(Reading time: 17 - 34 minutes)

சாத்விக்கோடு தோழமையோடு பழகியதால், அவரது திருமண செய்தியைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.. சாத்விக்கின் திருமணத்தை நானும் மிக ஆவலோடு எதிர்ப்பர்க்கிறேன்.. சாத்விக்கிற்கும் அவர் மணக்க இருக்கும் பெண்ணுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்

“இது ஓகே வா மது..” என்று மதுரிமா சொன்ன விஷயத்தை எழுதிய தேவி, அதை மதுவிடம் வாசித்துக் காட்டி கேட்டாள்.

“ஓகே சூப்பர், இதையே ப்ரஸ்க்கு கொடுத்திடுவோம்..” என்று மதுரிமாவும் அதை ஒருமுறை வாங்கி வாசித்து பார்க்க,

“ஹேய் இன்னும் ரெண்டுப்பேரும் தூங்காம என்ன பண்றீங்க?” என்று இருவரையும் கேட்டப்படி பாலா வீட்டிற்குள் வந்தான்.

“ரெண்டுப்பேரும் ஒன்னா சேர்ந்தா என்னைக்கு சீக்கிரம் தூங்கியிருக்காங்க பாலா..” என்று புவனாவும் சொல்லிக் கொண்டே அங்கு வந்து அமர்ந்தார்.

“நீங்களும் இன்னும் தூங்கலையா?” என்று அவன் கேட்க,

“புக் படிச்சிட்டு இருந்தேன் ப்பா” என்று பதில் கூறினார்.

“அண்ணா சாத்விக் மேரேஜ் குறித்து நான் ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டா தான் எங்க ரெண்டுப்பேரையும் சேர்த்து பேசும் காசிப்ல்லாம் அடங்கும்.. அதான் ப்ரஸ்க்கு என்ன நியூஸ் கொடுக்கறதுன்னு நாங்க ரெண்டுப்பேரும் பேசிட்டு இருந்தோம்..” என்று மதுரிமா தேவி எழுதியதை பாலாவிடம் காண்பித்தாள்.

“ம்ம் இந்த கல்யாணம் நடக்குமான்னே தெரியல.. பொறுமையா பார்த்துக்கிட்டு நியூஸ் கொடுப்போம்..” என்று பாலா சொல்லவும், அங்கிருந்த மூவரும் திகைப்பாக பார்க்க,

“என்னாச்சு பாலா? ஏன் அப்படி சொல்றீங்க?” என்றப்படியே ரூபினியும் அங்கு வந்தாள்.

“நீயும் இன்னும் தூங்கலையா?” என்ற கேள்வியை அவளைப் பார்த்தும் கேட்டான்.

ரூபினியை பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த தேவி, புவனாவின் அருகில் சென்று நின்றுக் கொண்டாள். அவள் அறைக்குச் சென்றுவிடலாமா? என்று கூட நினைத்தாள். ஆனால் பாலா சொன்னதை முழுமையாக கேட்கவே அங்கே சிறிது நேரம் நின்றிருக்க நினைத்தாள்.

சுஜனா பற்றிய விஷயம் என்பதால் ரூபினியும் அதையெல்லாம் கண்டுக் கொள்ளவில்லை. பாலா விமான நிலையத்தில் நடந்ததை கூறிக் கொண்டிருக்க அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

“என்ன பாலா சொல்றீங்க? அப்போ சாத்விக்கிற்கு சுஜனாவை கல்யாணம் செஞ்சுக்கறதுல இஷ்டம் இல்லையா?” ரூபினி கேட்க

“அங்க நடந்ததையெல்லாம் பார்த்தா அப்படித்தான் தெரியுது..” என்று அவன் பதில் கூறினான்.

“அப்போ நியூஸ் பேப்பர்ல வந்த நியூஸ் சாத்விக்கிற்கு இஷ்டம் இல்லாமலா போட்ருப்பாங்க..” என்று மதுரிமா கேட்டாள்.

