(Reading time: 17 - 34 minutes)

னைவரும் சென்ற பின் அஜய்,சுஜனா மட்டுமே அங்கு இருந்தனர். “நீங்க எதுக்கு இன்னும் கிளம்பாம இருக்கீங்க?..” சுஜனா அஜயை பார்த்துக் கேட்க,

“அதே கேள்வியை நானும் கேக்கலாம்..” என்று அவன் பதில் கூற, அவள் புன்னகைத்தாள்.

“சரி சொல்லு எல்லாம் ஓகே தானே, ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்ததை பார்த்தா எதுவோ சரியில்லைன்னு தோனுது.. உங்க ரெண்டுப்பேருக்கும் பிடிச்சு தானே இந்த கல்யாணம் நடக்குது..” என்ற அவனது அக்கறையான கேள்வியில் அவளது கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றது.. கல்யாணமே இப்போதைக்கு எனக்கு பிடிக்கல.. இதுல சாத்விக்கை பிடிச்சிருக்கான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல.. ஆனா அப்பா இதெல்லாம் காது கொடுத்து கேட்க மாட்டாரு.. சாத்விக்கோட தான் என் கல்யாணம்னு முடிவு செஞ்சுட்டாரு.. அதை நானும் ஏத்துக்கிட்டேன்..

அதேபோல சாத்விக்கிற்கு என்னை பிடிச்சிருக்கான்னும் எனக்கு தெரியல.. ஒருமுறை போன் பண்ணப்பவும் சரி, இப்பவும் சரி அவர் எங்கிட்ட சரியா பேசவே இல்லை.. இதை நான் எப்படி எடுத்துக்கிறதுன்னும் புரியல.. அப்பாக்கிட்ட சொன்னா உன்னை சாத்விக்கிற்கு பிடிக்கிற மாதிரி நடந்துக்கோன்னு சொல்வாரு..” என்று பேசி முடிக்கும்போதே அவள் கண்களில் இருந்து  கண்ணீர் வழிந்து ஓடியது.

“எதுக்கு இப்போ அழற.. இப்போ உடனே கல்யாணம் நடந்திடலையே, இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.. இன்னொரு முறை சாத்விக்கிட்ட பொறுமையா பேசு.. அவர் மனசுல இருக்கறத தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு..  இப்போ கண்ணை தொடைச்சிக்கோ.. எல்லாம் பார்த்தா என்ன நினைப்பாங்க..” என்றவன்,

“உன்னோட போனை கொடு..” என்றுக் கேட்டான். அவள் அதை கொடுக்கவும், அதில் அவனது எண்ணை அழுத்தி அவனது அலைபேசிக்கு ஒரு அழைப்புக் கொடுத்து மணி அடித்ததும் அதை துண்டித்தவன், பின் அவளிடம் அவள் அலைபேசியை கொடுத்தான்.

“இதுல இருந்து என்னொட நம்பர்க்கு மிஸ்டு கால் கொடுத்திருக்கேன்.. இங்க எதுவும் பேச வேண்டாம்.. நைட் நேரம் நீ சீக்கிரம் வீட்டுக்கு போ.. அப்புறம் மெதுவா நான் உனக்கு பேசறேன்.. முடிஞ்சா மீட் பண்ணுவோம்.. இப்போ கிளம்பலாமா?’ என்று சொல்லவும், அவளும் சரியென்று தலையாட்டினாள்.

அதன்பின் வெளியே வந்து அவள் தனது காரில் ஏறியதும், “வீட்டுக்கு போனதும் ஒரு மெசேஜ் பண்ணு..” என்றான். அதற்கு சரியென்று அவன் தலையசைத்து பின் ஓட்டுனர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பும் வரை நின்றுருந்தவன், அதன்பின்பு தான் அவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவள் இங்கு வந்தது சாத்விக்கிற்காக, ஆனால் ஒரு பேச்சுக்கு அவளது பத்திரம் பற்றி அறிந்துவிட்டு அவன் சென்றதற்கும், இப்போது அவள் செல்லும் வரை பார்த்து கொண்டு நின்றிருந்த அஜய்க்கு அவள் மேல் இருக்கும் அக்கறையை நினைக்கும் போது மனதிற்கு இதமாக இருந்தது. தனக்கு தானே புன்னகைத்து கொண்டாள். ஆனாலும் தன் மனம் போகும் பாதையை நினைத்து கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தது. அதன் பின்விளைவுகள் நல்லதாக இருக்குமா? என்பதும் சந்தேகம் தான் என்று நினைத்தவளின் புன்னகை நொடியில் மறைந்து போனது.

