேலும் பொறுக்க முடியாதவன், தன் வேலையை மூடி விட்டு எழுந்தான்.

அவன் இத்தனை பொங்க வேண்டிய அவசியமே இல்லை. அவள் வின்னியோடு நடத்திய பேச்சு வார்த்தையே ஷ்யாமைப் பற்றி தான்

“ஹேய். வின்னி. இந்த அத்து ரொம்ப தான் பண்றாங்க பாரு. நான் வந்துருக்கேன். என்னை விட அவங்களுக்கு வேலை முக்கியமாம். அவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் சொல்லு” என்று அதனிடம் பேசிக் கொண்டே யோசித்தவள்

“ஐடியா. அவங்க வாட்ச்லே டைம் மாத்தி வச்சிடலாம். அவங்க கர்ண கவச குண்டலம் மாதிரி வாட்சை பிரியவே மாட்டாங்களே. அதில் டைம் மாற்றி வைத்து விடலாம்” என்று பேசிக் கொண்டு இருக்கும் போது தான் ஷ்யாம் வந்தான்.

நேராக மித்ராவிடம் இருந்த வின்னியை வாங்கி

“மித்ரா, நான் என்ன சொல்லிருக்கேன்? நான் இருக்கும் போது வின்னிய எடுக்கக் கூடாது சொல்லிருக்கேனே”

“நீங்க தான் வேலையா இருக்கேன் . போ சொன்னீங்க” என்று அவளும் மூஞ்சைத் திருப்பிக் கொண்டு சொல்லவும்

“ஓகே.ஓகே சாரி.. நான் அப்படி சொல்லிருக்கக் கூடாது.”

“நான் என்ன சொல்ல வந்தேன்னு கேட்டுட்டு வேலைய பார்க்கலாம்ல?

“ஆமாம்.. சரி இப்போ சொல்லு. என்ன விஷயம்?

“நீங்க முதலில் சொல்லுங்க. ஏன் எங்கிட்ட அப்போவே கோபமா பேசினீங்க?

ஒரு முறை தயங்கியவன் “இன்னைக்கு சபரி அத்தை போன் பண்ணினாங்க. அவங்க கிட்டே நீ அழுதியா? “

“ஆமாம். ஏன் என்ன சொன்னாங்க?

“உனக்கு ஆபீஸ்லே ஏதாவது பிரச்சினைனா அம்மா கிட்டேயாவது, இல்லை என்கிட்டயாவது சொல்லிருக்கலாம்லே? அதை விட்டுட்டு எங்கியோ இருக்கிறா அத்தை கிட்டே சொல்வியா? நாங்க அப்படியா உன்கிட்ட நடந்துக்கிறோம்? இல்லை நாங்க உனக்கு புதுசா? என் மனைவி அப்படின்றதுக்கு முன்னாடி நீ எங்கப்பாவிற்கு தங்கை பொண்ணு சரியா?

“யாரு சொன்னா நான் அத்தை கிட்டே சொல்லலைன்னு. அவங்க தான் என்னை வீட்டிற்கு கூட்டிட்டு வந்தாங்க”

இப்போது ஷ்யாம் முழித்தான்.

“பிறகு ஏன் உங்கம்மா அப்படி சொன்னாங்க?

“எங்கம்மா யாரு உங்களுக்கு? என்று அவள் கோபமாக கேட்கவும்,

“அம்மா தாயே . எங்க அத்தை தான். அவங்க ஏன் நீ வேலைக்கு போகலைன்னு அவங்ககிட்டே அழுததா சொன்னாங்க ? நீ அழுதியா?

“ஆமாம் நான் அழுதேன்”

இப்போ ஷ்யாம் முறைத்தான்.

“ம்ம்.. அத்தான். என்னை முறைக்காதீங்க. நான் ஏன் அழுதேன்னா, என்னாலே ஒரு நாளே தாக்கு பிடிக்க முடியலையே. எங்கம்மா, உங்கம்மா எல்லாம் எத்தனை வருஷமா பிசினஸ் பார்க்கறாங்க. எவ்ளோ டென்ஷன் இருக்கும். அது புரியாம நானும் அடம் பிடிச்சு அவங்களைக் கஷ்டபடுத்தி இருக்கேனேன்னு நினைச்சு அழுதேன்”

அவளின் விளக்கத்தில் முகம் தெளிந்து, அவள் அருகில் அமர்ந்தான். அவள் கையை தன் பிடியில் வைத்துக் கொண்டு

“சாரி டா. மிதுமா.. அத்தை போன் செய்து உனக்காக பேசவும் எனக்கு கோபம் வந்துடுச்சு. நீ எங்கிட்ட முதலில் சொல்லிருக்கலாம்லே.” என்று கேட்டான்.

“நான் உங்க போன் தான் முதலில் போட்டேன். உங்க பி.ஏ. நீங்க மீட்டிங்லே இருக்கீங்க சொன்னாங்க. அப்புறம் தான் நான் அம்மா கிட்டே பேசினேன்.”

என்னது என்று வேகமாக மொபைல் செக் செய்ய, அவள் நம்பர் இருந்தது. இவன் மீட்டிங் போது போனை பி.ஏ.விடம் கொடுத்து கால் அட்டென் பண்ண சொல்லியிருந்தான். இவன் வெளியில் வரும்போது சரியாக அத்தை போன் செய்யவே அவனே எடுத்துப் பேசினான்.

அதனால் மித்ரா போன் செய்ததை அவன் கவனிக்கவில்லை. அவன் செகேரெடரி ஏதோ சொல்ல வந்ததையும் கேட்கவில்லை. இப்போது மித்ராவிடம் அசடு வழிந்து கொண்டு,

“சாரி. சாரி மிது டார்லிங். அத்தான் அதை கவனிக்கவில்லை. எப்போவும் உனக்கு கோபம்னா என்னை தானே கூப்பிடுவா? இன்னைக்கு நீ அப்படி கூப்பிடலையேன்னு தான் கோவம். ப்ளீஸ் டா. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.