“தெரியல மது..” என்றவன்,

‘ரூபி நாளைக்கு மெதுவா உன்னோட ப்ரண்ட்க்கிட்ட இந்த விஷயமா பேசு, ப்ரண்ட்டா உன்கிட்ட அவங்க இதை ஷேர் செய்யலாமில்ல..” என்று சொல்லவும்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சரிங்க.. இருந்தாலும் அவ கொஞ்சம் மூடி டைப், வெளிப்படையா எதுவும் ரொம்ப பேச மாட்டா.. இருந்தும் ட்ரை பண்றேன்..” என்றாள்.

“சரி பாலா.. உன்னோட ப்ரண்ட் விபாகரன் வந்தாச்சா, இவ்வளவு நேரம் அவன் கூட தான் இருந்தியா..” என்று புவனா கேட்கவும்,

“ஆமாம்மா..” என்றவன்,

“அம்மா சண்டே நாம பேமிலியா அவன் வீட்டுக்கு வரோம்னு சொல்லியிருக்கேன்.. விபா அம்மாவும் தங்கச்சியும் இப்போ சென்னையில் தான் இருக்காங்க.. அவங்களை பார்த்தது போல இருக்கும்.. என்னம்மா சொல்றீங்க?” என்றுக் கேட்டான்.

அவன் எதற்காக அங்கே செல்ல நினைக்கிறான் என்று புரிந்துக் கொண்ட புவனா சரியென்றார். ரூபினியும் வருவதாக தலையசைத்தாள்.

மதுரிமாவிடம் கேட்க, “எனக்கு மண்டேக்கு மேல தான் பெங்களூரில் அவுட்டோர் ஷூட்டிங் இருக்கு, அதனால ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..” என்றாள்.

அடுத்து தேவியிடம் திரும்பியவன், “நீயும் சண்டே ரெடியாக இரு தேவி..” என்றதும்,முதலில் என்ன சொல்வதென்று விழித்தவள், பின் சரியென்று தலையசைத்தாள்.

“சரி எல்லாம் சீக்கிரம் போய் படுங்க..” என்று புவனா சொன்னதும், அவரவர் அறைக்கு அனைவரும் செல்ல,

தேவி அவள் அறைக்குள் நுழையும் போது அவள் பின்னே வந்த ரூபினி, “நீ சண்டே எங்கக் கூட வரக் கூடாது.. அங்க போய் உன்னை தன்னோட தங்கச்சின்னு சொல்றதுல பாலாவுக்கு பெருமையா இருக்கலாம்.. ஆனா விபாகரன் போல பெரிய ஆளுங்களெல்லாம் உன்னைப் பத்தி தெரிஞ்சா, வேலைக்காரங்கெல்லாம் அவங்களுக்கு சரிசமமா நினைக்க மாட்டாங்க.. இது பாலாவுக்கு புரியாது.. நீ தான் புரிஞ்சு நடந்துக்கணும், அதனால நாசுக்கா வரமாட்டேன்னு நீயே சொல்லிடு..” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

ரூபினி தேவியின் அறையில் இருந்து வெளிவந்ததை பார்த்த புவனா, தேவியிடம் வந்து ரூபினி என்ன சொன்னாள்? என்று விசாரிக்க, ஏதேதோ சொல்லி மழுப்பிய தேவி புவனாவை சென்று உறங்கச் சொன்னாள். புவனாவும் சந்தேகப் பார்வையோடு அப்போதைக்குச் சென்றுவிட்டார்.

எப்போதும் ரூபினியின் பேச்சு தன்னை வருத்தும்படியாக இருக்கும், ஆனால் இன்று பாலா சொன்னது போல் விபாகரனின் வீட்டுக்கு தான் வரப் போவதில்லை என்று எப்படி சொல்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்க, அந்த நேரம் ரூபினி வந்து பேசியதும், அதை புவனாம்மா பார்த்ததுமே போதும்..

ஞாயிற்றுக்கிழமை காலை தான் வரப் போவதில்லை என்பதை சொல்லும் போது புவனாம்மா அதை புரிந்துக் கொள்வார். அதுமட்டுமில்லாமல் ரூபினி அண்ணி தான் இதற்கு காரணம் என்பது தெரியும் அதனால் அதை பாலாண்ணா பெரிதாக்காமலும் பார்த்துக் கொள்வார். என்ற நம்பிக்கையோடு மனதில் நிம்மதியோடு அவள் உறங்கச் சென்றாள்.

மையல் தொடரும்..

Episode # 05

Episode # 07

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.