ண்பர்களுக்குள் பேசிக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கும், ஆனால் கடற்கரைக்கு வந்ததிலிருந்து பாலா மட்டுமே பேசிக் கொண்டிருக்க, விபா அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். முன்போல் அல்லாமல் விபாகரன் நிறையவே மாறிப் போயிருக்கிறான் என்பது பாலாவுக்கு நன்றாகவே புரிந்தது.

“ஹேய் மச்சான் கொஞ்ச நாள் சென்னையில் தானடா இருக்கப் போற, ஒருநாள் வீட்டுக்கு வாயேண்டா..”

“அதான் இங்க பார்த்துட்டோம்ல, இப்போ ஒன்னா பிஸ்னஸ் பண்ணப் போறோம் அப்போ அடிக்கடி பார்க்க தான போறோம்.. அப்புறம் என்ன? என்னைப் பத்தி தெரிஞ்சும் வீட்டுக்கு கூப்பிட்ற பத்தியா..”

“இப்போ தாண்டா நீ நிறையவே மாறிப் போயிட்ட.. காலேஜ் படிக்கும் போது எங்க வீட்டுக்கு ரெண்டு முறை வந்திருக்க.. இப்போ கூட அம்மாக்கிட்ட உன்னைப்பத்தி பேசினா, உன்னோட பேர் அவங்களுக்கு ஞாபகம் இருக்கே தவிர, உன்னை மறந்துட்டாங்கடா.. ஒருநாள் வீட்டுக்கு கூட்டிட்டு வாயேன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்கடா..”

“கண்டிப்பா அம்மாவை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சா பார்க்கிறேன் டா.. ஆனா வீட்டுக்கெல்லாம்  கூப்பிடாதே..”

“எவ்வளவு வற்புறுத்தி கூப்பிட்டாலும் வரமாட்டேன்னு தெரியும்.. ஆனாலும் ஏண்டா இப்படி இருக்க.. எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு ஓடிக்கிடே இருக்க.. ஒரு இடத்துல நிலையா இருக்கியா? கல்யாண வயசை தாண்டியாச்சு.. லாஸ்ட் டைம் அம்மாவை பார்த்தப்ப, நீயாவது அவனுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா? அவனுக்கும் நல்லபடியா குடும்ப வாழ்க்கை அமையணும்னு நான் எதிர்பார்க்கிரது தப்பா.. விபு அதை புரிஞ்சிக்கிவே மாட்டேன்ங்கிறான்.. ஒரு ப்ரண்டா அவனுக்கு புரிய வைப்பான்னு சொன்னாங்க..”

“அவங்களுக்கு வேற என்னடா வேலை.. எனக்கு கல்யாணமே வேண்டாம்.. எனக்கு இப்படி இருக்கிறது தான் பிடிச்சு  இருக்கு..”

“இங்கப்பாரு எதுக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்ற.. இப்போ இந்த வாழ்க்கை பிடிச்ச மாதிரி தான் தெரியும்.. கல்யாணம் செஞ்சுக்கோ, அன்பான மனைவி, அவக்கிட்ட இருந்து கிடைக்கிற காதல் எல்லாம் வழ்க்கைக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கும்.. அப்புறம் அந்த லைஃப் ரொம்ப பிடிக்கும்.. அதனால சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோடா..” என்றதும் அவன் கலகலவென சிரித்தான்.

“எதற்கு இப்போது இப்படி சிரிக்கிறான்?” என்று பாலா புரியாமல் பார்க்க,

“வாழ்க்கைல இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்க்காக ஏங்கி அதுக்கு இப்போ ஒரு முற்றுப்புள்ளி வச்சாச்சு.. நான் இப்படியே இருந்துட்டு போறேன்.. இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு.. ப்ளீஸ் இதைப்பத்தி இனி பேச வேண்டாம்..” எனவும், என்னவோ விபாகரனின் வாழ்க்கையில் நடந்துருக்கிறது என்பது மட்டும் பாலாவுக்கு புரிந்தது.

“சரி இந்த டாபிக்கை விடுவோம்.. நீ வீட்டுக்கு வரலன்னா நான் வந்துட்டு போறேன்.. அதுவும் குடும்பத்தை கூட்டிட்டு வரேன்.. அம்மாவும் நாங்கல்லாம் வந்தா சந்தோஷப்படுவாங்க..”

“ஹே நீ வர வேண்டாம்னா சொல்லுவேன்.. கண்டிப்பா வாங்க, எப்போ வரேன்னு முன்னமே சொன்னா நான் அதுக்கேத்த போல ஃப்ரீ ஆகிடுவேன்..”

“கண்டிப்பா வீட்ல பேசிட்டு சொல்றேண்டா..” எனவும், இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.